search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "County Cricket"

    • சர்ரே அணி வெற்றி பெற 501 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • அந்த அணியின் சிப்ளே, பென் போக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி டிவிஷன் 1-ல் கெண்ட் அணியும், சர்ரே அணியும் மோதின. டாஸ் வென்ற கெண்ட் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கெண்ட் அணி முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோர்டான் காக்ஸ் சதமடித்து 133 ரன்கள் எடுத்தார். ஜோய் எவிசன் 58 ரன்கள் சேர்த்தார்.

    சர்ரே அணி சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டும், ஜோர்டான் கிளார்க், கஸ் அட்கின்ஸன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய சர்ரே அணி முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சீன் அபாட் 34 ரன்கள் எடுத்தார்.

    கெண்ட் அணி சார்பில் மேத்யூ குயின், வெஸ் அகர் தலா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஜோய் எவிசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 2வது இன்னிங்சில் ஆடிய கெண்ட் அணி 344 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டவாண்டா முயியே 79 ரன்னும், ஹமிதுல்லா குவாடி 72 ரன்னும், டி பெல் டிரம்மண்ட் 59 ரன்னும் எடுத்தனர்.

    சர்ரே அணி சார்பில் ஜோர்டான் கிளார்க் 5 விக்கெட்டும், டேனியல் வோரல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    501 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சர்ரே அணி களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணியின் வீரர்கள் அதிரடியில் இறங்கினர்.

    அந்த அணியின் 3 பேட்ஸ்மேன்கள் சதமடித்து அசத்தினர். ஜேமி ஸ்மித் 114 ரன்னும், பென் போக்ஸ் 124 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். டாம் லாதம் 58 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், சர்ரே அணி 5 விக்கெட் இழப்புக்கு 501 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது. டொமினிக் சிப்ளே 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • கென்ட் கிளப்பில் சேர இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை ஊக்கப்படுத்தியதாக அர்ஷ்தீப் தெரிவித்திருந்தார்.
    • அர்ஷ்தீப் சிங் 14.2 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் அணியான கெண்ட் அணிக்காக அறிமுகமாகியுள்ளார்.

    இந்நிலையில் சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் பென் போக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கவுண்டி கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் பதிவு செய்தார். அருமையான இன்ஸ்விங் மூலம் (LBW) இந்த விக்கெட் அவருக்கு கிடைத்தது.

    அவர் 14.2 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் நான்கு மெய்டன்கள் அடங்கும்.

    கென்ட் கிளப்பில் சேர இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை ஊக்கப்படுத்தியதாக அர்ஷ்தீப் தெரிவித்திருந்தார்.


    24 வயதான அர்ஷ்தீப் சிங் 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். இதன்மூலம் இங்கிலாந்தில் தனது முதல் அறிமுக போட்டியில் களமிறங்கினார்.

    அர்ஷ்தீப் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆனால் 26 டி20 போட்டிகளில் 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20-யில் அவரது சிறந்த பந்துவீச்சு 4/37 ஆகும்.

    அவர் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார், அதில் அவர் 25 விக்கெட்டுகளை சராசரியாக 23.84 மற்றும் எகானமி ரேட் 2.92, 5/33 என்ற சிறந்த பந்துவீச்சுடன் எடுத்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி 26 விக்கெட்டுக்களுடன் பர்பிள் கேப்-ஐ வென்ற இம்ரான் தாஹிர் கவுன்ட்டி கிரிக்கெட் அணியான சர்ரே உடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். ரிஸ்ட் ஸ்பின்னரான இவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது முடிந்த 2019 சீசனில் 26 விக்கெட்டுக்கள் கைப்பற்றி பர்பிள் கேப்-ஐ வென்றார்.

    தற்போது இவரை இங்கிலாந்து கவுன்ட்டி கிளப் அணியான சர்ரே ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இம்ரான் தாஹிர் டி20 பிளாஸ்ட்தொடரில் விளையாட இருக்கிறார். சர்ரே அணி ஏற்கனவே வெளிநாட்டு வீரர்களில் ஆரோன் பிஞ்ச்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளது.



    ‘‘சர்ரே அணி இயக்குனர் அலெக்ஸ் ஸ்டீவர்ட் என்னை அழைத்தபோது, நான் எளிதான இந்த முடிவை எடுத்தேன். சர்ரே மிகப்பெரிய கிளப். எனது பங்களிப்பால் சர்ரே அணி கோப்பையை வென்றால், மிகச் சிறப்பானதாக இருக்கும்’’ என்று இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்று முரளி விஜய் தெரிவித்துள்ளார். #MuraliVijay
    இங்கிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 4-1 என வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டியில் விளையாடிய தொடக்க வீரர் முரளி விஜய்  20,0,6,0 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனால் 3-வது டெஸ்டில் இருந்து இடம்பெறவில்லை. 4-வது மற்றும் 5-வது டெஸ்டிற்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பின் கவுன்ட்டி போட்டியில சசக்ஸ் அணிக்காக விளையாடினார். சசக்ஸ் அணிக்காக 56, 100, 85, 80 மற்றும் 2 என அசத்தினார்.

    இதனால் ஆஸ்திரேலியா தொடருக்கான நான்கு போட்டிகள் டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான கவுன்ட்டி போட்டியில் விளையாடவில்லை என்று முரளி விஜய் தெரிவி்த்துள்ளார்.



    இதுகுறித்து முரளி விஜய் கூறுகையில் ‘‘நான் என்மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக கவுன்ட்டி கிரிக்கெட் விளையாடவில்லை.

    கவுன்ட்டி போட்டியில் விளையாட இதுதான் சரியான நேரம் என்று நினைத்தேன். இதனால் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடினேன். சிறப்பாக விளையாடினால், இந்திய அணியில் தானாக இடம் கிடைக்கும்’’  என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் கவுன்ட்டி கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். #MuraliVijay
    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கியவர் முரளி விஜய். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 3-வது டெஸ்டிற்குப் பிறகு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசக்ஸ் அணிக்காக விளையாடி முடிவு செய்தார். முதல் முறையாக கவுன்ட்டி போட்டியில் களம் இறங்கிய முரளி விஜய் முதல் போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் 56 ரன்களும், 2-வது இன்னிங்சில் சதம் (100) அடித்தும் அசத்தினார். 2-வது அட்டத்தில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்கெதிராக 85 ரன்கள் அடித்தார்.

    இந்நிலையில் 3-வது ஆட்டத்தில் சசக்ஸ் அணி சர்ரே அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சர்ரே 67 ரன்னில் சுருண்டது. பின்னர் சசக்ஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பிரவுன் 2 ரன்னில் வெளியேறினார்.



    அடுத்து முரளி விஜய் உடன் வெஸ்லே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் 127 பந்தில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வெஸ்லே 93 ரன்கள் எடுத்து முதல்நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எசக்ஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் சேர்த்துள்ளது.

    இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய், கவுன்ட்டி போட்டியில் தொடர்ச்சியாக நான்கு முறை 50-க்கு மேல் ரன்குவித்து அசத்தி வருகிறார்.
    இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷித் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட யார்க்‌ஷைர் கவுன்ட்டி அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். #AdilRashid
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷித் அபாரமான பந்து வீச்சை ஏற்படுத்தினார். இதனால் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.

    இங்கிலாந்தில் கவுன்ட்டி போட்டியில் விளையாடினால்தான் தேசிய அணிக்கு தேர்ச்சி பெறமுடியும். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தார்.



    இந்திலையில் இந்தியாவிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய அடில் ரஷித் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை என்று முடிவு எடுத்திருந்தார். தற்போது அந்த முடிவை மற்றிக்கொண்டு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாட முடிவு செய்துள்ளார்.
    இங்கிலாந்து தொடரில் மோசமாக விளையாடிய முரளி விஜய், கவுன்ட்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். #MuraliVijay
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 என மோசமாக இழந்தது. முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் முரளி விஜய் இடம்பிடித்திருந்தார். தொடக்க வீரரான இவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அணியில் இருந்து நீக்கியதால் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தார். அதன்படி எசக்ஸ் அணிக்காக விளையாடினார். எசக்ஸ் - நாட்டிங்காம்ஷைர் அணிகளுக்கு இடையிலான கவுன்ட்டி கிரிக்கெட் கடந்த 10-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.

    இதில் நாட்டிங்காம்ஷைர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. நாட்டிங்காம்ஷைர் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய எசக்ஸ் அணி 233 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. முரளி விஜய் 56 ரன்கள் அடித்தார்.



    பின்னர் நாட்டிங்காம்ஷைர் 2-வது இன்னிங்சில் 337 ரன்கள் சேர்த்தது. இதனால் சசக்ஸ் அணிக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடகக் வீரராக களம் இறங்கிய முரளி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 242 பந்தில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் வெஸ்லேயும் (110 அவுட் இல்லை) சிறப்பாக விளையாட சசக்ஸ் அணி 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 282 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கவுன்ட்டி போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆஸ்திரேலியா தொடரில் இடம் கிடைக்கும் என முரளி விஜய் நம்பிக்கையில் உள்ளார்.
    ஆப்கானிஸ்தானின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் கவுன்ட்டி கிரிக்கெட்டிற்காக கரிபியன் பிரீமியர் லீக்கில் இருந்து விலகியுள்ளார். #RashidKhan #CPL
    ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். டி20 கிரிக்கெட்டின் நட்சத்திர பந்து வீச்சாளரான இவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்த வருடம் இறுதியில் நடைபெறும் கரிபியன் பிரீமியர் லீக் தொடரிவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கரிபிரியன் பிரீமியர் லீக் தொடருக்கு சென்றால் சசக்ஸ் அணிக்காக அவர் விளையாட முடியாது.



    இந்நிலையில் கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகி, தொடர்ந்து சசக்ஸ் அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். இன்னும் ஏழு போட்டிகள் உள்ளன. ரஷித் கான் தொடர்ந்து விளையாட இருப்பதால் இங்கிலிஷ் கவுன்ட்டி டி20 பிளாஸ்ட் தொடரில் சசக்ஸ் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான அசார் அலி கவுன்ட்டி அணியான சோமர்செட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். #CountyCricket
    ஆஸ்திரேலியா அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரென்ஷா. இவர் கேமரூன் பான்கிராப்ட்டிற்குப் பதிலாக கவுன்ட்டி அணியான சோமர்செட் அணிக்காக விளையாடினார். சோமர்செட் அணிக்காக மூன்று சதங்கள் அடித்த ரென்ஷாவின் கைவிரலில் காயம் ஏற்பட்டது.



    இதனால் ரென்ஷா சோமர்செட் அணியில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவருக்குப் பதிலாக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த தொடக்க வீரரான அசார் அலியை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சீசன் முடியும்வரை அசார் அலி சோமர்செட் அணிக்காக விளையாட இருக்கிறார்.
    இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன புஜாரா கவுன்டி கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
    இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா. டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவதாலும், ஐபிஎல் தொடரில் ஏலம் போகாததாலும் அதிக நேரம் கிடைப்பதால், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார்.

    இவர் இடம்பிடித்துள்ள யார்க்‌ஷைர் அணி ராயல் லண்டன் ஒருநாள் கோப்பைக்கான 2-வது அரையிறுதி போட்டியில் ஹம்ப்ஷைர் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஹாம்ப்ஷைர் 348 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யார்க்‌ஷைர் அணி களம் இறங்கியது. முதல் விக்கெட் வீழ்ந்ததும் அடுத்து புஜாரா களம் இறங்கினார். இவரை தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேன் ஸ்டெயின் டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    ஆரம்ப கட்டத்தில் 82, 73, 101, 75 (நாட்அவுட்) என அசத்திய புஜாரா, அதன்பின் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெர்பிஷைர் அணிக்கெதிராக 14 ரன்களும், லங்காஷைர் அணிக்கெதிராக 19 ரன்களும், நார்தன்ட்ஸ் அணிக்கெதிராக 6 ரன்களுமே எடுத்தார்.



    அதேபோல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் 35 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். நான்கு நாட்கள் கொண்ட கவன்டி போட்டியிலும் 8 இன்னிங்சில் 100 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளா். சராசரி 12.50 ஆகும்.

    கவுன்டி போட்டியில் விளையாட செல்வதற்கு முன், இந்த ஆட்டம் இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடருக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று புஜாரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    கவுன்ட்டி கிரிக்கெட் இல்லாமலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறந்த வீரர்தான் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #ViratKohli
    இந்திய அணி கேப்டனாக விராட் கோலி கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்து சென்று விளையாடிய போது மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் ஆஸ்திரேலியா சென்ற தொடரில் இருந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.

    இந்தியா அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. அப்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக சர்ரே அணியில் இணைந்து கவுன்ட்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார்.



    துரதிருஷ்டவசமாக கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும், விராட் கோலி சிறந்த வீரர்தான் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கு நன்றாக இருக்க வேண்டும். அவரது காயம் பயப்படக்கூடிய அளவிற்கு பெரிதானதல்ல. இங்கிலாந்து தொடருக்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளன. கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும், இந்த நேரம் அவருக்கு நல்லதாக அமையும்.

    ஏனென்றால், அவரது காயம் குணமடைய ஓய்வு தேவை. கவுன்ட்டி போட்டியில் விளையாடுவதை விட பெரிய அளவில் யோசிப்பது தயார் ஆவதற்கு சிறந்ததாகும். கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும் இன்னும் அவர் சிறந்த வீரர்தான்.’’ என்றார்.
    பயிற்சியின் போது ஏற்பட்ட முதுகெலும்பு காயம் காரணமாக விராட் கோலி, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #ViratKholi #CountyCricket #slipdiscinjury

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை 3-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் போது 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கவுண்டி கிளப் அணியான சுர்ரேவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    மேலும் இந்த தொடருக்கு தயாராகும் வகையில் ஜூன் 14 முதல் 18-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இருந்தும், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். 

    இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் போது, கோலியின் முதுகெலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த காயம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், பெரிய அளவிலான சிகிச்சை தேவையில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் காயம் காரணமாக ஓய்வு தேவை என பிசிசிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கோலி கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #ViratKholi #CountyCricket #slipdiscinjury
    ×