அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி கடலூரில் சைக்கிள் போட்டி:கலெக்டர்- மேயர் தொடங்கி வைத்தனர்

இப்போட்டியில் 13, 15, 17 வயது என 3 பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 250 ரூபாயும் வழங்கப்பட்டது.
சைக்கிள் போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சைக்கிள் போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
Published on

கடலூர்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி கடலூரில் நடைபெற்றது. இப்போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார். இப் போ ட்டியில் 13, 15, 17 வயது என 3 பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், 4 முதல் 10 இடங்களை பிடித்த வர்களுக்கு தலா 250 ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் இப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில் ஏராள மானவர்க ள்ஆர்வ முடன் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com