உடுமலை அருகே இரும்பு தடுப்பில் ஜீப் மோதி பெண் பலி

தூத்துக்குடியில் உள்ள பெற்ரோர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது.
கோப்புபடம் 
கோப்புபடம் 
Published on

உடுமலை : 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள வள்ளியம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் மோகன்ராஜ்( 28 ). தூய்மை பணியாளர் இவரது மனைவி தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த இந்திரா (21). இவர்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். இந்திரா மீண்டும் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் பிரசவத்திற்காக தூத்துக்குடியில் உள்ள பெற்ரோர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றார். மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. மனைவி மற்றும் மகளை ஊருக்கு அழைத்து வருவதற்காக மோகன்ராஜ் தூத்துக்குடிக்கு காரில் சென்றார். அங்கிருந்து அதிகாலை உடுமலைப்பேட்டைக்கு காரில் புறப்பட்டு வந்தனர். காரில் மோகன்ராஜ், இந்திரா, மோகன், 3 மாத பெண் குழந்தை, இந்திராவின் தாயார் பேச்சியம்மாள்( 43), உறவினர் வன்னியராஜ் (55) ஆகியோர் இருந்தனர். பழனி உடுமலை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்திரா, வன்னியராஜ் ,மோகன்ராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். கார் டிரைவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் காயம் இன்றி தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாமிநாதபுரம் போலீசார் பேச்சியம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com