மயங்கி கிடந்த முதியவர் சாவு

முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது.டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மயங்கி கிடந்த முதியவர் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையம் எதிரே சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது.

இதன்பேரில் ஈரோடு டவுன் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் நேரில் சென்று மயங்கிய கிடந்த முதியவரை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இறந்தவருக்கு 55 வயது முதல் 60 வயது இருக்கும் எனவும், ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com