search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vacation"

    • சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர் திஷா பதானி.

    சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் 'கங்குவா' படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் திஷா பதானி.

    லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி சினிமாவிலும், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன், பிரபாஸ், அமிதாப்பச்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் கல்கி 2898 ஏடி என்ற படத்திலும் திஷா பதானி முக்க்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர் திஷா பதானி.

    திஷாவும் அவரது நெருங்கிய தோழியான மவுனி ராயும் அடிக்கடி பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

     

    அந்த வகையில் திஷாபதானி விடுமுறை கொண்டாட்டமாக தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் துள்ளி விளையாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நான் தந்தையானதும் விடுமுறைகளை குறித்த பார்வை மாறியது என்றார் பில் கேட்ஸ்
    • வேலையை கடந்து ஒரு உலகம் உள்ளது என்றார் பில் கேட்ஸ்

    கணினிகளுக்கான ஆபரேடிங் சிஸ்டம் எனப்படும் "இயங்கு முறைமை" தயாரிப்பதில் முன்னணியில் உள்ள அமெரிக்க நிறுவனம், மைக்ரோசாஃப்ட் (Microsoft). இதன் நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates), உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர்.

    தனது சிறு வயது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை மனம் திறந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பில் கேட்ஸ்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எனது சிறு வயதில் வார இறுதி விடுமுறைகளை குறித்து எனக்கு பெரிய எண்ணம் இருந்ததில்லை. ஆனால், வயது அதிகரித்த போது அவற்றின் மகத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். குறிப்பாக, நானும் ஒரு தந்தையானதும் விடுமுறைகளை குறித்த எனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. எனது குழந்தைகளின் வளர்ச்சியை காணும் பொழுது வேலையை கடந்தும் ஒரு உலகம் உள்ளது என்பதை முழுவதுமாக உணர தொடங்கினேன். வரவிருக்கும் ஆண்டிலிருந்து விடுமுறை நாட்களை அனுபவிக்க துவங்குங்கள். வேலையை கடந்து வாழ்க்கையின் செழுமையை உணர்ந்து கொள்ள அது உதவும். அது அடுத்து வரும் காலங்களில் வரும் சவால்களை எதிர்கொள்ள மிகவும் பயனுடையதாக அமையும்.

    இவ்வாறு பில் பதிவிட்டுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன் இன்போசிஸ்-சின் (Infosys) நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி (Narayana Murthy) இந்திய இளைஞர்கள், வார விடுமுறைகளை குறைத்து கொண்டு ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க தயாராக வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

    அவரது கருத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

    மத்திய, மாநில அரசுத்துறை அலுவலகங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, 5 நாட்கள்(40 மணி நேரம்) மட்டுமே ஊழியர்களுக்கு வேலை நாட்கள். ஒரு சில தனியார் நிறுவனங்களில் மட்டுமே இதே நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

    பிற தனியார் நிறுவனங்களில் திங்கள் முதல் சனி வரை, 6 நாட்கள் (48 மணி நேரம்), ஊழியர்கள் பணி செய்ய வேண்டும். எனவே நாராயண மூர்த்தி தெரிவித்த "70-மணி-நேர வார வேலை நாட்கள்" என்பது வேலை-வாழ்க்கை சமநிலையை (work-life balance) நலிவடைய செய்யும் என்பதே பல உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    இப்பின்னணியில், பில் கேட்ஸின் விடுமுறை செய்தியை சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு பயனர்கள் விமர்சிக்கின்றனர்.

    • இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • இது குறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் இன்று காலை 7.30 மணியளவில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வண்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்ருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அஜித் குமார் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி ஆனார். இது குறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் அசோகன், சப் - இன்ஸ்பெக்டர் ராம தாஸ் தனிபிரிவு போலீஸ் காரர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாகனம் மோதி பலியான அஜித்குமார் உடலை மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்து வக்கல் லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூ.10,558, நாளைய கட்டணம் ரூ. 21,509, 29 -ந்தேதி கட்டணம் ரூ. 20,808.
    • சென்னை-கோவா வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு அதிகரித்து இருக்கிறது.

    ஆலந்தூர்:

    மிலாது நபியையொட்டி நாளை அரசு விடுமுறை ஆகும். இதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி என்று தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் வருகின்றன. மேலும் பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை தொடங்கி விட்டதால் சென்னையில் வசிக்கும் பலர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா பயணத்தை திட்டமிட்டு விமான பயணங்களாக ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

    தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் தான் பெரும்பாலும் தமிழகத்தில் இருந்து செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது இந்த தொடர் விடுமுறையில், சுற்றுலா தளங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் விமானங்களில், பயணிகளின் டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

    சென்னையில் இருந்து சுற்றுலா தளமான தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்ல, வழக்கமான விமான கட்டணம் ரூ. 9,720 ஆகும். ஆனால் நாளை(28-ந் தேதி) கட்டணம், ரூ. 32,581 ஆகவும், 29-ந்தேதி ரூ. 28,816 ஆகவும் உள்ளது.

    துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூ.10,558, நாளைய கட்டணம் ரூ. 21,509, 29 -ந்தேதி கட்டணம் ரூ. 20,808.

    இதேபோல் சிங்கப்பூர் செல்ல வழக்கமான கட்டணம் ரூ. 9,371. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ. 20,103, 29-ந் தேதி ரூ. 18,404 ஆக இருக்கிறது. மலேசியாவின் கோலாலம்பூர் செல்ல வழக்கமான கட்டணமான ரூ. 7,620யை தாண்டி நாளை ரூ.15,676, 29-ந்தேதி ரூ.14,230 கட்டணமாக உயர்ந்துள்ளது. இலங்கையின் கொழும்புக்கு ரூ.11234 (வழக்கமான கட்டணம் ரூ.6,698) ஆகும்.

    இந்தியாவுக்குள் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் விமான கட்டணமும் உயர்ந்துள்ளது. சென்னை- மைசூர் இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.2,558. ஆனால் தற்போது இது ரூ.7,437 ஆக உயர்ந்து உள்ளது.

    சென்னை-கோவா வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு அதிகரித்து இருக்கிறது. நாளை ரூ.8,148, 29-ந்தேதி ரூ.9,771 ஆகும்.

    மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்க வில்லை. ஆனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமான கட்டணம் மட்டும் அதிகரித்துள்ளது. சென்னை தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,853, ஆகும். நாளை ரூ.11,173, 29-ந் தேதி ரூ.9,975 ஆக உள்ளது.

    • வினித்குமார் நாமக்கல் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • சங்கராபுரம் காவல் சிறப்பு உதவியாளர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் மகன் வினித்குமார் (வயது19). இவர் நாமக்கல் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் இரவு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றார். அப்போது, நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ளார். உடன் அவரை, சங்கராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனசேகரன் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வினித்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் சிறப்பு உதவியாளர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் ஜெயபாலன் மற்றும் மதுரை தொழிலாளர் இணை சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டு தலின்படியும் விருதுநகர், ஆணையர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தேசிய விடுமுறை தினமான

    15-ந்தேதி கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசியபண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958-ன்படி, சுதந்திர தினம் அன்று (ஆக.15) அன்று கடைகள், நிறுவ னங்கள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும்.

    இந்த தினத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும். மேலும் தொழி லாளர்களிடம் உரிய படிவத்தில் கையொப்பம் பெற்று விடுமுறை தினத் திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு படிவம் அனுப்பாமலும், சட்ட விதிகளை முரணாகவும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 50 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 24 உணவகங்கள் மற்றும் 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 84 நிறுவனங்களில் கூட்டாய் வின்போது முரண்பாடு கண்டறியப்பட்டது.

    இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961 ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சுதந்திர தினத் தன்று பணிபுரிந்த தொழி லாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்கவேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பள பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனுதாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த தகவலை விருது நகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகளால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது.
    • கோடை விடுமுறையில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு. சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

    இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதியடைந்து வருகின்றனர்.

    குழந்தைகளால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது.

    எனவே மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும்.

    மேலும் கல்வி துறையின் அறிவுறுத்தலை மீறி சட்ட விரோதமாக கோடை விடுமுறையில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    சிவகங்கை

    சென்னை முதன்மை செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்படி சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IVEE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவ னங்களின் மீது சிவகங்கை மாவட்ட த்தில் 55 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • பண்ருட்டியில் தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் உதவியாளர் மாயமானார்.
    • ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது.

    கடலூார்:

    சிதம்பரம் அருகே வையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்செந்தில்குமார். அவரது மகள் சுபத்திரா (வயது 21)இவர் பி.எஸ்.சி. விலங்கியல் படித்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் உதவியாளராக பணிபுரித்து வருகிறார். பொங்கல் விடுமு றைக்காக மருங்கூரில் உள்ள பெரியம்மா வளர்மதி வீட்டுக்கு வந்து தங்கி இருந்தவர் நேற்று அதிகாலை முதல் காணாமல் போனார்.

    இது குறித்து முத்தாண்டிகுப்பம்போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரில் ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது. இதுபற்றி காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தனியார் மருத்துவ கல்லூரி பெண் ஊழியரை தேடி வருகின்றனர். 

    • சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 54 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை வழக்குபதிவு செய்துள்ளது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று கடைகள் மற்றும் நிறு வனங்கள், உணவு நிறுவ னங்கள்,மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டு மானால் அவர்களுக்கு வேலைய ளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.

    மேற்கண்ட தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IV EE என்ற படிவத்திலும், மோட்டார். போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விடுமுறை ஆய்வின் போது மேற்கண்ட சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய வகையில் சிவகங்கை மாவட்டத்தில் 54 நிறுவனங்களில் முரண்பா டுகள் கண்டறியப்பட்டன.

    இதையடுத்து அந்த சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    • அரையாண்டு விடுமுறை முடிந்து மதுரை மாவட்டத்தில், இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் 23-ந் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டும் இந்த விடுமுறை நாட்களில் வந்ததால் மாணவர்கள் உறவினர்கள் வீடுக ளுக்கும், பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.

    இந்த நிலையில் நேற்று புத்தாண்டு பிறந்ததை யடுத்து இன்று 2ந்தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொறுத்த வரை 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.தொடக்கப்பள்ளி ஆசிரி யர்களுக்கு பயிற்சிகள் இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டதால் காலை வழக்கமான நேரத்தில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர். இதனால் சாலை களில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மாணவ-மாணவிகள் சென்றதால் பள்ளி மற்றும் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    அரையாண்டு விடுமுறை முடிந்து திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டுமென அந்தந்த பள்ளிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். இதில் ஒரு சில மாணவர்கள் முக கவசம் அணியாமல் பள்ளிக்கு வந்தனர். அவர்களையும் அணிந்து வரும்படி பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டது.

    • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.
    • தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் 115 -வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முக்குலத்து புலிகள் கட்சியின் சார்பாக மாநில நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவர் கூறும்போது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும். அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்பு இருந்தது போல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டவேண்டும் என்றார்.

    இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×