பழனி அருகே சாலை தடுப்பில் கார் மோதி பெண் பலி

பழனி அருகே தாளையம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பழனி:

உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி இந்திராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அவர்களை தூத்துக்குடியில் இருந்து காரில் அழைத்து வந்துள்ளார்.

பழனி அருகே தாளையம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயம் அடைந்த மோகன்ராஜ், இந்திரா, வன்னியராஜ் ஆகியோர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com