என் மலர்
நீங்கள் தேடியது "woman"
- விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண் நண்பருடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக, சுகந்தி மற்றும் குமரேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மதுரை
ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் தெரு, என்.எஸ்.கே நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவரது வீட்டின் அருகே, சோலைஅழகுபுரத்தை சேர்ந்த குமரேசன் (27) என்பவர் குடியிருந்து வருகிறார்.
குமரேசன் அழகப்பன் நகர், வ.உ.சி தெருவை சேர்ந்த 25 வயது பெண்ணுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதை மணிகண்டன் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த குமரேசன், பெண் ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அந்தப் பெண் வழக்கமாக வீட்டுக்குச் செல்லும் ஆட்டோ டிரைவர் புகழேந்தி (53) என்பவருக்கு போன் செய்தார். அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
ஆத்திரம் அடைந்த 25 வயது பெண், இன்னொரு ஆட்டோவில் டி.வி.எஸ் நகருக்கு சென்றார். அங்கு ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின் ரோட்டில் நின்று கொண்டு இருந்த ஆட்டோ டிரைவர் புகழேந்தி மற்றும் அவரது மனைவிக்கு அடி- உதை விழுந்தது. இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண் நண்பருடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக, சுகந்தி மற்றும் குமரேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- பெண் வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அண்ணாநகர் போலீசார் கவுண்டன் கால் பகுதியைச் சேர்ந்த தண்டீஸ்வரன், ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
மதுரை
மதுரை பாண்டியன் நகர், சிவசக்தி தெருவை சேர்ந்த உதயபாண்டி மனைவி பாலம்மாள் (27). இவர் வண்டியூர், சவுராஷ்டிராபுரம் தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் ஓட்டலில் இருந்தார். அங்கு குடிபோதையில் வந்த 2 பேர் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றனர். இதை பாலம்மாள் தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த கும்பல், பெண் வியாபாரியை கத்தியால் குத்தி விட்டு தப்பியது.
இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் கவுண்டன் கால் பகுதியைச் சேர்ந்த தண்டீஸ்வரன், ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
- வளர்மதி வழக்கு விசாரணைக்காக அவினாசி ஜே.எம்.கோர்ட்டுக்கு சென்றார்.
- நீதிபதி சபீனா பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளியவைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அவினாசி :
அவினாசியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). இவருடைய மனைவி வளர்மதி (36) ஆகியோர் வழக்கு விசாரணைக்காக அவினாசி ஜே.எம்.கோர்ட்டுக்கு சென்றனர். அப்போது அறைக்குள் சென்ற வளர்மதி திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த நீதிபதி சபீனா உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்துவந்து அப்பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளியவைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மயங்கி விழுந்த பெண் விசாரணைக்கு வந்தவர் என்று தெரிந்தும் உடனடியாக நீதிபதி சபீனா மனிதநேயத்துடன் உதவிய மனிதாபிமான செயலை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
- இந்நிலையில், கடந்த 1-ந் தேதி பாத்திமா என்ற கமலா, குழந்தைக்கு கொலுசு வாங்கி வருவதாக, குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
- இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ்(41). தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா என்ற கமலா(30). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பாத்திமா அருகே உள்ள சேம்பரில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 1-ந் தேதி பாத்திமா என்ற கமலா, குழந்தைக்கு கொலுசு வாங்கி வருவதாக, குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் சுரேஷ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.
- உதயா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.
- இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அக்கரை கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி உதயா (51). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் உதயா வுக்கு உடல்நிலை சரி யில்லை என கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் அவர் மன வேதனையில் இருந்த வந்தார். இந்த நிலையில் உதயா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தாக்கிய 2 பேரும் ஏற்கனவே பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டவர்கள்.
மதுரை
மதுரை காமராஜர் சாலை, சிம்மபுரம் தெருவை சேர்ந்த தங்கராஜ் மனைவி சுபஸ்ரீ (21). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சுபஸ்ரீ வீட்டில் இருந்தார். அங்கு வந்த 2 பேர் அவரை தாக்கி விட்டு தப்பினர்.
இதுகுறித்து சுபஸ்ரீ தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதில் என்னை தாக்கிய 2 பேரும் ஏற்கனவே பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபஸ்ரீயை தாக்கிய சிவகுமார் (29), நிலக்கோட்டை வீலிநாயக்கன்பட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் (35) ஆகியோரை கைது செய்தனர்.
- 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்.
- சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் சாப்டூர் போலீஸ் சரகம் அத்திபட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி திவ்யா(32). இவர்களுக்கு காயத்திரி(7), ஆதேஸ்(2) என்ற குழந்தைகள் உள்ளனர். கடந்த
23-ந் தேதி முதல் திவ்யா மற்றும் மகள் காயத்ரி, மகன் ஆதேஸ் ஆகியோரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து திவ்யாவின் தந்தை சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- களக்காடு அருகே உள்ள கீழ உப்பூரணி, தெற்குதெருவை சேர்ந்தவர் நடராஜன் மனைவி செல்வகனி (வயது 53).
- காயமடைந்த செல்வகனி நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழ உப்பூரணி, தெற்குதெருவை சேர்ந்தவர் நடராஜன் மனைவி செல்வகனி (வயது 53). இவரது கணவர் நடராஜன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதனால் செல்வகனி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த திரவியக்கனி மனைவி நீலாவதிக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.
சம்பவத்தன்று நீலாவதி பிரச்சினைக்குரிய இடத்தில் அதிகாரிகள் அளவீடு செய்து நடப்பட்டிருந்த கல்லை அகற்றியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த செல்வகனி தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த நீலாவதியும், அவரது கணவர் திரவியக்கனியும் சேர்ந்து செல்வகனியை செங்கலால் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதில் காயமடைந்த செல்வகனி நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நீலாவதியையும், அவரது கணவர் திரவியக்கனியையும் தேடி வருகின்றார்.
- நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் அருகே உள்ள புதூர் கவிராயர் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்.
- தற்கொலை தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் அருகே உள்ள புதூர் கவிராயர் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்.
இவரது மனைவி முப்புடாதி(வயது 48). இவரது குழந்தை சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறந்து விட்டது. இதனால் முப்புடாதி மனமுடைந்து காணப்பட்டு உள்ளார்.
மேலும் அவருக்கு உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மதுரையில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து தல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை தல்லாகுளம், கலைநகர் சாமுவேல் மனைவி ஷீலா சரண்யா (வயது 27). இவருக்கும் கணவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஷீலா சரண்யா சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி ஷீலா சரண்யாவின் தாய் அன்னம்மாள் ஜெயராணி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.அதில், "எனது மகள் ஷீலா சரண்யாவுக்கு, அவரது கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்து வந்தனர். இதன் காரணமாகவே எனது மகள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இது தொடர்பாக போலீசார் விசாரிக்க வேண்டும்" என்று கூறி உள்ளார். இதன் அடிப்படையில் தலாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை சந்திப்பு பெருமாள் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் அருண்ராஜ். எலக்ட்ரீசியன்.
- கொள்ளை முயற்சி தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பெருமாள் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் அருண்ராஜ். எலக்ட்ரீசியன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 28). நேற்று இரவு ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ராஜேஸ்வரியிடம் பிச்சை கேட்டுள்ளார். உடனே ராஜேஸ்வரி பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றுள்ளார்.
அவரை பின்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர் ராஜேஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டி நகையை கேட்டுள்ளார். அவர் கத்தி கூச்சலிடவே அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.இது தொடர்பாக ராஜேஸ்வரி சந்திப்பு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது ராஜேஸ்வரி வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேறுவது தெரிய வருகிறது. அந்த காட்சி பதிவுகளை கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
- கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினசரி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்தது.
- மது போதையில் வந்து அலமேலுவை கடுமையாக தாக்கினாராம். பதிலுக்கு அலமேலு குமாரை வாய், உதடு பகுதியில் சரமாரியாக தாக்கினாராம்.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு 4- வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி.
இவரது2-வது மனைவி அலமேலு ( வயது 46). இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினசரி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று கண்ணன் - அலமேலு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு, ஒருவரை–யொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. அந்த சமயம் கண்ணனுக்கு ஆதரவாக அவரது தம்பி குமார் மது போதையில் வந்து அலமேலுவை கடுமையாக தாக்கினாராம். பதிலுக்கு அலமேலு குமாரை வாய், உதடு பகுதியில் சரமாரியாக தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த குமார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து பெற்று வருகிறார்.
இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில் அடிதடி பிரிவில் வழக்குப் பதிவு செய்த அன்ன–தானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் அலமேலுவை கைது செய்து சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலில் அடைந்தனர்.