உளுந்தூர் பேட்டை அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.இது குறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உளுந்தூர் பேட்டை அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் இன்று காலை 7.30 மணியளவில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வண்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்ருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அஜித் குமார் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி ஆனார். இது குறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் அசோகன், சப் - இன்ஸ்பெக்டர் ராம தாஸ் தனிபிரிவு போலீஸ் காரர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாகனம் மோதி பலியான அஜித்குமார் உடலை மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்து வக்கல் லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com