search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passion"

    • இப்போட்டியில் 13, 15, 17 வயது என 3 பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது
    • 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 250 ரூபாயும் வழங்கப்பட்டது.

    கடலூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி கடலூரில் நடைபெற்றது. இப்போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார். இப் போ ட்டியில் 13, 15, 17 வயது என 3 பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

    இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், 4 முதல் 10 இடங்களை பிடித்த வர்களுக்கு தலா 250 ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் இப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில் ஏராள மானவர்க ள்ஆர்வ முடன் கலந்து கொண்டனர். 

    • மதுரையில் சீசனையொட்டி மாம்பழம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
    • கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை

    முக்கனிகளில் ஒன்று மாம்பழம். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி யுள்ள நிலையில் மதுரையில் மாம்பழ வியாபாரம் களை கட்டியுள்ளது.

    மாம்பழ உற்பத்தியில் புகழ் பெற்றது சேலம். தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதையொட்டி மதுரைக்கு மாம்பழ வரத்து அதிக ரித்துள்ளது.

    பெரிய பழக்கடைகள் முதல் சாலையோர கடைகளிலும் மாம்பழம் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி வாகனங்க ளில் கொண்டு சென்று மக்கள் கூறும் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். நடமாடும் வாகனங்களில் 3 கிலோ மாம்பழம் ரூ. 100க்கு விற்பனை செய்யப்படு கிறது. சாலையோர கடை களிலும் கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பல ரக மாம்பழங்கள் கிடைப்பதால் அதிக சுவையான மாம்பழம் எது என்பதை அறிந்து அதனை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மாம்பழங்களை வாங்கி வருகின்றனர்.

    சிலர் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கின்ற னர். இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என்பதால் சிலர் மாம்பழங்களை வாங்கு வதை தவிர்க்கின்றனர்.

    • அரையாண்டு விடுமுறை முடிந்து மதுரை மாவட்டத்தில், இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் 23-ந் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டும் இந்த விடுமுறை நாட்களில் வந்ததால் மாணவர்கள் உறவினர்கள் வீடுக ளுக்கும், பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.

    இந்த நிலையில் நேற்று புத்தாண்டு பிறந்ததை யடுத்து இன்று 2ந்தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொறுத்த வரை 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.தொடக்கப்பள்ளி ஆசிரி யர்களுக்கு பயிற்சிகள் இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டதால் காலை வழக்கமான நேரத்தில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர். இதனால் சாலை களில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மாணவ-மாணவிகள் சென்றதால் பள்ளி மற்றும் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    அரையாண்டு விடுமுறை முடிந்து திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டுமென அந்தந்த பள்ளிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். இதில் ஒரு சில மாணவர்கள் முக கவசம் அணியாமல் பள்ளிக்கு வந்தனர். அவர்களையும் அணிந்து வரும்படி பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டது.

    ×