search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha Chaturthi"

    • விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • ஏலம் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தெலங்கானா மாநிலம், ஐதராபாத்-பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அத்துடன் விநாயகருக்கு லட்டு பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிலையில், விநாயகர் விஜர்சனம் நடைபெறுவதற்கு முன்பு விநாயகருக்கு வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு ஏலம் விடப்படும்.

    அதன் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.1.20 கோடிக்கு ஏலம் போனது. இதனை அதே பகுதியில் வசிக்கும் ஒட்டு மொத்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வாங்கிக் கொண்டனர். கடந்த ஆண்டு விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.60.80 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 40 வருடங்களாக இந்த காலனியில் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம்.
    • ஒரு தனித்துவமான கருபொருளுடன் விநாயகப் பெருமானை வடிவமைத்து பிரதிஷ்டை செய்கிறோம்.

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சில இடங்களில் விநாயகர் சிலைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் விநாயகப் பெருமானின் பல்வேறு வடிவங்களை காட்சிபடுத்தி உள்ளனர். அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் ஜெய்ராம்பூர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பந்தலில் விநாயகப் பெருமானின் 108 விதமான வடிவங்களில் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

    சங்கு, சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ், சாய்பாபா, சிவன், கிருஷ்ணா மற்றும் பல வடிவங்களில் சிலைகள் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அனில் ஆகா கூறுகையில், நாங்கள் கடந்த 40 வருடங்களாக இந்த காலனியில் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம். ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கருபொருளுடன் விநாயகப் பெருமானை வடிவமைத்து பிரதிஷ்டை செய்கிறோம். இந்த ஆண்டு 108 விதமான வடிவங்களில் விநாயகப் பெருமானை சித்தரித்துள்ளோம் என்றார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 1000 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினர்
    • பொதுமக்கள் எராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அம்பூர்பேட்டையில் ஸ்ரீ அரசமர விநாயகர் சதுர்த்தி விழாக்குழு அறக்கட்டளை சார்பில் 26-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதன் தலைவர் கே.மோகன் தலைமையில் நடைபெற்றது.இதில் உறுப்பினர்கள் வி.எஸ்.சரவணன், ஏ.ஐய்ப்பன், செயலாளர் எம்.விஜய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம். நாகேந்திர குமார், நகரமன்ற உறுப்பினர்கள் பா.சாந்தி பாபு, மா.பா சாரதி, சித்ரா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக நகர கூட்டுறவு வங்கி தலைவரும் நகர திமுக செயலாளருமான வி.எஸ்.சாரதி குமார் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள், ஏழை பெண்கள் 5 பேருக்கு தையல் இயந்திரங்கள், 1000 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிவப்பிர காசம், ஆர்.டி.கிரி, தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.சிரஞ்சீவி, விழாக்குழு பொருளாளர் எஸ்.கணேசன், துணை தலைவர் ஆர். ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் நரேஷ், ஜோதீஸ்வரன், ஆர்.வி. கெளசிகரம், ஜி. தீனு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் விழாக்குழு பொருளாளர் ஏ.பாலமுருகன் நன்றி கூறினார்.

    • அபிராமம் நவசக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
    • சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள் உருவ படத்தை திறந்து வைத்தார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் நவசக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மின்னொளி அலங்கார தேரில் விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் முன்பு ஏராளமான பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து சென்றனர். அபிராமம் பேரூராட்சி தலைவரும், தி.மு.க. நகரச் செயலாளருமான ஜாகிர் உசேன் விழாவிற்கு தலைமை தாங்கி முளைப் பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள் உருவ படத்தை திறந்து வைத்தார். விழாவில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் போத்தி, வார்டு கவுன்சிலர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அப்பகுதியினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி துணைத் தலைவர் மாரி, கோவில் நிர்வாகி நாகராஜன், மற்றும் அகமுடையார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • முகேஷ் அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றது.
    • இதில் கலந்து கொள்ள பல்வேறு பாலிவுட் நடிகர், நடிகைகள் வருகை தந்தனர்.

    மும்பை:

    ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு மும்பையில் பிரமாண்ட வீடு உள்ளது. அன்டிலியா இல்லம் என அழைக்கப்படும் இந்த வீடு மொத்தம் 27 மாடிகளைக் கொண்டது. நீச்சல் குளம் முதல் ஹெலிபேட் வரை பல்வேறு ஆடம்பர வசதிகள் இங்கு உள்ளன.

    இந்நிலையில், இந்த அன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் வருகை தந்தனர்.

    நடிகர் சல்மான் கான், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக் நடிகை ரேகா, ஹேமமாலினி, தீபிகா படுகோன், ஜெனிலியா, அனன்யா பாண்டே, கரீஷ்மா கபூர், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரேவும் வருகை தந்தனர்.

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஜவான் திரைப்பட இயக்குனர் அட்லி, அவரது மனைவி பிரியா ஆகியோரும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

    • விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த செம்பூரில் விநாயகர் சதுர்த்தி 2-ம் நாள் பூஜையில் 1008 பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்த பிஸ்கட் அலங்கார விநாயகரை வந்தவாசியைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வியப்புடன் பார்த்து தரிசனம் செய்தனர்.

    • "பிளாஸ்டர் ஆப் பாரீஸ்" ரசாயனம் பயன்படுத்தப்படாத சிலைகள் என சிலை வைத்துள்ள அமைப்பினர் கூறி அனுமதி வாங்கியுள்ளனர்.
    • நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும்.

    மாமல்லபுரம்:

    இன்று விநாயகர் சதூர்த்தி கொண்டாட வைக்கப்படும் சிலைகளை மாமல்லபுரம் கடலில் வரும் 24ம் தேதி கரைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்., செங்கல்பட்டு மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 365 சிலைகளும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்படி "பிளாஸ்டர் ஆப் பாரீஸ்" ரசாயனம் பயன்படுத்தப்படாத சிலைகள் என சிலை வைத்துள்ள அமைப்பினர் கூறி அனுமதி வாங்கியுள்ளனர்.

    இந்த சிலைகளை செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளான மாமல்லபுரம், சதுரங்கபட்டினம், கடலூர், கடப்பாக்கம், பெரியகுப்பம் பகுதிகளுக்கு பக்தர்கள் கரைக்க வரும் போது சிலைகள் பரிசோதனை செய்யப்படும் அதில் ரசாயன கலவை இருப்பது தெரியவந்தால் கடலில் கரைக்க அனுமதி கிடையாது. அதேபோல் சிலைகளை மாட்டு வண்டி, மீன்பாடி ஆட்டோ, ரிக்ஷா, தள்ளுவண்டி போன்றவைகளில் கொண்டுவரவும் அனுமதி கிடையாது. டிராக்டர், மினிலாரி, வேன் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
    • பூக்கள் விலை அதிகரிப்பு

    வேலூர்:

    விநாயகர் சதூர்த்தி வீடுகள் மட்டுமின்றி வீதிகளிலும், இந்து முன்னணி, இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி விசுவ இந்து பரிஷத் என பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து பண்டிகை கோலாகலமாக கொண் டாடப்படுகிறது.

    இதற்காகமுக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுவதுடன், பல் வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

    இதனால் ஒவ்வொரு பகுதியிலும் வீதிகள் களைகட்டியுள்ளன. இதற்காக பல்வேறு வடிவங்களில் கண்ணைக் கவரும் வண்ணங்களுடன், சித்தி விநாயகர், சித்தி புத்தி விநாயகர், கற்பக விநாயகர், வீர விநாயகர், விஸ்வரூப விநாயகர் என பல வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு விழா நடக்கும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் மதியம் 12 மணிக்கு தொடங்கி அறிவிக்கபட்ட இடத்துக்கு மாலை 4 மணிக்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு விழா குழுவினரை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வ தையொட்டி மாவட்டம் முழுவதுமு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. பஸ் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். அதேபோல் திருவண்ணா மலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந் தது. விநாயகர் சிலைகள் மட்டுமின்றி பூஜைக்கு உரிய பூக்கள், பழங்கள், பூசணிக்காய் மற்றும் குடை உள்ளிட்ட பூஜை பொ ருட்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் வேலூர் கிருபானந்தவா ரியார் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    வேலூர் நேதாஜி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ முல்லை ரூ.1700-க்கும், மல்லி ரூ.1000-க்கும், ஜாதிமல்லி ரூ.2500-க்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும், சாமந்தி ரூ.340-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • மழலையர் பிரிவு மாணவர்கள் விநாயகர் போல வேடமிட்டு அசத்தல்
    • களிமண்ணாலான விதை விநாயகரை செய்து விழிப்புணர்வு

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அடுத்த புஜங்கனூர் விநாயக வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலாதேவி தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சர்லின் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பட்டய கணக்கர் கோபிநாத் கலந்துகொண்டு பேசினார். மழலையர் பிரிவு மாணவ-மாணவியர்கள் விநாயகர் போல் வேடமிட்டு விழாவிற்கு அழகுசேர்த்தனர். பின்னர் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் களிமண்ணாலான விதை விநாயகரை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • போலீஸ் சூப்பிரண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர்.

    நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் கலந்து கொண்டு அணிவகுப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    வாணியம்பாடி பஸ் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் சி.எல்.ரோடு, கச்சேரி ரோடு, கணியம்பாடி தெரு, பூக்கடை பஜார், பொண்ணியம்மன் கோவில், திருவள்ளூவர் தெரு, ஆசிரியர் நகர், காதர்பேட்டை என முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    • விநாயகப் பெருமானுடைய சிறப்பினை உணர்த்த விநாயகர் புராணம் உள்ளது.
    • முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும்.

    எந்த ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்கு மென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.

    விநாயகப்பெருமானுடைய சிறப்பினை உணர்த்த, விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாக தாம் உணர்ந்த விநாயக புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் இப்புராணத்தை 250 பிரிவுகளையுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயிரம் சுலோகங்களாக "ஸ்ரீ விநாயகர் புராணம்" பாடினார்.

    விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப்பெருமான் எடுத்த பன்னிரண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன. அந்த அவதாரங்களில் அவர், வக்கிரதுண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மயூரேசர், பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது.

    பார்வதி தேவி மண்ணால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து ஸ்ரீ விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுகின்றோம்.

    மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.

    விநாயக சதுர்த்தி வழிபாட்டினால் 1. தர்மம், 2. பொருள், 3. இன்பம், 4. சௌபாக்கியம், 5. கல்வி, 6. பெருந்தன்மை, 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,8. முக லக்ஷணம், 9. வீரம், 10. வெற்றி, 11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல், 12. நல்ல சந்ததி, 13. நல்ல குடும்பம், 14. நுண்ணறிவு, 15. நற்புகழ், 16. சோகம் இல்லாமை, 17. அசுபங்கள் அகலும், 18. வாக்கு சித்தி, 19. சாந்தம், 20. பில்லி சூனியம் நீங்குதல், 21. அடக்கம் ஆகிய 21 விதமான பேறுகள் கிடைக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.
    • விநாயகரை வழிபட்டு வர துன்பங்கள் விலகும்.

    பிடித்து வைத்தால் பிள்ளையார்

    பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களை செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணைய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும். இதனைத் தான் "பிடித்து வைத்தால் பிள்ளையார்" என்று வேடிக்கைப் பழமொழியாக சொல்கிறார்கள்.

    மோதக தத்துவம்

    அரிசி மாவுக்குள் பூரணம் வைத்து கொழுக்கட்டை தயாரித்து விநாயகருக்குப் படைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. அரிசி மாவு சுவையற்றதாக உள்ளது. ஆனால் அதனுள் இருக்கும் பூரணம் சுவையானது. சுவையில்லாத அரிசி மாவு சுவையுள்ள வெல்லத்துடன் சேரும்போது எவ்வாறு விருப்பமுடன் உண்ணும் திண்பண்டமாக மாறுகிறதோ அதுபோல பக்தி கலந்த வாழ்க்கையே சுவையுள்ளதாக இருக்கும் என்று உணர்த்துகிறது இந்த மோதக தத்துவம்.

    உருவ தத்துவம்

    யானைத்தலையும், பெருவயிறும் மனித, உடலும் ஐந்து கைகளும் கூடிய ஒரு விந்தையான வடிவே பிள்ளையார் வடிவம். அவருக்கு இடையின் கீழ் மனித உடம்பு, இடைக்கு மேலே கழுத்து வரை தேவ உடம்பு, அதற்கு மேலோ விலங்கின் தலை. ஒரு கொம்பு ஆண்தன்மையையும், மற்றொரு கொம்புபெண் தன்மையையும் குறிக்கும். யானைத்தலை அஃறிணை, தெய்வ உடம்பு உயர்திணை. இவற்றை உற்று நோக்கி ஆராய்ந்தால் பிள்ளையார் தேவராய், மனிதராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அஃறிணையாய் விளங்குகிறார் என்ற உண்மை புலப்படும். உலகங்களைத் தன்னுள் அடக்கி இருக்கிறார் என்பதை குறித்திடவே பெருவயிறு அமைந்துள்ளது. துதிக்கை வலது புறம் திரும்பி இருப்பது(வலம்புரி) யோகத்தை குறிக்கிறது.

    கடன்கள் தீர்க்கும் ஸ்ரீ  ருண மோசன கணபதி

    ருணம் என்றால் கடன் என்றுபொருள், மோசனம் என்றால் விடுபடச்செய்தல் என்று பொருளாகும். நம்மை கடன் தொல்லைகளில் இருந்து மீளச்செய்பவரே 'ருணமோசன கணபதி' கோவில்களுக்கு சென்று இம்மூன்று கடன்களையும் தீர்க்க முடியாதவர்கள் ருணமோசன கணபதியை வழிபாடு செய்து கடன்களை தீர்க்கலாம். அவருக்கான ருணஹரகணேச ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்வது கடன்களை தீர்க்க உதவும்.

    நீரில் ஏன் கரைக்கிறார்கள்?

    ஒரு சமயம் பார்வதிதேவி கங்கையில் நீராடியபோது தன் அழுக்கை திரட்டி பொம்மையாக்க, அது யானைத்தலையும் மனித உருக்கொண்டும் அமைந்தது. அதை அன்னை கங்கையில் எறிய பெரிய உருவத்துடன் விநாயகர் வெளிப்பட்டார் அப்போது பார்வதிதேவியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்திக்கொண்டனர். இக்காரணத்தால் பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னை ஆனார்கள். இதனாலேயே சதுர்த்தி முடிந்த தும் பிளளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

    தோப்புக்கரணம் போடும் முறை

    விநாயகர் முன் நின்றவுடன் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது நம் மரபு. ஏன் இப்படித் தோப்புக்கரணம் போடவேண்டும் என்பதற்க்கு புராணக்கதை ஒன்று உள்ளது. ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் மையுமாக வந்துக் கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகர் அக்கமண்டல நீரை தட்டிவிட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஒடியது. காகம் தட்டியதால் விரிந்து பரந்த நீராக ஒடியது என்பதால் "காவிரி" என்று பெயர் அந்நதிக்கு உண்டானது. அகத்தியர் தட்டிவிட்ட காகத்தை திரும்பி பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் கொழுகொழு என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவர் தான் கணபதி. செய்த செயலுக்காக முனிவரைப் பார்த்து சிரித்தான்.

    கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரைக் கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால் சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றார். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர் அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். அது முதல் விநாயகருக்கு தோப்புகரணம் இடும் முறை உண்டானது.

    5 தடவை குட்டுங்கள்

    எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் `சுக்லாம்பரதம்' சொல்வோம். இதற்கு விநாயகர் அவர் எல்லாமுமாக இருக்கிறார் என்பது பொருள். அந்த சுலோகத்தை சொல்லி பாருங்கள் தெரியும். இந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம். மனித உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என ஏழு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் சுவாச நடப்பு நடக்கிறது. மேலும் சிரசில் இருக்கும் சஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்புகளின் வழியே சுவாசத்தோடு பாய்வதற்சாகவே சிரசில் குட்டிக் கொள்கிறோம்.

    கேது திசை நாயகன்

    ஜாதக ரீதியாக கேது புத்தி, கேது திசை ஆகியவை நடைபெறும் ஜாதகர்கள் விநாயகரை வழிபட்டு வர துன்பங்கள் விலகும். இன்பம் பெருகும். திங்கட்கிழமை தோறும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் நன்மை பெருகும்.

    ×