search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "achievement"

    • அண்ணா பல்கலைக்கழக கபடி போட்டி நடந்தது.
    • கிட் அண்ட் கிம் கல்லூரி அணி சாதனை படைத்துள்ளனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள மானகிரி கிட் அண்ட கிம் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16-வது மண்டலத்திற்கான ஆண்கள் கபடி போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து 21 அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடந்த போட்டி களில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமராவதிபுதூர் ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி அணியும், புதுக்கோட்டை மதர் தெரசா கல்லூரி அணியும் விளை யாடின. இதில் 15 புள்ளி வித்தி யாசத்தில் வெற்றி பெற்று ராஜ ராஜன் கல்லூரி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    2-ம் அரையிறுதி ஆட்டத்தில் மானகிரி கிட் அண்ட் கிம் பொறியியல் கல்லூரி அணியும், செந்தூரான் அணியும் விளையாடி கிட் அண்ட் கிம் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பரபரப்பான இறுதி போட்டியில் ராஜ ராஜன் கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.

    இதில் கிட் அண்ட் கிம் கல்லூரி அணியும் சிறப்பாக விளையாடி பாராட்டை பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கிட் அண்ட் கிம் கல்லூரி தலைவர் அய்யப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இதில் கல்லூரியின் இயக்குனர் ஜெயராஜா, முதல்வர் பார்த்தசாரதி, உடற்கல்வி இயக்குனர் பழனியப்பன், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா சைக்கிள் போட்டி சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.
    • முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

    திருப்பூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

    13 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தீக்ஷனா, விஜயலட்சுமி, ஜெய்ஸ்ரீராம் அகாடமி மாணவி பொன்ரிகாஷினி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பெரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தையும், சன்மதி 2-வது இடத்தையும், அவினாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் அகாடமி பள்ளி மாணவி நேகா 3-வது இடத்தையும் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் அஞ்சலி சில்வி, மதுமிதா, ராகவர்த்தினி ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர்.

    மாணவர்கள் பிரிவில் 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திருப்பூர் சின்னச்சாமியம்மாள் மாநகராட்சி பள்ளி மாணவர் சாம் பிரசாத் முதலிடத்தையும், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் விஸ்வா 2-வது இடத்தையும், ஜீவானந்தம் 3-வது இடத்தையும் பிடித்தனர். 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் காங்கயம் எஸ்.ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முகுந்தன் முதலிடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரிஷ் 3-வது இடத்தையும் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளி மாணவர் மணிபிரசாத் முதலிடத்தையும், பெருமாநல்லூர் அரசு பள்ளி மாணவர் கோடீஸ்வரன் 2-வது இடத்தையும், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர் முகமது இப்ராகிம் வாசிக் 3-வது இடத்தையும் வென்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், உடற்கல்வி இயக்குனர் ராஜாராம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட கபடி நடுவர் குழு தலைவர் முத்துசாமி, நேரு யுவகேந்திரா ராஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

    முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நேரத்தில் நான்கு பிரசவங்கள் பார்த்து மருத்துவர்கள் சாதனை
    • டாக்டர் பூபதி ராஜன் தலைமை யிலான மருத்துவக்குழு வினர் பிரசவங்கள் பார்த்தனர்.

    பொன்னமராவதி 

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தில் திருக்களம்பூரை சேர்ந்த ஷகிலாபானு, கருப்புக்குடிப்பட்டி சுகந்தி, வார்பட்டு பகுதியை சேர்ந்த அழகி, கருப்பர்கோயில்ப ட்டியை சேர்ந்த புவனே ஸ்வரி ஆகியோர் பிரசவத்தி ற்காக ஒரே நேரத்தில் அனு மதிக் கப்பட்டிருந்தனர்.

    இவர்களுக்கு டாக்டர் பூபதி ராஜன் தலைமை யிலான மருத்துவக்குழு வினர் பிரசவங்கள் பார்த்தனர்.

    அப்போது 3 பேருக்கு ஆண்குழந்தையும் ஒரு வருக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இதில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    ஒரே நேரத்தில் 4 பிரசவ ங்களை பார்த்து சாதனை படைத்த மருத்துவக் குழுவி ற்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவி த்தனர்.

    ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் சாத னையை அறிந்த மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் ராம்கணேஷ் மருத்து வர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

    அதேபோன்று வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஒரே நேரத்தில் நான்கு பிரசவங்களை பார்த்த மருத்துவர்களை பாராட்டியும்.குழந்தைகளை ஈண்றெடுத்த தாய்மார்க ளுக்கு டாக்டர் அருள்மணி நாகராஜன் குழந்தைகள் நல பரிசு பெட்டகங்களை வழ ங்கி வாழ்த்துகளை தெரிவி த்தார்.

    இந்நிகழ்ச்சியில் டாக்டர் பூபதிராஜன், பிறப்பு பதி வாளர் உத்தமன், மருந்தா ளுநர் அன்பரசி, செவிலி யர்கள் சீதா, அம்பிகா, சூர்யா, ஆய்வக சீமா, சுகா தார ஆய்வாளர் பிரேம்கு மார், மருத்துவமனை உதவியாளர் செல்வி உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.

    • போட்டியில் ஸ்ரீ கலைவாணி பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக பெற்றனர்.
    • மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம், 2-ம் இடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றன. போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 88 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவர்களில் மிக மூத்தோர் பிரிவில் பிரகாஷ் 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.

    மாவட்ட அளவிலான இந்த போட்டியில் முதலிடம், 2-ம் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடை பெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வரும், நிர்வாகியுமான பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

    • காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை இரண்டாமாண்டு மாணவா் ஜெயராமன் 52 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டாா்.
    • மாணவா் ஜெயராமனுக்கு கல்லூரி முதல்வா் நசீம்ஜான், பேராசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

     காங்கயம்:

    கோவையில் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் என்ற தனியாா் அமைப்பு சாா்பில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை இரண்டாமாண்டு மாணவா் ஜெயராமன் 52 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டாா். இதில் 150 கிலோ எடையை தூக்கி 3ம் இடம் பிடித்தாா். கடந்த வாரம் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு 3ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.போட்டியில் வெற்றிபெற்ற மாணவா் ஜெயராமனுக்கு கல்லூரி முதல்வா் நசீம்ஜான், பேராசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

    • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள்,அலுலவர்கள் பாராட்டினர்.

    கீழக்கரை

    பள்ளி கல்வி துறை சார்பாக கலாமை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் முத்துப்பேட்டை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வினாடி, வினா போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு பிரிவில் பாத்திமா சனா, ராஜ கிரிஷா ஆகியோர் முதல் பரிசும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பிரிவில் நசாகா, ஆயிசா ராபிகா முதல் பரிசும் பெற்று மாவட்ட அளவில் பங்கு பெறுவதற்கு தகுதி பெற்றனர்.

    ஓவியப்போட்டியில் ஆயிஷா ஸைனா 2-ம் பரிசு, கட்டுரைப்போட்டியில் பசிஹா 2-ம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள்,அலுலவர்கள் பாராட்டினர்.

    • மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தமிழ் கலாச்சார பாரம்பரிய மைய இயக்குனர் சத்திய மூர்த்தி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை யினை வழங்கினார்.

    ராமநாதபுரம்

    மதுரை காமராசர் பல்க லைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம் பம் போட்டியில் ராமநாதபு ரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 38 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள் வாள், வாள் வீச்சு ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது.

    ஒற்றை கம்பு பிரிவில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 29 பேர் முதல் பரிசும், 9 மாணவர்கள் இரண்டாம் பரிசும் வென்று பரிசு கோப்பையினை அள்ளினர்.

    வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பல்கலைக்கழகம் தமிழ் கலாச்சார பாரம்பரிய மைய இயக்குனர் சத்திய மூர்த்தி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை யினை வழங்கினார்.

    வெற்றி பெற்ற மாண வர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானு வேல் மற்றும் பயிற்சியா ளர்கள் திருமுருகன், ஜெய ஸ்ரீ ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவி சாதனை
    • 5000 டாலர் மதிப்பிலான அமேசான் வெப் சர்வீஸ் சந்தா வழங்கியது.

    வேலாயுதம்பாளையம், 

    சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவியல்-தரவு அறிவியல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவி கிருத்திகாவும், அவரது குழுவினரும் கனடா நாட்டில் நடைபெற்ற மொராக்கோ சொலிடாரிட்டி ஹேக்கத்தான் என்ற போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசினை வென்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்க எம்ஐஎல்ஏ என்ற நிறுவனம் 5000 டாலர் மதிப்பிலான அமேசான் வெப் சர்வீஸ் சந்தா வழங்கியது. சாதனை படைத்த மாணவியை எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியின் செயலாளர் இராமகிருஷ்ணன், செயல் இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினார்கள்.

    • மாநில அளவிலான பேச்சு போட்டியில்குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவன் வெற்றி பெற்று சாதனை
    • போட்டி 2 நாட்கள் தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரியில் நடைபெற்றது.

    வேலாயுதம்பாளையம், 

    ஐ.சி.டி அகாடமி ஆண்டுதோறும் ஐ.சி.டி யூத் டாக் என்னும் மேடைப்பேச்சு போட்டியினை நடத்திவருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மேடைப்பேச்சு போட்டியில் கலந்து கொண்டனர். திருச்சி வட்டாரத்தில் நடைபெற்ற மேடை பேச்சு போட்டி 2 நாட்கள் தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் பயிலும் மாணவன் திவேஷ் ஐயப்பன் கலந்து கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான 5 பொன்மொழிகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இதில் அவர் 3-ம் பரிசு கிடைத்தது.

    இந்த போட்டியின் நடுவர்களாக முன்னணி ஐ.டி. துறைகளில் பணிபுரியும் மனித வளம் மேலாளர்கள் கலந்து கொண்டனர். மேடைப் பேச்சு போட்டியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்த கல்லூரியின் மாணவனை கல்லூரியின் முதல்வர் முருகன், துறை தலைவர் ராஜகுரு மற்றும் கல்லூரியின் மனித வளத்துறையயைச் சேர்ந்த மஹேந்திரன் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவரை பாராட்டினர். 

    • இதம்பாடல், ஏர்வாடியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
    • துண்டு பிரசுரங்களை சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார் .

    சாயல்குடி

    சாயல்குடி அருகே இதம்பாடல், ஏர்வாடி ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க அமைச்சர் ராஜ கண்ணப் பன், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் ஆலோசனையின் படி சாயல்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மகளிர் உரிமை தொகை தொடர்பான துண்டு பிரசுரங்களை சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார் .

    இந்நிகழ்ச்சியில் இதம் பாடல் ஊராட்சி மன்ற தலைவர் மங்களசாமி, சாயல்குடி நீர் பாசன சங்க தலைவர் ராஜாராம், மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா, கிளைச் செயலாளர் காதர் பாட்ஷா, இளைஞர் அணி பால முருகன், முத்து ராஜா, காதர், நீலமேகம், சாதிக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங் கோவன், முன்னாள் ஒன்றிய துணை தலைவர் ராம கிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • நெல்லை வண்ணார் பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியில் விளையாட்டுத் துறையில் மாணவர்கள் சாதனை படைப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.
    • கல்லூரியின் செயற்கை அறிவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் மதன் மித்ரன், திருப்பூரில் தமிழ்நாடு அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியில் விளையாட்டுத் துறையில் மாணவர்கள் சாதனை படைப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கல்லூரி யின் செயற்கை அறிவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் மதன் மித்ரன், திருப்பூரில் தமிழ்நாடு அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார்.

    அதில் சூப்பர் சீனியர் தனிநபர் ஒற்றை சுழற்சி போட்டியில் முதலிடமும், சிலம்பு சண்டை போட்டியில் முதலிடமும் பெற்று 2 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்து, கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இதற்காக ஊக்கம் அளித்த பொதுமேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், உடற்கல்வி இயக்குநர்கள் சுரேஷ் குமார், சாமுவேல் அமர்நாத், எஸ்தர் ராணி ஆகியோரை ஸ்காட் கல்வி குழும நிறு வனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.
    • இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர்.

    குமாரபாளையம்;

    திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர். 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மவுனிகா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம், 400 மீட்டரில் இரண்டாமிடம், 200 மீட்டரில் முதலிடம் வந்து, 13 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். சாதனை படைத்த மாணவியரை தலைமை ஆசிரியை கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் எஸ்.எம்.சி. நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினர்.

    ×