மானூரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

மானூர் அருகே உள்ள மறக்குடி ரஸ்தா கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு மகேஸ்வரி (வயது 34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இன்று காலை 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்காக அவர்களை குளிப்பாட்ட மகேஸ்வரி ஹீட்டர் மூலமாக வாளியில் வெந்நீர் வைத்துள்ளார். அந்த வெந்நீர் சூடாகி விட்டதா என்பதை பார்ப்பதற்காக ஹீட்டரை அணைக்காமல் நீரில் கையை விட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.
மானூரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
Published on

நெல்லை:

மானூர் அருகே உள்ள மறக்குடி ரஸ்தா கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு மகேஸ்வரி (வயது 34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்காக அவர்களை குளிப்பாட்ட மகேஸ்வரி ஹீட்டர் மூலமாக வாளியில் வெந்நீர் வைத்துள்ளார். அந்த வெந்நீர் சூடாகி விட்டதா என்பதை பார்ப்பதற்காக ஹீட்டரை அணைக்காமல் நீரில் கையை விட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக மகேஸ்வரி உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் சரிந்து விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்துவிட்டனர்.

இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com