மகள் திருமணத்துக்கு பொருட்கள் வாங்க சென்ற பெண் பைக் மோதி பலி

திருமணத்துக்காக மளிகை கடையில் பொருட்கள் வாங்கி வரும் வழியில் பைக் தம்பதி மீது மோதி படுகாயமடைந்தனர்.இந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஊராளி ப்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 48). இவர் செல்லம்புதூர் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (44). இவர்களின் மகளுக்கு 2 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.

இந்த திருமணத்துக்காக நத்தம் அம்மன் குளம் அருகே மளிகை கடையில் பொருட்கள் வாங்கினர். பின்னர் 2 பேரும் வெளியே நின்று கொண்டு இருந்தனர். அப்போது பைக்கில் வந்த கூலித் தொழிலாளி சூரிய பிரசாத் (22) என்பவர் அவர்கள் மீது மோதினார்.

இந்த விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ஜெயந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரோக்கியசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சூரியபிரகாஷ் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளார். மகளுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com