search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டூரில், சமுதாயக்கூட கட்டிடம் கட்ட வேண்டும்; அமைச்சருக்கு- எம்.எல்.ஏ. மனு
    X

    மாரிமுத்து எம்.எல்.ஏ.

    கோட்டூரில், சமுதாயக்கூட கட்டிடம் கட்ட வேண்டும்; அமைச்சருக்கு- எம்.எல்.ஏ. மனு

    • பொருளாதார நெருக்கடியாலும், உரிய வழிகாட்டுதல் இல்லாததாலும் மாணவர்கள் வேலை தேடி செல்கின்றனர்.
    • மாணவர்கள் தங்கி பயிலக்கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மைய கட்டடம் கட்டி தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் மாரிமுத்து எம்.எல்.ஏ அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

    தமிழகத்திலேயே ஏழை,எளிய மக்கள் நிறைந்த பகுதியாக டெல்டா மாவட்டம் உள்ளது. அதில் திருத்துறைப்பூண்டி தொகுதி உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.

    இப்பகுதியில் ஆதிதிராவிடர் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இத்தொகுதியில் பெரிய தொழில் சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஏதும் இல்லை. இயற்கையின் பல இன்னல்களுக்கு மத்தியில் இப்பகுதி இளைஞர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.

    பொருளாதார நெருக்கடியாலும், உரிய வழிகாட்டுதல் இல்லாததாலும், பல மாணவ மாணவிகள் உயர்கல்வியை தொடராமல் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலத்திற்கு வேலை தேடி செல்கின்றனர்.

    இதனால் அவர்களின் கல்வியும் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாக உள்ளது. மிகவும் பின்தங்கிய இப்பகுதியில் படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்வது எட்டாக்கனியாக உள்ளது.

    ஆகையால் இப்பகுதியில் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டியாக தேர்வுகளை எதிர்கொள்ள விடுதியுடன் கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மையம் துவங்கினால் பேருதவியாக இருக்கும்.

    இப்பகுதியில் பயிற்சி மையம் துவங்கினால் ஆதிதிராவிட பட்டியல் இன சமூக மாணவர்களும், பிற சமூக மாணவர்களும் பெரும் பயனடைவார்கள்.

    ஆகையால் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் 100 மாணவர்கள் தங்கிப் பயில கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மைய கட்டடம், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கட்டித்தர வேண்டியும் அதே போல கோட்டூரில் மேற்ப்படி துறையின் மூலம் சமுதாயக்கூடம் கட்டடம் கட்டித்தர நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டியும்.

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் மாரிமுத்து எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்.

    Next Story
    ×