search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman died"

    • மானூர் அருகே உள்ள மறக்குடி ரஸ்தா கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு மகேஸ்வரி (வயது 34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
    • இன்று காலை 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்காக அவர்களை குளிப்பாட்ட மகேஸ்வரி ஹீட்டர் மூலமாக வாளியில் வெந்நீர் வைத்துள்ளார். அந்த வெந்நீர் சூடாகி விட்டதா என்பதை பார்ப்பதற்காக ஹீட்டரை அணைக்காமல் நீரில் கையை விட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள மறக்குடி ரஸ்தா கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு மகேஸ்வரி (வயது 34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்காக அவர்களை குளிப்பாட்ட மகேஸ்வரி ஹீட்டர் மூலமாக வாளியில் வெந்நீர் வைத்துள்ளார். அந்த வெந்நீர் சூடாகி விட்டதா என்பதை பார்ப்பதற்காக ஹீட்டரை அணைக்காமல் நீரில் கையை விட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக மகேஸ்வரி உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் சரிந்து விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்துவிட்டனர்.

    இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடியில் உள்ள பெற்ரோர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றார்.
    • திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள வள்ளியம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் மோகன்ராஜ்( 28 ). தூய்மை பணியாளர் இவரது மனைவி தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த இந்திரா (21). இவர்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். இந்திரா மீண்டும் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் பிரசவத்திற்காக தூத்துக்குடியில் உள்ள பெற்ரோர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றார். மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. மனைவி மற்றும் மகளை ஊருக்கு அழைத்து வருவதற்காக மோகன்ராஜ் தூத்துக்குடிக்கு காரில் சென்றார். அங்கிருந்து அதிகாலை உடுமலைப்பேட்டைக்கு காரில் புறப்பட்டு வந்தனர். காரில் மோகன்ராஜ், இந்திரா, மோகன், 3 மாத பெண் குழந்தை, இந்திராவின் தாயார் பேச்சியம்மாள்( 43), உறவினர் வன்னியராஜ் (55) ஆகியோர் இருந்தனர். பழனி உடுமலை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்திரா, வன்னியராஜ் ,மோகன்ராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். கார் டிரைவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் காயம் இன்றி தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாமிநாதபுரம் போலீசார் பேச்சியம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பழனி அருகே தாளையம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பழனி:

    உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி இந்திராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அவர்களை தூத்துக்குடியில் இருந்து காரில் அழைத்து வந்துள்ளார்.

    பழனி அருகே தாளையம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    படுகாயம் அடைந்த மோகன்ராஜ், இந்திரா, வன்னியராஜ் ஆகியோர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் பணியில் இருந்தபோது எந்திரத்தில் சேலை இறுக்கி கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள முத்தனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மனைவி சிவனேஸ்வரி. (50). இவர் வைகை அணை சாலையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தபோது எந்திரத்தில் சேலை இறுக்கி கீேழ விழுந்தார். இதில் கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் தங்கபாண்டி கொடுத்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணத்துக்காக மளிகை கடையில் பொருட்கள் வாங்கி வரும் வழியில் பைக் தம்பதி மீது மோதி படுகாயமடைந்தனர்.
    • இந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஊராளி ப்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 48). இவர் செல்லம்புதூர் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (44). இவர்களின் மகளுக்கு 2 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.

    இந்த திருமணத்துக்காக நத்தம் அம்மன் குளம் அருகே மளிகை கடையில் பொருட்கள் வாங்கினர். பின்னர் 2 பேரும் வெளியே நின்று கொண்டு இருந்தனர். அப்போது பைக்கில் வந்த கூலித் தொழிலாளி சூரிய பிரசாத் (22) என்பவர் அவர்கள் மீது மோதினார்.

    இந்த விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ஜெயந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரோக்கியசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சூரியபிரகாஷ் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளார். மகளுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கிருத்திகை தினத்தையொட்டி பூஜை அறையில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, தவளக்குப்பம், மூகாம்பிகை நகர், 5-ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.

    இவரது மனைவி பத்மசுந்தரி இவர்களுக்கு பாலமுருகன்.  கவிராஜ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் பத்மசுந்தரி சம்பவத்தன்று கிருத்திகை தினத்தையொட்டி  பூஜை அறையில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை யில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பத்மசுந்தரி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது கணவர் கிருஷ்ண மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • மனமுடைந்த லட்சுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை, மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (53). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மகன் பந்தல் போடும் வேலைக்கு சென்று வருகிறார். மகள் 11-ம் வகுப்பு முடித்து விட்டு கபடி விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை லட்சுமி கபடி பயிற்சிக்கு சென்று வந்த மகளிடம் இனி கபடி பயிற்சிக்கு செல்லவேண்டாம் என கண்டித்ததாக தெரிகிறது.

    அதற்கு அவரது மகன் தன் தாய் லட்சுமியிடம், தங்கை விருப்பப்படி கபடி பயிற்சிக்கு போகட்டும் என கூறினார்.

    இதனால் மனமுடைந்த லட்சுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மங்களம் வீட்டின் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிட ந்தார்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டை காரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மங்களம் (வயது 46). இவர் அந்த பகுதியில் தங்கி ஒரு தனியார் கம்பெனி யில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மங்களம் வீட்டின் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிட ந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • துளசிமணியின் சேலையில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.
    • பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம், எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரது மனைவி சாந்தி (48). இவர் தனது தாயார் துளசி மணி மற்றும் இளைய மகள் சரண்யா பிரபா ஆகியோருடன் அதே பகுதியில் குடியிருந்து விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு துளசி மணி வீட்டுக்கு முன்பு இருந்த காலி இடத்தில் பழைய துணிகளை போட்டு தீ வைத்து எரித்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டு சாந்தியும் அவரது மகளும் வெளியே வந்து பார்த்தனர்.

    துளசிமணியின் சேலையில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அருகில் கிடந்த சாக்குப் பையை எடுத்து தீயை அணைத்த னர். இருப்பினும் துளசி மணியின் தலையைத் தவிர உடல் முழுவதும் தீக்கா யங்கள் ஏற்பட்டிருந்தது.

    உடனடியாக அவர்கள் ஒரு ஆட்டோவை வரவழைத்து அங்கிருந்த வர்கள் உதவியுடன் பெருந்துறை யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துளசி மணி பரிதாபமாக இறந்து போனார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மணக்குள விநாயகர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். கட்டிட தொழிலாளி. இவருடன் அவரது பாட்டி கமலா வசித்து வந்தார்.
    • இந்த நிலையில் கமலாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே வி.தட்டாஞ்சாவடி மணக்குள விநாயகர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். கட்டிட தொழிலாளி. இவருடன் அவரது பாட்டி கமலா வசித்து வந்தார். வயது முதிர்ச்சி காரணமாக கமலாவுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது.

    கடந்த ஒரு வாரமாக அவர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கமலாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் கமலா பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாளை வி.எம்.சத்திரம் மேற்குத்தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்
    • பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜெயலட்சுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது

    நெல்லை:

    பாளை வி.எம்.சத்திரம் மேற்குத்தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 56). இவர் மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    வாகனம் மோதியது

    இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள ஒரு கோவிலுக்கு சென்ற ஜெயலட்சுமி வி.எம்.சித்திரம் பஜார் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜெயலட்சுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப் -இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலட்சுமி மீது மோதிய வாகனம் எது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கீழே தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து டி‌. கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பார்வதி (வயது 44).

    இவர் ஊர் ஊராக சென்று ஆயுர்வேத மருந்துகளை விற்று வந்தார். அதன்படி சம்பவத்தன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பகுதிகளில் ஆயுர்வேத மருந்துகளை விற்றார்.

    பின்னர் அவர் டி. குன்னத்தூர் செல்வதற்காக செக்கானூரணி அருகே உள்ள கே. புளியங்குளத்தைச் சேர்ந்த சிங்கராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    டி. குன்னத்தூர் அம்மா கோவில் வளைவில் மோட்டார் சைக்கிள் திரும்பியபோது எதிர்பாராத விதமாக பின்னால் அமர்ந்திருந்த பார்வதி திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பார்வதி கொண்டு செல்ல ப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பார்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டி‌. கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×