search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் மையத்தில் 40 நாட்களில் ரூ.5 கோடிக்கு கொப்பரை கொள்முதல்
    X

    அன்னூர் மையத்தில் 40 நாட்களில் ரூ.5 கோடிக்கு கொப்பரை கொள்முதல்

    • மையம் அமைக்க பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்
    • 4 கோடியே 96 லட்சத்து 14 ஆயிரத்து 150 ரூபாய் வர்த்தகம் நடைபெற உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள், அன்னூர் தாலுகாவில் கொப்பரை கொள்முதல் மையம் அமைக்க பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று தமிழக அரசு அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை கொள்முதல் மையம் அமைக்க கடந்த மாதம் 3-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    இதையடுத்து ஜூன் 5-ந் தேதி முதல் இங்கு கொப்பரை கொள்முதல் தொடங்கியது. அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், சூலூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை விற்பனை செய்தனர்.

    இந்த மையத்தில் 357 விவசாயிகள் 4,68,500 கிலோ கொப்பரையை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் 4 கோடியே 96 லட்சத்து 14 ஆயிரத்து 150 ரூபாய் வர்த்தகம் நடைபெற உள்ளது.

    வெளிச்சந்தையில் ஒரு கிலோ கொப்பரை ரூ.80க்கு மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால் அரசு ஒரு கிலோ கொப்பரை 105 ரூபாய் 90 காசுக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.தேங்காய் கொப்பரை கொள்முதலை தமிழக அரசு மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×