அன்னூர் அருகே செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 19 பவுன் தங்க நகைகள் கொள்ளை

செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
அன்னூர் அருகே  செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 19 பவுன் தங்க நகைகள் கொள்ளை
Published on

கோவை

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்ட ன்புதூரை சேர்ந்தவர் மாமணி (வயது 32).

இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாமணி தனது வீட்டை பூட்டி விட்டு சீரியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு தூக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுைழந்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், செயின், கம்மல், மோதிரம், வளையல் உள்பட 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் மாமணியின், வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தின் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் தனது வீட்டிற்கு விரைந்து சென்றார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து மாமணி அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதனை வைத்து அன்னூர் போலீசார் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com