என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஆண்டிபட்டி அருகே எந்திரத்தில் சேலை சிக்கி பெண் பலி
- பெண் பணியில் இருந்தபோது எந்திரத்தில் சேலை இறுக்கி கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள முத்தனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மனைவி சிவனேஸ்வரி. (50). இவர் வைகை அணை சாலையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தபோது எந்திரத்தில் சேலை இறுக்கி கீேழ விழுந்தார். இதில் கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் தங்கபாண்டி கொடுத்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






