என் மலர்
உள்ளூர் செய்திகள்

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஆறு. சரவணத்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முக்குலத்து புலிகள் கட்சி சார்பில் மரியாதை
- மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.
- தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் 115 -வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முக்குலத்து புலிகள் கட்சியின் சார்பாக மாநில நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் கூறும்போது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும். அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்பு இருந்தது போல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டவேண்டும் என்றார்.
இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






