மயங்கி கிடந்த தொழிலாளி சாவு

பிரகாஷ் மது குடித்து விட்டு ரோட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பு.புளியம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மயங்கி கிடந்த தொழிலாளி சாவு
Published on

ஈரோடு:

சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 55). இவர் பு.புளியம்பட்டியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் தொழி லாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி விட்டது. ஆனால் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையயடுத்து அந்த பகுதியில் தனது தாயாருடன் தங்கி வந்தார். மேலும் இவ ருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாகவும் கூற ப்படுகிறது.

இந்த நிலையில் பிரகாஷ் பு.புளியம்பட்டி- பவானி சாகர் ரோட்டில் மது குடித்து விட்டு ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பு.புளியம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து மேல் கிசிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு சிகிச்சை பலனன்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com