search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surrey"

    • சர்ரே அணி வெற்றி பெற 501 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • அந்த அணியின் சிப்ளே, பென் போக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி டிவிஷன் 1-ல் கெண்ட் அணியும், சர்ரே அணியும் மோதின. டாஸ் வென்ற கெண்ட் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கெண்ட் அணி முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோர்டான் காக்ஸ் சதமடித்து 133 ரன்கள் எடுத்தார். ஜோய் எவிசன் 58 ரன்கள் சேர்த்தார்.

    சர்ரே அணி சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டும், ஜோர்டான் கிளார்க், கஸ் அட்கின்ஸன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய சர்ரே அணி முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சீன் அபாட் 34 ரன்கள் எடுத்தார்.

    கெண்ட் அணி சார்பில் மேத்யூ குயின், வெஸ் அகர் தலா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஜோய் எவிசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 2வது இன்னிங்சில் ஆடிய கெண்ட் அணி 344 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டவாண்டா முயியே 79 ரன்னும், ஹமிதுல்லா குவாடி 72 ரன்னும், டி பெல் டிரம்மண்ட் 59 ரன்னும் எடுத்தனர்.

    சர்ரே அணி சார்பில் ஜோர்டான் கிளார்க் 5 விக்கெட்டும், டேனியல் வோரல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    501 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சர்ரே அணி களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணியின் வீரர்கள் அதிரடியில் இறங்கினர்.

    அந்த அணியின் 3 பேட்ஸ்மேன்கள் சதமடித்து அசத்தினர். ஜேமி ஸ்மித் 114 ரன்னும், பென் போக்ஸ் 124 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். டாம் லாதம் 58 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், சர்ரே அணி 5 விக்கெட் இழப்புக்கு 501 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது. டொமினிக் சிப்ளே 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி 26 விக்கெட்டுக்களுடன் பர்பிள் கேப்-ஐ வென்ற இம்ரான் தாஹிர் கவுன்ட்டி கிரிக்கெட் அணியான சர்ரே உடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். ரிஸ்ட் ஸ்பின்னரான இவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது முடிந்த 2019 சீசனில் 26 விக்கெட்டுக்கள் கைப்பற்றி பர்பிள் கேப்-ஐ வென்றார்.

    தற்போது இவரை இங்கிலாந்து கவுன்ட்டி கிளப் அணியான சர்ரே ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இம்ரான் தாஹிர் டி20 பிளாஸ்ட்தொடரில் விளையாட இருக்கிறார். சர்ரே அணி ஏற்கனவே வெளிநாட்டு வீரர்களில் ஆரோன் பிஞ்ச்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளது.



    ‘‘சர்ரே அணி இயக்குனர் அலெக்ஸ் ஸ்டீவர்ட் என்னை அழைத்தபோது, நான் எளிதான இந்த முடிவை எடுத்தேன். சர்ரே மிகப்பெரிய கிளப். எனது பங்களிப்பால் சர்ரே அணி கோப்பையை வென்றால், மிகச் சிறப்பானதாக இருக்கும்’’ என்று இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.
    ×