search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுபோட்டி"

    • தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 11-ந் தேதி பள்ளி, கல்லூரியில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
    • ேபாட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி விருது நகரில் வருகிற 11-ந் தேதி பள்ளி கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

    விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

    போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப் படும்.

    போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம்பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2ஆயிரம் வழங்கப்படும். மேலும் சிறப்பான பேச்சு திறனை வெளிப்படுத்தும் 2 அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.2ஆயிரம் சிறப்பு பரிசு வழங்கப்படும்.

    ேபாட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஜூலை 18-ந்தேதி “தமிழ்நாடு நாள் விழாவாக” இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு முதல்-அமைச்சராக பேரறிஞர் அண்ணா இருந்தபோது தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என ஜூலை 18-ந்தேதி பெயர் சூட்டினார்.

    அந்த நாளினை "தமிழ்நாடு நாள் விழாவாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இவ்விழாவினை கொண்டாடும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    மாவட்ட அளவில் கட்டுரை.

    பேச்சு ப்போட்டியில் வெற்றிபெறும் மாணவ ர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகள் நடைபெறும் இடம், நாள், நேரம், போட்டிக்கான தலைப்பு, விதிமுறைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவி க்கப்படும்.

    இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனி கொண்டாடப்படும்.
    • முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000-, மூன்றாம் பரிசு ரூ.5,000-வீதம் வழங்கப்பெறும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே "தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வறிவிப்பின் படி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெற உள்ளன.

    இதன்படி, வருகிற 18-ந் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை ) அன்று திருவாரூர் மாவட்ட த்திலுள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கு திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.

    போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தேர்வு செய்து அனுப்புவார். கட்டுரை போட்டிக்கு, தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள், பேச்சு போட்டிக்கு தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமி ழறிஞர் கலைஞரின் எழுதுகோல் தலைப்பு ஆகும்.

    போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்க ளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000-, மூன்றாம் பரிசு ரூ.5,000-வீதம் வழங்கப்பெறும்.

    பள்ளிகளில் பயிலும் மாணவ ,மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமுதாயத்தை பேச்சு மூலம் ஒரு அங்குலமாவது முன்னேற்ற வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
    • பேச்சுப் போட்டியில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப்போட்டி நடந்தது. விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேச்சுப்போட்டியை தொடங்கி வைத்தார்.

    அவர் பேசியதாவது:-

    தலைசிறந்த பேச்சா ளர்கள்தான் எதிர்காலத்தில் தலைவர்களாக உருவாகியுள்ளனர். சிறந்த பேச்சு ஒருவரது வாழ்வையே மாற்றக் கூடிய சக்தி படைத்தது. உலகின் ராஜ தந்திரத்தின் மிக முக்கிய பங்கு வகிப்பது, தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வார்த்தைதான்.

    ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். ஒரே கருத்தை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சொல்லாம். சொல்லை தேர்ந்தெடுத்து பேசுவதுதான் தனிமனித வாழ்க்கையின் வெற்றி.பள்ளி பருவத்தில் நானும் பல பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளேன். மாநில அளவிலான போட்டி யில் முதல் பரிசும் வென்றேன். ஒரு முறை தேனி மாவட்ட கலெக்டரை சந்தித்து பரிசுபெற சென்றபோது நானும் கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக பதிந்தது.

    இன்றைய பேச்சு எதிர்காலத்தில் நிச்சயமாக பெரிய மாற்றத்தத் தரும். படித்து முடிந்து நீங்கள் எந்த பொறுப்புக்கு சென்றாலும் உங்களுக்கென்று ஒரு சமுதாய பொறுப்பு இருக்கும். அதை சரியாக நிறை வேற்றுங்கள். நல்ல பேச்சாளராக தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். ஆழ்ந்த கருத்துக்களோடும், சிந்தனையோடும் பேச வேண்டும். இந்த சமுதாயத்தை உங்கள் பேச்சு மூலம் ஒரு அங்குலமாவது முன்னேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேச்சுப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 27 கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் மாநில ஒருங்கி ணைப்பாளர் அழகிரிசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கசாமி, விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நூலகம் குறித்து பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
    • வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் வரவேற்றார்.

    சீர்காழி:

    சீர்காழி கிளை நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய தேசிய நூலக வார நிறைவு விழா இரண்டாம் நிலை நூலகர் ஜெ.ஜோதி தலைமையில் நடைபெற்றது.

    காழிகம்பன் வெங்கடேசபாரதி, ச.மு.இ.மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் எம்.தங்கவேலு, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சு.வீழிநாதன், ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் வரவேற்றார்.

    தொடர்ந்து மாணவ-மாணவிகளின் நூலகம் குறித்து பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிறைவில் நூலக பணியாளர் க.ரகு நன்றிக்கூறினார்.

    • கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.
    • சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்

    திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற 28ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.

    இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்ளலாம்.

    பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயிலும் பள்ளி யின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

    மாவட்ட முதன்மை க்கல்வி அலுவலரால் முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதனடி ப்படையில் பரிந்துரைக்கப் பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    பள்ளி மாணவர்க ளுக்கான பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000-, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையில் பணப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவு ள்ளன.

    இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    ×