அன்னூர் அருகே வீட்டில் பணம் கொள்ளை

வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள இளைய மகன் வீட்டிற்கு தூங்க சென்றார். பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
அன்னூர் அருகே வீட்டில் பணம் கொள்ளை
Published on

கோவை :

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கூத்தாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மனைவி ராஜியா பேகம் (வயது 55). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள இளைய மகன் வீட்டிற்கு தூங்க சென்றார். அப்போது ராஜியா பேகம் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மறுநாள் வீட்டிற்கு திரும்பிய அவர் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com