search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வேற லெவல் இன் சுவிங்.. கவுண்டி கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை பதிவு செய்த அர்ஷ்தீப் சிங்- வீடியோ
    X

    வேற லெவல் இன் சுவிங்.. கவுண்டி கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை பதிவு செய்த அர்ஷ்தீப் சிங்- வீடியோ

    • கென்ட் கிளப்பில் சேர இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை ஊக்கப்படுத்தியதாக அர்ஷ்தீப் தெரிவித்திருந்தார்.
    • அர்ஷ்தீப் சிங் 14.2 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் அணியான கெண்ட் அணிக்காக அறிமுகமாகியுள்ளார்.

    இந்நிலையில் சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் பென் போக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கவுண்டி கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் பதிவு செய்தார். அருமையான இன்ஸ்விங் மூலம் (LBW) இந்த விக்கெட் அவருக்கு கிடைத்தது.

    அவர் 14.2 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் நான்கு மெய்டன்கள் அடங்கும்.

    கென்ட் கிளப்பில் சேர இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை ஊக்கப்படுத்தியதாக அர்ஷ்தீப் தெரிவித்திருந்தார்.


    24 வயதான அர்ஷ்தீப் சிங் 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். இதன்மூலம் இங்கிலாந்தில் தனது முதல் அறிமுக போட்டியில் களமிறங்கினார்.

    அர்ஷ்தீப் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆனால் 26 டி20 போட்டிகளில் 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20-யில் அவரது சிறந்த பந்துவீச்சு 4/37 ஆகும்.

    அவர் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார், அதில் அவர் 25 விக்கெட்டுகளை சராசரியாக 23.84 மற்றும் எகானமி ரேட் 2.92, 5/33 என்ற சிறந்த பந்துவீச்சுடன் எடுத்துள்ளார்.

    Next Story
    ×