search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள் திருட்டு போவதை தடுக்க தென்னை மரத்தில் மின்இணைப்பு கொடுத்தேன்-கைதான விவசாயி வாக்குமூலம்
    X

    கள் திருட்டு போவதை தடுக்க தென்னை மரத்தில் மின்இணைப்பு கொடுத்தேன்-கைதான விவசாயி வாக்குமூலம்

    • சுஜித் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
    • சுஜித் கஞ்சம்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ருத்திராயம்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித் (வயது 22). பெயிண்டர். இவருக்கும் மகேஷ் என்ற பெண்ணுக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    கடந்த 20-ந் தேதி இவர் தனது மனைவியிடம் கஞ்சம்பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது சுஜித் கஞ்சம்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சுஜித்தின் உடலை ஆய்வு செய்த போது அவர் மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து அன்னூர் போலீசார் சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுஜித் திருட்டுத்தனமாக கள் எடுத்து குடிக்க மரத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் விவசாயியான பனைமரத்து ேதாட்டத்தை சேர்ந்த துரை (59), ஊத்துபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி (45), ருத்திராயம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் (49), கிழக்குவலவை சேர்ந்த பழனிசாமி (57), தாசம்பாளையத்தை சேர்ந்த வெங்கிட்டான் (50), கஞ்சம்பள்ளியை சேர்ந்த முத்துக்குமார் (50) ஆகியோரை கைது செய்தனர்.

    சுஜித் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து முக்கிய குற்றவாளியான துரையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- நான் விவசாய தொழில் செய்து வருகிறேன். ஆனால் அதில் எனக்கு போதிய வருமானம் இல்லை. இதனையடுத்து எனது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் கள் எடுத்து விற்பனை செய்யலாம் என முடிவு செய்தேன். அதன்படி 110 தென்னை மரத்தில் இருந்து கள் எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தேன். இரவு நேரத்தில் நான் வீட்டிற்கு சென்ற போது தென்னை மரத்தில் இருந்து கள் திருட்டு போனது. இதனை தடுப்பதற்காக 110 தென்னை மரங்களிலும் இரும்பு கம்பியால் சுற்றி இரவு நேரத்தில் மட்டும் அதில் மின்சாரம் செலுத்தி வந்தேன். இதனால் கள் திருட்டு குறைந்தது. கடந்த 21-ந் தேதி ஏற்கனவே போதையில் இருந்த சுஜித் கள் குடிப்பதற்காக எனது ேதாட்டத்துக்கு வந்துள்ளார். நான் விற்பனையை முடித்து விட்டு சென்று விட்டேன். இதனையடுத்து அவர் தென்னை மரத்தில் மின் இணைப்பு இருப்பது தெரியாமல் கள் எடுப்பதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி இறந்தார். மறுநாள் காலையில் ேதாட்டத்துக்கு சென்ற நான் அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பின்னர் கள் குடிக்க வந்த 5 பேருடன் சேர்ந்து சுஜித்தின் உடலை சிறிது தூரம் கொண்டு சென்று போட்டு விட்டு வந்தோம்.

    சட்டவிரோதமாக மின் இைணப்பு கொடுத்து இருந்தால் விசாரணை நடத்தி போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் தென்னை மரங்களில் சுற்றி இருந்த இரும்பு கம்பிகளை அகற்றினேன். பின்னர் ஏதும் தெரியாதது போல இருந்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார். கைது செய்யப்பட்ட 6 பேர் மீது கொலைக்கு நிகரான உயிரிழப்பை ஏற்படுத்துதல், ஆதாரங்களை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×