தேசிய நூலக வார நிறைவு விழா

நூலகம் குறித்து பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் வரவேற்றார்.
நூலக வார நிறைவு விழா.
நூலக வார நிறைவு விழா.
Published on

சீர்காழி:

சீர்காழி கிளை நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய தேசிய நூலக வார நிறைவு விழா இரண்டாம் நிலை நூலகர் ஜெ.ஜோதி தலைமையில் நடைபெற்றது.

காழிகம்பன் வெங்கடேசபாரதி, ச.மு.இ.மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் எம்.தங்கவேலு, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சு.வீழிநாதன், ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் வரவேற்றார்.

தொடர்ந்து மாணவ-மாணவிகளின் நூலகம் குறித்து பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவில் நூலக பணியாளர் க.ரகு நன்றிக்கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com