search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமுதாயம்"

    • இன்றைய சமுதாயம் நூல்களை விட்டு தூரமாக சென்று கொண்டிருக்கிறது என நூலக இயக்குனர் பேசினார்.
    • சேதுக்கரசி வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றி கூறினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் செயல்பட்டு வரும் 'உலகம் சுற்றிய தமிழர்' சோமலெ நினைவு கிளை நூலகத்தில் நூலகர் தின விழாவும், 'தொல்காப்பியச்செம்மல் தமிழண்ணலின் 95- வது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

    நூலகர் அகிலா வரவேற் றார். சிறப்பு விருந்தி னராக புதுக்கோட்டை மாவட்ட ஞானாலயா ஆய்வு நூலகத்தின் இயக்குநர் பா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லுர் கிளை நூலகர் செல்வகுமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் நூலக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

    நெற்குப்பையில் பிறந்த மும்மூர்த்திகளான அறிஞர் சோமலெ, தமிழண்ணல், சம்பந்தம் ஆகியோர் தமிழ் மொழி பற்றாளர்களாகவும், சமூக சிந்தனை உடைய வர்களாகவும், கல்விக்காக தங்கள் வாழ்நாள் முழுவ தையும் அர்ப்பணித்ததோடு பெரும் புரவலர்களாகவும் வாழ்ந்து சென்றுள்ளார்கள் என்பதை நினைக்கும் போது இந்நேரத்தில் மட்டற்ற மகிழ்ச்சி அடை கின்றேன். மேலும் இன்றைய இளைய சமுதாயம் நூல்களை விட்டு தூரமாக சென்று கொண்டி ருக்கிறார்கள்.

    இதை பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது. பெற்றோர்களாகிய நாம் என்னதான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினாலும் உலக அறிவு சார்ந்த விஷயங்களை ஒவ்வொரு வருக்கும் கற்றுத் தருவதும் அதன் மூலம் பல சாத னைகள் புரிந்திட வழிவகை செய்வதும் இந்த நூலகம் தான். எனவே மாணவர்கள் ஆகிய நீங்கள் இதனை நன்கு புரிந்து கொண்டு பெரிய அறிஞர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் சமூக சிந்தனை உடையவர் களாகவும் மாற அன்றாட வாழ்வில் நீங்கள் நூலக தொடர்புடையவராக மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நல் மாணவ வாசகர் களுக்கான விருதுகள் நெற்குப்பை நூலகத்தை நன்கு பயன்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.

    இதில் சோமலெ சோமசுந்தரம், பேராசிரியர் விஸ்வநாதன், சிவகங்கை மாவட்ட நூலக கண்காணிப் பாளர் சு.சண்முக சுந்தரம், மாவட்ட நூலக இருப்பு சரிபாப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் பங்குபெற்றனர். நிறைவாக சேதுக்கரசி வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றி கூறினார்.

    • சமுதாயத்தை பேச்சு மூலம் ஒரு அங்குலமாவது முன்னேற்ற வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
    • பேச்சுப் போட்டியில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப்போட்டி நடந்தது. விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேச்சுப்போட்டியை தொடங்கி வைத்தார்.

    அவர் பேசியதாவது:-

    தலைசிறந்த பேச்சா ளர்கள்தான் எதிர்காலத்தில் தலைவர்களாக உருவாகியுள்ளனர். சிறந்த பேச்சு ஒருவரது வாழ்வையே மாற்றக் கூடிய சக்தி படைத்தது. உலகின் ராஜ தந்திரத்தின் மிக முக்கிய பங்கு வகிப்பது, தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வார்த்தைதான்.

    ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். ஒரே கருத்தை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சொல்லாம். சொல்லை தேர்ந்தெடுத்து பேசுவதுதான் தனிமனித வாழ்க்கையின் வெற்றி.பள்ளி பருவத்தில் நானும் பல பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளேன். மாநில அளவிலான போட்டி யில் முதல் பரிசும் வென்றேன். ஒரு முறை தேனி மாவட்ட கலெக்டரை சந்தித்து பரிசுபெற சென்றபோது நானும் கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக பதிந்தது.

    இன்றைய பேச்சு எதிர்காலத்தில் நிச்சயமாக பெரிய மாற்றத்தத் தரும். படித்து முடிந்து நீங்கள் எந்த பொறுப்புக்கு சென்றாலும் உங்களுக்கென்று ஒரு சமுதாய பொறுப்பு இருக்கும். அதை சரியாக நிறை வேற்றுங்கள். நல்ல பேச்சாளராக தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். ஆழ்ந்த கருத்துக்களோடும், சிந்தனையோடும் பேச வேண்டும். இந்த சமுதாயத்தை உங்கள் பேச்சு மூலம் ஒரு அங்குலமாவது முன்னேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேச்சுப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 27 கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் மாநில ஒருங்கி ணைப்பாளர் அழகிரிசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கசாமி, விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • வட்டார மருத்துவ அலுவலர் கலந்துகொண்டார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் சமுதாய கூடத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், பாரிவள்ளல், ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று 100 கர்ப்பிணிகளுக்கு சீதனப்பொருட்களை வழங்கினர்.

    அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் 7 வகையான உணவுகளை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பரிமாறினார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அர்ச்சனா, வட்டார மருத்துவர் கோபி கிருஷ்ணராஜா. குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் (கூடுதல் பொறுப்பு) சூர்யா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • வாகனத்தின் மேல் ஏறுவது, பொதுமக்களை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
    • நமது சமுதாயத்தை சிறுமை படுத்தும் வகையில் ஆகிவிடும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முக்குலத்து சமுதாய இளைஞர்களே நம் முன்னோர்களின் விழாக்களான தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் குருபூஜை, ராஜராஜ சோழன் சதய விழாவிற்கு வரும் இளைஞர்கள் கண்ணியத்தையும், கட்டுப்பாடையும் பின்பற்ற வேண்டும்.

    வாகனத்தின் மேல் ஏறுவது, பொதுமக்களை அச்சுறுத்துவது, தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவது, பிற சமுதாய மக்களை பற்றி கோஷங்கள் எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

    இது நம்மையும், நமது சமுதாயத்தையும் சிறுமை படுத்தும் வகையில் ஆகிவிடும். மாலை அணிந்து விரதம் இருந்து வணங்குங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொருளாதார நெருக்கடியாலும், உரிய வழிகாட்டுதல் இல்லாததாலும் மாணவர்கள் வேலை தேடி செல்கின்றனர்.
    • மாணவர்கள் தங்கி பயிலக்கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மைய கட்டடம் கட்டி தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் மாரிமுத்து எம்.எல்.ஏ அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

    தமிழகத்திலேயே ஏழை,எளிய மக்கள் நிறைந்த பகுதியாக டெல்டா மாவட்டம் உள்ளது. அதில் திருத்துறைப்பூண்டி தொகுதி உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.

    இப்பகுதியில் ஆதிதிராவிடர் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இத்தொகுதியில் பெரிய தொழில் சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஏதும் இல்லை. இயற்கையின் பல இன்னல்களுக்கு மத்தியில் இப்பகுதி இளைஞர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.

    பொருளாதார நெருக்கடியாலும், உரிய வழிகாட்டுதல் இல்லாததாலும், பல மாணவ மாணவிகள் உயர்கல்வியை தொடராமல் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலத்திற்கு வேலை தேடி செல்கின்றனர்.

    இதனால் அவர்களின் கல்வியும் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாக உள்ளது. மிகவும் பின்தங்கிய இப்பகுதியில் படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்வது எட்டாக்கனியாக உள்ளது.

    ஆகையால் இப்பகுதியில் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டியாக தேர்வுகளை எதிர்கொள்ள விடுதியுடன் கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மையம் துவங்கினால் பேருதவியாக இருக்கும்.

    இப்பகுதியில் பயிற்சி மையம் துவங்கினால் ஆதிதிராவிட பட்டியல் இன சமூக மாணவர்களும், பிற சமூக மாணவர்களும் பெரும் பயனடைவார்கள்.

    ஆகையால் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் 100 மாணவர்கள் தங்கிப் பயில கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மைய கட்டடம், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கட்டித்தர வேண்டியும் அதே போல கோட்டூரில் மேற்ப்படி துறையின் மூலம் சமுதாயக்கூடம் கட்டடம் கட்டித்தர நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டியும்.

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் மாரிமுத்து எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்.

    ×