search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Society"

    • இன்றைய சமுதாயம் நூல்களை விட்டு தூரமாக சென்று கொண்டிருக்கிறது என நூலக இயக்குனர் பேசினார்.
    • சேதுக்கரசி வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றி கூறினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் செயல்பட்டு வரும் 'உலகம் சுற்றிய தமிழர்' சோமலெ நினைவு கிளை நூலகத்தில் நூலகர் தின விழாவும், 'தொல்காப்பியச்செம்மல் தமிழண்ணலின் 95- வது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

    நூலகர் அகிலா வரவேற் றார். சிறப்பு விருந்தி னராக புதுக்கோட்டை மாவட்ட ஞானாலயா ஆய்வு நூலகத்தின் இயக்குநர் பா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லுர் கிளை நூலகர் செல்வகுமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் நூலக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

    நெற்குப்பையில் பிறந்த மும்மூர்த்திகளான அறிஞர் சோமலெ, தமிழண்ணல், சம்பந்தம் ஆகியோர் தமிழ் மொழி பற்றாளர்களாகவும், சமூக சிந்தனை உடைய வர்களாகவும், கல்விக்காக தங்கள் வாழ்நாள் முழுவ தையும் அர்ப்பணித்ததோடு பெரும் புரவலர்களாகவும் வாழ்ந்து சென்றுள்ளார்கள் என்பதை நினைக்கும் போது இந்நேரத்தில் மட்டற்ற மகிழ்ச்சி அடை கின்றேன். மேலும் இன்றைய இளைய சமுதாயம் நூல்களை விட்டு தூரமாக சென்று கொண்டி ருக்கிறார்கள்.

    இதை பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது. பெற்றோர்களாகிய நாம் என்னதான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினாலும் உலக அறிவு சார்ந்த விஷயங்களை ஒவ்வொரு வருக்கும் கற்றுத் தருவதும் அதன் மூலம் பல சாத னைகள் புரிந்திட வழிவகை செய்வதும் இந்த நூலகம் தான். எனவே மாணவர்கள் ஆகிய நீங்கள் இதனை நன்கு புரிந்து கொண்டு பெரிய அறிஞர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் சமூக சிந்தனை உடையவர் களாகவும் மாற அன்றாட வாழ்வில் நீங்கள் நூலக தொடர்புடையவராக மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நல் மாணவ வாசகர் களுக்கான விருதுகள் நெற்குப்பை நூலகத்தை நன்கு பயன்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.

    இதில் சோமலெ சோமசுந்தரம், பேராசிரியர் விஸ்வநாதன், சிவகங்கை மாவட்ட நூலக கண்காணிப் பாளர் சு.சண்முக சுந்தரம், மாவட்ட நூலக இருப்பு சரிபாப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் பங்குபெற்றனர். நிறைவாக சேதுக்கரசி வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றி கூறினார்.

    • தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தடையை மீறி வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
    • இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட செயலாள ராக பெரியசாமி என்பவர் உள்ளார். இன்று காலை இவர் தாதகாப்பட்டி கேட் அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் தாக்கினர்.

    சேலம்:

    சேலத்தில் லாட்டரி விற்பனை கும்பலால் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டார்.

    லாட்டரி விற்பனை

    தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தடையை மீறி வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார்கள் சென்றவண்ணம் உள்ளன. எனினும் லாட்டரி விற்பனை தொடர்ந்து வருகிறது.

    சரமாரி தாக்குதல்

    இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட செயலாள ராக பெரியசாமி என்பவர் உள்ளார். இன்று காலை இவர் தாதகாப்பட்டி கேட் அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். மேலும் அவரது கனரக வாக னத்தின் கண்ணாடி யையும் உடைத்தனர். இந்த தாக்கு தலில் படுகாயம் அடைந்த அவர், ரத்தம் சொட்ட சொட்ட சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்கு வந்தார். இதுபற்றி தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக பெரிய சாமி அடிக்கடி போலீசில் புகார் அளித்து வந்துள்ளார். இத னால் ஏற்பட்ட ஆத்தி ரத்தில் லாட்டரி சீட்டு விற்ப னையாளர்கள் அடியாட்களை அனுப்பி அவரை அடித்தது டன் வாகனத்தை அடித்து நொறுக்கியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    மறியல்

    இது தொடர்பாக அன்ன தானப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி ஒருவர் குறித்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள். காயம் அடைந்த பெரி யசாமி சேலம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் அங்கு அதிக அளவில் திரண்ட னர். திடீரென அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத னால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட வர்களை கலந்து செல்லுமாறு கூறினர்.

    3 பேர் சிக்கினர்

    ஆனாலும் அவர்கள் சாலை யில் அமர்ந்தவாறு கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரி கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பெரியசாமியை தாக்கிய வர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யது. இதனிடையே பெரியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் மடக்கி பிடித்த னர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சமுதாயத்தை பேச்சு மூலம் ஒரு அங்குலமாவது முன்னேற்ற வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
    • பேச்சுப் போட்டியில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப்போட்டி நடந்தது. விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேச்சுப்போட்டியை தொடங்கி வைத்தார்.

    அவர் பேசியதாவது:-

    தலைசிறந்த பேச்சா ளர்கள்தான் எதிர்காலத்தில் தலைவர்களாக உருவாகியுள்ளனர். சிறந்த பேச்சு ஒருவரது வாழ்வையே மாற்றக் கூடிய சக்தி படைத்தது. உலகின் ராஜ தந்திரத்தின் மிக முக்கிய பங்கு வகிப்பது, தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வார்த்தைதான்.

    ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். ஒரே கருத்தை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சொல்லாம். சொல்லை தேர்ந்தெடுத்து பேசுவதுதான் தனிமனித வாழ்க்கையின் வெற்றி.பள்ளி பருவத்தில் நானும் பல பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளேன். மாநில அளவிலான போட்டி யில் முதல் பரிசும் வென்றேன். ஒரு முறை தேனி மாவட்ட கலெக்டரை சந்தித்து பரிசுபெற சென்றபோது நானும் கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக பதிந்தது.

    இன்றைய பேச்சு எதிர்காலத்தில் நிச்சயமாக பெரிய மாற்றத்தத் தரும். படித்து முடிந்து நீங்கள் எந்த பொறுப்புக்கு சென்றாலும் உங்களுக்கென்று ஒரு சமுதாய பொறுப்பு இருக்கும். அதை சரியாக நிறை வேற்றுங்கள். நல்ல பேச்சாளராக தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். ஆழ்ந்த கருத்துக்களோடும், சிந்தனையோடும் பேச வேண்டும். இந்த சமுதாயத்தை உங்கள் பேச்சு மூலம் ஒரு அங்குலமாவது முன்னேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேச்சுப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 27 கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் மாநில ஒருங்கி ணைப்பாளர் அழகிரிசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கசாமி, விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாகனத்தின் மேல் ஏறுவது, பொதுமக்களை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
    • நமது சமுதாயத்தை சிறுமை படுத்தும் வகையில் ஆகிவிடும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முக்குலத்து சமுதாய இளைஞர்களே நம் முன்னோர்களின் விழாக்களான தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் குருபூஜை, ராஜராஜ சோழன் சதய விழாவிற்கு வரும் இளைஞர்கள் கண்ணியத்தையும், கட்டுப்பாடையும் பின்பற்ற வேண்டும்.

    வாகனத்தின் மேல் ஏறுவது, பொதுமக்களை அச்சுறுத்துவது, தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவது, பிற சமுதாய மக்களை பற்றி கோஷங்கள் எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

    இது நம்மையும், நமது சமுதாயத்தையும் சிறுமை படுத்தும் வகையில் ஆகிவிடும். மாலை அணிந்து விரதம் இருந்து வணங்குங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொருளாதார நெருக்கடியாலும், உரிய வழிகாட்டுதல் இல்லாததாலும் மாணவர்கள் வேலை தேடி செல்கின்றனர்.
    • மாணவர்கள் தங்கி பயிலக்கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மைய கட்டடம் கட்டி தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் மாரிமுத்து எம்.எல்.ஏ அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

    தமிழகத்திலேயே ஏழை,எளிய மக்கள் நிறைந்த பகுதியாக டெல்டா மாவட்டம் உள்ளது. அதில் திருத்துறைப்பூண்டி தொகுதி உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.

    இப்பகுதியில் ஆதிதிராவிடர் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இத்தொகுதியில் பெரிய தொழில் சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஏதும் இல்லை. இயற்கையின் பல இன்னல்களுக்கு மத்தியில் இப்பகுதி இளைஞர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.

    பொருளாதார நெருக்கடியாலும், உரிய வழிகாட்டுதல் இல்லாததாலும், பல மாணவ மாணவிகள் உயர்கல்வியை தொடராமல் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலத்திற்கு வேலை தேடி செல்கின்றனர்.

    இதனால் அவர்களின் கல்வியும் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாக உள்ளது. மிகவும் பின்தங்கிய இப்பகுதியில் படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்வது எட்டாக்கனியாக உள்ளது.

    ஆகையால் இப்பகுதியில் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டியாக தேர்வுகளை எதிர்கொள்ள விடுதியுடன் கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மையம் துவங்கினால் பேருதவியாக இருக்கும்.

    இப்பகுதியில் பயிற்சி மையம் துவங்கினால் ஆதிதிராவிட பட்டியல் இன சமூக மாணவர்களும், பிற சமூக மாணவர்களும் பெரும் பயனடைவார்கள்.

    ஆகையால் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் 100 மாணவர்கள் தங்கிப் பயில கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மைய கட்டடம், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கட்டித்தர வேண்டியும் அதே போல கோட்டூரில் மேற்ப்படி துறையின் மூலம் சமுதாயக்கூடம் கட்டடம் கட்டித்தர நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டியும்.

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் மாரிமுத்து எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்.

    • மதுரை கூட்டுறவு சங்கத்தில் ரூ.42 லட்சம் முறைகேடு செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, நாவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாவினிப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. நாங்கள் நடப்பு ஆண்டுக்கான விவசாய பயிர் கடன் பெற்று இருந்தோம். அதனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தி ரசீதும் பெற்றுள்ளோம்.

    நாங்கள் புதிய பயிர் கடன் பெறுவதற்காக வங்கிக்கு சென்றோம். அப்போது உங்களது பழைய கடன் வரவு ஆகவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் எங்களது சேமிப்பு கணக்கில் நாங்கள் செலுத்திய தொகை மற்றும் கரும்பு பில் தொகை ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளது.

    இதனை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் மோசடி- கையாடல் செய்த விவசாயிகளின் ரூ.42 லட்சத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 5000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
    • ஜனவரி மாதம் வரை, பயிர் கடன், நகை கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்டவற்றில் சுமார் ரூபாய் 3 கோடியே 52 லட்சம் முறைகேடு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளரி வெள்ளி ஊராட்சி பகுதியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த 5000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.இதன் தலைவராக அதே பகுதியை சேர்ந்த சத்தியபானு இருந்து வருகிறார்.

    இந்த சங்கத்தில் செயலாளராக இருந்த வேப்பமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 55), கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டுறவு சங்கத்தில் நிதி முறை கேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இது குறித்து கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் விசாரணையில் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்த மோகன் கடந்த ஜனவரி மாதம் வரை, பயிர் கடன், நகை கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்டவற்றில் சுமார் ரூபாய் 3 கோடியே 52 லட்சம் முறைகேடு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அவர் மீது தொடர் புகார்கள் எழுந்து வந்து வரும் நிலையில், மோகன் மற்றும் முறைகேட்டில் தொடர்புடைய பிற அலுவலர்கள் குறித்து கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தில் முன் திரண்ட அதன் வாடிக்கையாளர்கள், தங்கள் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்திருந்த நகை, மற்றும் ஈட்டு வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை உடனடியாக தங்களுக்கு திருப்பித் தரக் கூறி கூட்டுறவு சங்கத்தின் பிரதான கதவினை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் சங்கத்தின் பொறுப்பு செயலாளர் மணி மற்றும் பூலாம்பட்டி போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • 12ம் வகுப்பில் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.
    • 33 பேருக்கு ரூ 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பணப்பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம், சிறுபூலுபட்டி ரிங் ரோட்டில் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் இயங்கிவரும் டீ- செட் என்னும் திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் 27 -வது ஆண்டாக பிளஸ் 2 வகுப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா டீ- செட் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

    விழாவுக்கு டீ- செட் தலைவர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் துரைசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் டாக்டர் ராஜன் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது : -

    டீ- செட் போன்ற அமைப்புகள் தொடர்ந்து 27 வது ஆண்டாக மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஊக்கத்தொகை வழங்குவது மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தருவதுடன் அதனால் அவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் தருகிறார்கள். இதன் மூலம் இவர்கள் சமூகத்தின் பிள்ளைகளாக நிற்கிறார்கள்.

    மாணவர்கள் இளம்பருவத்தில் பரிசு தொகை கிடைத்தாலோ, அல்லது பாராட்டுக்கள் வந்தாலோ அவர்கள் வாழ்க்கையின் எல்லையை தொட்டு விட்டோம் என்று நினைத்து தன்னம்பிக்கை இழந்து விடுவது தான் தற்போது நடந்து வருகிறது. அதிக பரிசு வாங்கியவர்கள் தோல்வி அடைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் வாழ்க்கையில் லட்சியம் இருக்க வேண்டும். வாழ்க்கை முறையை, எண்ணங்களை மாற்றி நம்மால் முன்னேற முடியும். உங்கள் குணாதிசயங்கள் மற்றும் திறமைகளை மற்றவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். விருப்பமில்லாத துறையை எடுக்காமல் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள்.

    வாழ்க்கையில் குறைவான நாட்களில் வெற்றி அமையும் என்ற நினைப்பு வரக்கூடாது. அதிக நாட்கள் ஆனாலும் வெற்றியை அடைய முடியும் என்ற நிலையில் ஏற்றுக்கொள்வதுடன், நீங்களும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒரு நாள் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். நடுத்தரமாக படித்தவர்கள் எல்லாம் தற்போது நாட்டை முன்னேற்றம் அடைய உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் நாமும் நாட்டை முன்னேற்ற உழைப்பு கொடுப்பதுடன் நம் சமூகத்தை உயர்த்தவும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பண பரிசுகளை வழங்கினார். இதில் 600 க்கு 597 மதிப்பெண்கள் எடுத்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி சுதர்ஷிகா, 596 மதிப்பெண்கள் எடுத்த லிட்டில் பிளவர் பள்ளி மாணவர் தியா ராஜ் மற்றும் ஏவிபி பள்ளி மாணவர் ஹரிஷ், அதேபோல் 595 மதிப்பெண்கள் எடுத்த விவேகானந்தா பள்ளி மாணவி அபிநயா, பிரண்ட்லைன் பள்ளி மாணவி விஜயா உள்பட 33 பேருக்கு ரூ 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பணப்பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

    முடிவில் டீ- செட் பொருளாளர் தேவராஜன் நன்றி கூறினார். விழாவில் காந்திராஜன், சுதாமா, கோபாலகிருஷ்ணன் ,கோவிந்தராஜன் உள்பட டீ- செட் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவினை உடற்கல்வி ஆசிரியர் பழனிச்சாமி தொகுத்து வழங்கினார்.

    • கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது.
    • சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி தலைமை தாங்கினார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாக குழு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி தலைமை தாங்கினார். இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    குறிப்பாக வங்கி எல்கைக்கு உட்பட்ட நட்டாத்தி பஞ்சாயத்து பட்டான்டிவிளை கிராமத்தில் வாரத்தில் ஒரு நாள் செயல்படும் பகுதி நேர நியாய விலை கடையை 2 நாட்கள் திறந்து வைப்பது, கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    சங்க செயலாளர் சகுந்தலா தேவி வரவேற்றார். வங்கி பணியாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். காசாளர் கிருபாகரன் தவமணி நன்றி கூறினார்.

    ×