search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு
    X

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு

    • விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
    • பூக்கள் விலை அதிகரிப்பு

    வேலூர்:

    விநாயகர் சதூர்த்தி வீடுகள் மட்டுமின்றி வீதிகளிலும், இந்து முன்னணி, இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி விசுவ இந்து பரிஷத் என பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து பண்டிகை கோலாகலமாக கொண் டாடப்படுகிறது.

    இதற்காகமுக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுவதுடன், பல் வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

    இதனால் ஒவ்வொரு பகுதியிலும் வீதிகள் களைகட்டியுள்ளன. இதற்காக பல்வேறு வடிவங்களில் கண்ணைக் கவரும் வண்ணங்களுடன், சித்தி விநாயகர், சித்தி புத்தி விநாயகர், கற்பக விநாயகர், வீர விநாயகர், விஸ்வரூப விநாயகர் என பல வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு விழா நடக்கும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் மதியம் 12 மணிக்கு தொடங்கி அறிவிக்கபட்ட இடத்துக்கு மாலை 4 மணிக்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு விழா குழுவினரை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வ தையொட்டி மாவட்டம் முழுவதுமு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. பஸ் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். அதேபோல் திருவண்ணா மலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந் தது. விநாயகர் சிலைகள் மட்டுமின்றி பூஜைக்கு உரிய பூக்கள், பழங்கள், பூசணிக்காய் மற்றும் குடை உள்ளிட்ட பூஜை பொ ருட்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் வேலூர் கிருபானந்தவா ரியார் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    வேலூர் நேதாஜி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ முல்லை ரூ.1700-க்கும், மல்லி ரூ.1000-க்கும், ஜாதிமல்லி ரூ.2500-க்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும், சாமந்தி ரூ.340-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×