search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dharmendra pradhan"

    • தேர்வுகளின்போது மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனை பராமரிக்க வேண்டும்.
    • நாம் சாப்பிடும் உணவுதான் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், மன நலனையும் தீர்மானிக்கிறது.

    கடுமையான போட்டி சூழலில் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர்.

    குறிப்பாக தேர்வு நேரத்தில் கல்வி மற்றும் செயல்திறன் குறித்த அழுத்தத்தை மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலை மிக முக்கியமாக கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

    இதுபோன்ற அழுத்தம் மாணவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை வெகுவாக பாதிக்கிறது. தேர்வுக்கான தயார்நிலை முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருப்பதை முக்கியமாக பார்க்க வேண்டும். படிப்புக்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் இடையில் ஒரு நியாயமான நல்ல சமநிலையை பராமரிப்பது மிக முக்கியமானது.

    உடற்பயிற்சி

    தேர்வுகளின்போது மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனை பராமரிக்க வேண்டும். அதற்கு குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    வழக்கமான உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது அறிவாற்றல் செயல்பாடு மற்றும் படித்தவற்றை நினைவுபடுத்தும் திறனை மேம்படுத்துகிறது. இவை இரண்டும் தேர்வு எழுதுவதற்கான செயல்திறனை மேம்படுத்த முக்கியமானவை.

    தேர்வுக்கு தயாராகும்போது, மாணவர்கள் ஆரோக்கியத்தை விட படிப்புக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். நடைபயிற்சி, யோகா போன்ற சில வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இது மன அழுத்தத்தை கணிசமாக குறைக்கும். மாணவர்கள் தங்கள் மனதை புதுப்பிக்க உதவி செய்யும்.

    நல்ல தூக்கம்

    நாம் சாப்பிடும் உணவுதான் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், மன நலனையும் தீர்மானிக்கிறது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சீரான உணவை உட்கொள்வது மூளை செயல்பாட்டிற்கு தேவையான சக்தியை வழங்குகிறது.

    போதுமான நீர்ச்சத்தை நாம் கொண்டிருக்கிறோமா என்பதில் அக்கறையின்மை உள்ளது. திட உணவுக்கு சமமாக நீர்ச்சத்து முக்கியமானது. நீர்ச்சத்து இல்லாதது அறிவாற்றல் திறனையும், செரிமானத்தையும் வெகுவாக பாதிக்கும்.

    மாணவர்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு சென்று காலையில் விழித்து சீரான தூக்க நடைமுறைகளைப் பராமரிக்க வேண்டும். இரவு நேரத்தில் முறையான தூக்கத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் எப்போதும் சிறப்பான நினைவாற்றலுடன் படிக்க முடியும். நல்ல தூக்கம் என்பது சிறந்த ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும்.

    தியானம்

    மன அழுத்தம், பதற்றம், பிற மனநல பிரச்சனைகளை கையாள மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதை முன்னுரிமையாக கொண்டிருக்க வேண்டும்.

    தேர்வுகளின்போது மன அழுத்தங்கள் குறித்து மாணவர்கள் வெளிப்படையாக பெற்றோர் அல்லது ஆசிரியர் அல்லது ஆலோசகர்களிடம் தெரிவிப்பதை ஊக்குவிக்க வேண்டும். உளவியல் ரீதியாக மாணவர்கள் சிக்கி கொள்ளாமல் அவர்களை திறம்பட கையாள வேண்டும்.

    தேர்வு மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க தியானம் ஒரு கருவியாக இருக்கும். தியானம், ஆழ்ந்த சுவாசம், யோகா போன்ற பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். இது, மனதை அமைதிப்படுத்தவும், கவன சிதறலை தடுக்கவும், பதற்றத்தை குறைக்கவும் உதவும்.

    நேர நிர்வாக யுக்தி

    கடைசி நிமிட பதற்றத்தை குறைக்க மாணவர்கள் படிக்கும் நேரத்தை நிர்வகிப்பதற்கான யுக்திகளை கையாள வேண்டும்.

    மின்னணு ஊடகத்தை அதிகமாக மாணவர்கள் சார்ந்துள்ளனர். செல்போன், மடிக்கணினி போன்றவற்றில் அதிக நேரத்தை மாணவர்கள் செலவிடுகின்றனர். இதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

    இன்றைய காலகட்டத்தில் மின்னணு ஊடகம் இன்றியமையாததாகி விட்டது. தேர்வுக்கு மாணவர்கள் தாயாராவதற்கு சில மணி நேரங்களை சேமிக்க செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விலகி இருப்பது மிக அவசியம் ஆகும்.

    வெற்றியை ஒருங்கிணைக்கும்

    தேர்வுகளின் போது மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனை வளர்ப்பது அவர்களின் ஒட்டுமொத்த வெற்றியை ஒருங்கிணைக்கும்.

    மாணவர்களின் நல்வாழ்வை கவனித்துக்கொள்வது அவர்களின் கல்வி செயல்திறனை மேம்படுத்தும். இவை தேர்வு அறைக்கு அப்பால் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவர்களை தயார்படுத்துகிறது.

    தேர்வு மன அழுத்தத்தை திறம்பட கையாளுவதன் மூலம், நமது இளம் மாணவர்கள், தங்கள் திறனுக்கு ஏற்ப செயல்படுவார்கள்.

    இதன்மூலம் 2047-ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்குகளை அடையும் வகையில் நம்பிக்கையான மற்றும் முன்னோக்கி செல்லும் இளைஞர்களாக உருவெடுப்பார்கள்.

    • எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • சீதாராம் யெச்சூரி 22-ந்தேதி கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என அறிவிப்பு.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாராகியுள்ளது. வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாதனைப் படைத்தவர்கள், விருது பெற்றவர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர் தங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    சில தலைவர்கள் தங்களுக்கு அழைப்பிதழ் வந்ததாகவும், தாங்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ளமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். அதற்கு காரணம் ராமர் கோவிலை வைத்து பா.ஜனதா ஆதாயம் பார்க்க நினைக்கிறது என விமர்சனம் செய்வதுதான்.

    இந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் "பல வருட போராட்டங்களுக்குப் பிறகு ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. ராமர் பக்தர்கள் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.

    எல்லோரும் 22-ந்தேதி அயோத்தி சென்று கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முடியாது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு உத்தர பிரதேச மாநிலம் அரசு மற்றும் கோவில் கமிட்டி ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மக்கள் செல்ல முடியும். சிலர் கலந்து கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். அவர்களை அனுமன் அழைத்து வருவார்.

    இவ்வாறு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ளமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜனதா ராமர் கோவிலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

    உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தலைவரான சஞ்சய் ராவத், அவரது கட்சி தொண்டர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ளமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதெல்லாம் அரசியல். பா.ஜனதா நடத்தில் நிகழ்ச்சியில் யார் கலந்த கொள்வார்கள்? இது தேசிய நிகழ்ச்சி இல்லை. இது பா.ஜனதாவின் நிகழ்ச்சி. பா.ஜனதாவின் பேரணி. பா.ஜனதா நிகழ்ச்சி முடிந்த பின்னர் நாங்கள் அயோத்தி செல்வோம் என்றார்.

    இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, அழைப்பிதழ் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அயோத்தி செல்வேன். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதைவிட, யோசிக்க ஒன்றுமில்லை என்றார்.

    • மாணவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கி அவர்களை உற்சாகப்படுத்த மத்திய கல்வித்துறை ஏற்பாடு.
    • கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    பள்ளி பொதுத் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை நடத்தி வருகிறது.

    தேர்வு பயம் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைப் போக்கி தேர்வு நடைமுறையை உற்சாகமாகக் கொண்டாடுவதற்கு அவர்களை தயார் படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டிற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள்,ஆன்லைன் மூலம் நடத்தப்படும் போட்டி மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுடன் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

    இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://innovateindia.mygov.in/ppc-2023/ என்ற இணைய தளம் மூலம் வரும் 30ந் தேதிவரை பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பிரதமருடனான தேர்வு குறித்த உரையாடல் நிகழ்ச்சியில் அதிக அளவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளுமாறு மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • தமிழுக்கு மகாகவி பாரதியார் ஆற்றிய பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
    • வாரணாசியில் காசி–தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 16ந் தேதி முதல் நடைபெறுகிறது.

    காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே இருந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உறவுகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு மாத காலம் காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் கலாச்சாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த விழாவில் பனாரஸ் பல்கலைக்கழகமும், சென்னை ஐஐடியும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளன.

    பிரதமர் வருகையை முன்னிட்டு வாரணாசியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கங்கை நதி அனுமன் படித்துறையை ஒட்டி அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் இல்லத்திற்கு சென்று அவர் பார்வையிட்டார். அங்குள்ள பாரதியாரின் சிலைக்கு மத்திய மந்திரி மரியாதை செலுத்தினார். 


    பின்னர் பாரதியாரின் 96 வயது மருமகன் கே.வி.கிருஷ்ணனை சந்தித்து பாரதியாரின் நினைவுகள் குறித்து அவர் கலந்துரையாடினார். அப்போது பாரதியாரின் உறவினர்கள் உடன் இருந்தனர். தமிழுக்கு மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகள் குறித்து மத்திய மந்திரி கேட்டறிந்ததாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்க உறுதியான அணுகுமுறை தேவை.
    • இந்தியாவுடன் அறிவுசார் துறையில் ஒத்துழைக்க பின்லாந்து ஆர்வம்.

    இந்தியா வந்துள்ள பின்லாந்து நாட்டின் கல்வி மந்திரி பெட்ரி ஹொன்கோனென், நேற்று முன்தினம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுடன் நேற்று அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்

    கொரோனாவுக்கு பிந்தைய கல்வித் துறைக்கான சவால்கள், முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்க உறுதியான அணுகுமுறை தேவை என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது. 


    நிகழ்ச்சியில் பேசிய தர்மேந்திரப் பிரதான், இந்தியாவுடன் அறிவுசார் துறையில் ஒத்துழைக்க பின்லாந்து ஆர்வம் காட்டுவதாக கூறினார். ஆரம்ப கால குழந்தைகள் பராமரிப்பு, ஆசிரியர் பயிற்சி, டிஜிட்டல் கல்வி போன்றவற்றில் ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டு பயனடையலாம் என்று அவர் தெரிவித்தார்.

    பின்லாந்து பல்கலைக்கழகங்கள் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட அவர் அழைப்பு விடுத்தார். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு இந்தியாவில் அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் கொள்கை ரீதியான முடிவை அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • புதிய கல்விக்கொள்கையால் அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகள் வந்து விடும்.
    • இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்கு தயார் செய்ய வழிவகுக்கும்.

    புதுச்சேரி :

    புதுச்சேரி வந்துள்ள மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக முழுமூச்சில் பணிகள் செய்து வருகிறோம். தேசிய கல்விக்கொள்கையில் உள்ளூர்மொழிக்கும், தாய்மொழிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    புதிய கல்விக்கொள்கையால் அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகள் வந்து விடும். அனைத்து விஷயங்களையும் பள்ளிக்கல்வியிலேயே அறிய முடியும். இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்கு தயார் செய்ய வழிவகுக்கும். தேசிய கல்விக்கொள்கையை ஏன் எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. தேசிய கல்விக்கொள்கையில் ஆக்கப்பூர்வ முயற்சியை நாங்கள் தருகிறோம்.

    ஆனால், தேசிய கல்விக்கொள்கையை அரசியல் காரணங்களுக்காக தான் சிலர் எதிர்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். என்பது தனிப்பட்ட அமைப்பு. தசரா காலத்தில் அவர்கள் ஊர்வலம் செல்வது வழக்கம். இந்தியா ஜனநாயக நாடு. அவரவருக்கு உரிய தனிப்பட்ட பார்வைகளை வெளிப்படுத்த அனுமதியுண்டு. புதுவையில் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர். அது வரவேற்கத்தக்கது. மத்திய கல்வி அமைச்சகம் பரிசீலித்து விரைவில் முடிவு தெரிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை வந்திருந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி உள்ளார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருந்தபோது தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசி இருந்தார்.

    சென்னை:

    சென்னை வந்துள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.

    தஞ்சையில் நடைபெற்ற ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை வந்திருந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி உள்ளார். அவருடன் மத்திய இணை மந்திரி எல்.முருகனும் உடன் சென்றிருந்தார். இவர்கள் இருவரும் சுமார் 30 நிமி டங்களுக்கு மேல் கவர்னருடன் பேசிக் கொண்டிருந்தனர்.

    தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி வரும் வேளையில் தமிழக அரசு இந்த கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியாக மாநில கல்வி கொள்கைக்கான குழு அமைத்துள்ளதால் அதுபற்றியும் இவர்கள் விரிவாக ஆலோசித்ததாக தெரிகிறது.

    ஏற்கனவே கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருந்தபோது தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது மற்றும் தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசி இருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக இப்போது பேச்சுவார்த்தை அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
    • கொரோனா காலத்தில் நமது பாரம்பரிய மருத்துவ முறை பெரிதும் உதவியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு 274 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவில் பேசிய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது:

    மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் மூலம் மாநில மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மாராட்டி உள்பட இந்தியாவின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    ஒருவர் தாய்மொழியில் பயிலும்போது சிரமமான பாடங்களையும் எளிதாக கற்க முடியும். மாணவர்கள் படித்து பட்டம் பெறுவதோடு, ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து நபர்களுக்காவது வேலை தரும் வண்ணம் தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும்.  


    மின்னணு பரிமாற்றத்தில் இந்தியா உலக அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குள் ஒன்றரை கோடி கிராமங்கள் ஆப்டிகல் பைபர் சேவையைப் பெறும். நமது நாடு பழமையான கலாச்சாரத்தையும் மருத்துவ முறைகளை கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் பெரிதும் உதவிகரமாக இருந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நவீன தொழில்நுட்பம், உலகை வேகமாக மாற்றியமைத்து வருகிறது.
    • புதிய வாய்ப்புகள், புதிய திறன் சூழல்களின் தேவை அதிகரித்து வருகிறது.

    மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சி நிறுவனங்களின் கருத்தரங்கில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவைத் திறன் மையமாக மாற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை குறித்து விவரித்தார்.

    தொடர்ந்து அவர் கூறியதாவது:  தொழில்நுட்பம், உலகை வேகமாக மாற்றியமைத்து வருகிறது. கல்வி முதல் சுகாதாரம் வரை, வேளாண்மை முதல் நிதி வரை, ஒவ்வொரு துறையும் தொழில்நுட்பத்தால் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் புதிய வாய்ப்புகளும், புதிய திறன் சூழல்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 லட்சம் பயிற்சியாளர்களைத் தயார் செய்ய வேண்டும்.

    அவர்களை உருவாக்குவதற்கு பயிற்சியாளர்களின் திறன்களை கட்டமைப்பது அவசியம். அடுத்த தலைமுறை பணியாளர்களை உருவாக்குவதில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும். பயிற்சி நிறுவனங்கள், திறன் சூழலியலை வலுப்படுத்த எதிர்கால உத்தியுடன் தங்களை மறுவடிவமைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • பாரதிய ஜனதா கட்சி விதிப்படி ஒரு நபர் இரண்டு முறைதான் தலைவர் பதவியில் அமர முடியும்.
    • உபேந்திர யாதவ் பெயரும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.

    புதுடெல்லி:

    பாரதிய ஜனதா கட்சிக்கு தற்போது ஜே.பி.நட்டா தலைவராக இருக்கிறார். பாரதிய ஜனதாவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது மரபாக உள்ளது.

    ஜே.பி.நட்டாவின் பதவி காலம் ஜனவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையில் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    பாரதிய ஜனதா கட்சி விதிப்படி ஒரு நபர் இரண்டு முறைதான் தலைவர் பதவியில் அமர முடியும். எனவே ஜே.பி.நட்டாவுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு தலைவர் பதவி நீடிப்பு வழங்கப்படலாம் என்றுகூறப்படுகிறது.

    அதில் ஒருமித்த கருத்து ஏற்படாத பட்சத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல்களை மனதில் கொண்டு அவர் ஓராண்டு பதவி நீடிப்பு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஓராண்டுக்கு பிறகு புதிய தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

    ஜே.பி.நட்டாவுக்கு பதில் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திரபிரதானை தலைவர் ஆக்கலாம் என்று பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் கருத்து தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே உபேந்திர யாதவ் பெயரும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. இவர் சமீபத்தில்தான் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் குழுவில் இணைக்கப்பட்டார். இவரை தேர்வு செய்யவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இன்னும் ஓரிரு மாதங்களில் பாரதிய ஜனதாவின் தலைவர் யார்? என்பது தெரிந்து விடும்.

    • தேசிய பாடத் திட்டம் குறித்து பொது மக்களுக்கும் கருத்து தெரிவிக்கலாம்.
    • 23 மொழிகளில் பொதுமக்கள் கருத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    புதிய இந்தியாவுக்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான கருத்துக் கேட்பில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு மத்திய கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்துள்ளார்.

    தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஏற்ப தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்படும், ஆற்றல்மிக்க மேம்பட்ட இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை அடைவதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    நமது கலாச்சார ஆனிவேருடன் ஒருங்கிணைக்கவும், உலகளாவிய கண்ணோட்டம், காலனி ஆதிக்க முறையிலிருந்து கல்வித் துறையை விடுவித்து, நமது அடுத்த தலைமுறையினரிடையே ஆழ்ந்த பெருமிதத்தை ஏற்படுத்துவதில் இந்த பாடத்திட்டம் முக்கிய. பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பெற்றோர், மாணவர்கள், சமுதாய உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வல்லுநர்கள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள் இதில் பங்கேற்கலாம். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், பள்ளிக்கூட நிர்வாகிகள், கல்வியாளர்கள், உள்பட பள்ளிக் கல்வி மற்றும் ஆசிரியர் கல்வியில் ஆர்வமுள்ள யாரும், இந்த கருத்துக் கேட்பில் கலந்து கொள்ளலாம்.

    கருத்துக் கேட்பில் பங்கேற்க விரும்புவோர் https://ncfsurvey.ncert.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்யலாம். அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் உட்பட மொத்தம் 23 மொழிகளில் இது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தி, ஆங்கிலத்தை விட எந்த மொழியும் குறைந்ததல்ல என்றும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
    காந்திநகர்:

    குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய கல்வி மந்திரி  தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

    மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள், எந்த மொழியும் தாழ்ந்ததல்ல.  

    குஜராத்தி தமிழ் பெங்காலி அல்லது மராத்தி என அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள். ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் இருப்பதால் எந்த மொழியும் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை விட தாழ்ந்ததல்ல.  அதனால்தான் புதிய தேசிய கல்வி கொள்கையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

    சில மாநிலங்கள் புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் மத்திய அரசுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஏனென்றால் நீங்கள் நினைப்பது மக்களின் நலனுக்காக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.  பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் அனைத்து மாநிலங்களும் பங்கேற்க வேண்டும்.

    காலனி ஆதிக்கத்தில் இருந்து நமது கல்வியை விடுவிக்க வேண்டும். 21ஆம் நூற்றாண்டில் அறிவு சார்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும், அதற்கு பள்ளிக் கல்வியே அடித்தளமாக அமையும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    ×