search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயங்கி கிடந்த"

    • முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது.
    • டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் எதிரே சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு டவுன் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் நேரில் சென்று மயங்கிய கிடந்த முதியவரை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்தவருக்கு 55 வயது முதல் 60 வயது இருக்கும் எனவும், ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மங்களம் வீட்டின் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிட ந்தார்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டை காரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மங்களம் (வயது 46). இவர் அந்த பகுதியில் தங்கி ஒரு தனியார் கம்பெனி யில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மங்களம் வீட்டின் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிட ந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிரகாஷ் மது குடித்து விட்டு ரோட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.
    • இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பு.புளியம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 55). இவர் பு.புளியம்பட்டியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் தொழி லாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி விட்டது. ஆனால் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையயடுத்து அந்த பகுதியில் தனது தாயாருடன் தங்கி வந்தார். மேலும் இவ ருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாகவும் கூற ப்படுகிறது.

    இந்த நிலையில் பிரகாஷ் பு.புளியம்பட்டி- பவானி சாகர் ரோட்டில் மது குடித்து விட்டு ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பு.புளியம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதை தொடர்ந்து மேல் கிசிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு சிகிச்சை பலனன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோடு ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் அருகே, சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தார்.

    இதை கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலமாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. கடந்த சில நாட்களாக ரெயில் நிலையம் பகுதியில் சுற்றி திரிந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்று போலீசார் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அவர் கிடந்த இடத்தில் ஏராளமான ரத்தம் சிந்தி உள்ளது.அவருக்கு தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், குடிபோதை தகராறில் யாராவது அவரை கத்தியால் குத்தினரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×