பெரியார் பிறந்தநாள் பேச்சுபோட்டி

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 11-ந் தேதி பள்ளி, கல்லூரியில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. ேபாட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
பெரியார் பிறந்தநாள் பேச்சுபோட்டி
Published on

விருதுநகர்

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி விருது நகரில் வருகிற 11-ந் தேதி பள்ளி கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப் படும்.

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம்பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2ஆயிரம் வழங்கப்படும். மேலும் சிறப்பான பேச்சு திறனை வெளிப்படுத்தும் 2 அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.2ஆயிரம் சிறப்பு பரிசு வழங்கப்படும்.

ேபாட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com