மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

ஈரோடு ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மயங்கி கிடந்த மூதாட்டி சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையம் அருகே, சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தார்.

இதை கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலமாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. கடந்த சில நாட்களாக ரெயில் நிலையம் பகுதியில் சுற்றி திரிந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com