என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த ராமநாதபுரம் மாணவ, மாணவிகளை படத்தில் காணலாம்.
மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை
- மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தமிழ் கலாச்சார பாரம்பரிய மைய இயக்குனர் சத்திய மூர்த்தி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை யினை வழங்கினார்.
ராமநாதபுரம்
மதுரை காமராசர் பல்க லைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம் பம் போட்டியில் ராமநாதபு ரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 38 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள் வாள், வாள் வீச்சு ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது.
ஒற்றை கம்பு பிரிவில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 29 பேர் முதல் பரிசும், 9 மாணவர்கள் இரண்டாம் பரிசும் வென்று பரிசு கோப்பையினை அள்ளினர்.
வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பல்கலைக்கழகம் தமிழ் கலாச்சார பாரம்பரிய மைய இயக்குனர் சத்திய மூர்த்தி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை யினை வழங்கினார்.
வெற்றி பெற்ற மாண வர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானு வேல் மற்றும் பயிற்சியா ளர்கள் திருமுருகன், ஜெய ஸ்ரீ ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.






