அன்னூரில் குடிபோதையில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரை மிரட்டிய இளம்பெண்

இளம்பெண் தனது கணவர் வீட்டிற்கு வருவதில்லை என புகார் கூறினார்.இளம்ெபண் குடிபோதையில் கணவர் மீது புகார் எடுக்க சொல்லி போலீசாரை மிரட்டியதும் தெரியவந்தது
அன்னூரில் குடிபோதையில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரை மிரட்டிய இளம்பெண்
Published on

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாய்தோட்டத்தை சேர்ந்த 38 வயது இளம்பெண்.

இவர் நேற்று அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்த போலீசாரிடம் இளம்பெண் தன்னை தனது கணவர் ஒருவருடத்திற்கு முன்பு திருமணம் செய்ததாகவும், தற்போது அவர் வீட்டிற்கு வருவதில்லை என புகார் கூறினார்.மேலும், கணவர் தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும், நான் ஏற்கனவே சப்-இன்ஸ்பெ க்டராக பணியாற்றியுள்ளேன். எனது குடும்பத்தினர் போலீஸ் சூப்பிரண்டாகவும், கலெக்டராகவும் பணியாற்றி வருகின்றனர்.

எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் உங்களை வேலையை விட்டு துரத்தி விடுவேன் என்று கூறினார்.

இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இளம்பெண் குடிபோதையில் போலீஸ் நிலையத்திற்கு வந்தது தெரியவந்தது. மேலும் குடிபோதையில் கணவர் மீது புகார் எடுக்க சொல்லி போலீசாரை மிரட்டியதும் தெரியவந்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் இளம்பெண்ணை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கும்படி அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com