search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15 பேர் பலி"

    நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் படைவீரர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    அபுஜா:

    நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில், நைஜீரியா நாட்டின் மாய்துகுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் சிலர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.

    இந்த கொடூர தாக்குதலில் படைவீரர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வடக்கு நைஜீரியாவின் மாய்துகுரி நகரில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
    சென்னை அமைந்தகரை பெண் கொலை வழக்கில் 15 வயது உறவுக்கார சிறுவனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
    பூந்தமல்லி:

    சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச்சேர்ந்தவர் சங்கரசுப்பு (வயது44). இவர் வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்செல்வி (35), இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2-ம் தேதி மதியம் தமிழ்செல்வி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    கழுத்து நெறிக்கப்பட்டும், கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். கேமரா பதிவின் படி விசாரணை நடத்தி தமிழ்செல்வியின் உறவுக்கார 15 சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அத்தை தமிழ்ச்செல்வியை துடிக்க துடிக்க கொலை செய்தது எப்படி? என்பது பற்றி மாணவன் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம் வருமாறு:-

    எனது மாமா குடும்பத்தினர் வசித்து வந்த அதே தெருவில்தான் எங்கள் வீடும் உள்ளது. சிறு வயதில் இருந்தே நானும், எனது தம்பியும் மாமா வீட்டுக்கு சென்று விளையாடுவோம். அப்போது மாமா மகளுடன் நான் பழகினேன். அவள் பெரிய வளானதும் பழகக் கூடாது என்று அத்தை தமிழ்ச்செல்வி கண்டித்தார்.

    கடந்த 27-ந்தேதி தம்பிக்கு பிறந்த நாள். கண்டிப்பாக வீட்டுக்கு வரவேண்டும் என்று மாமன் மகளை அழைத்திருந்தேன். அவள் வரவில்லை.

    இதுபற்றி நான் அவளிடம் கேட்டதை அத்தை பார்த்து விட்டார். என்னை தனியாக அழைத்து கண்டித்ததுடன் கையால் அடித்தார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    எப்படியாவது அத்தையை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டேன். இதற்காக வீட்டுக்கு சென்றேன். தூங்கிக் கொண்டிருந்த அத்தையின் கழுத்தை நெரித்தேன் அவர் திமிறினார்.

    இதனால் அருகில் இருந்த ‘டெடிபேர்’ பொம்மையால் முகத்தை அழுத்தினேன். மூச்சுத்திணறி மயங்கினார். உயிர் பிழைத்து விடக்கூடாது என்பதால் கைமணிக்கட்டை துண்டித்தேன். தமது உடம்பில் எதெல்லாம் உயிர்நாடி என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்துள்ளனர். அதனை வைத்தே அப்படி செய்தேன்.

    இவ்வாறு மாணவன் அதிரவைக்கும் வகையில் வாக்குமூலம் அளித்துள்ளான்.
    கிருஷ்ணகிரியில் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி சாந்தி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் அருணோதயம்(வயது 42). அரசு பள்ளி ஆசிரியர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு, கட்டிகானப்பள்ளியில் உள்ள தங்கை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். பிறகு அவர் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு, திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை காணவில்லை. மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து அருணோதயம் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று பதிவாகி இருந்த கைரேகைகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். நகைகள்திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    திருப்பத்தூரில் கட்டிப்பிடித்து புரண்டு அழுவது போல் நடித்து பெண்ணின் பிணத்தில் இருந்து 15 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. வியாபாரி. இவரது தாயார் வசந்தி (வயது47) மாரடைப்பால் இறந்தார். இதையறிந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் வசந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இறுதி சடங்கிற்கான பணிகள் நடந்தது. அப்போது வசந்தியின் கழுத்தில் இருந்த தாலிச்சரடு செயின் உட்பட 15 சவரன் நகைகளை வீட்டில் வைத்து எடுக்க வேண்டாம். சுடுகாட்டில் வைத்து எடுத்துக் கொள்ளலாம் என உறவினர்கள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து, வசந்தியின் சடலம் ஊர்வலமாக சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது உறவினர்கள் பிணத்தை கட்டி பிடித்து கதறி அழுதபடி சிறிது தூரம் சென்றனர்.

    கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள சுடுகாட்டிற்கு சென்ற பின்னர் பிணத்தை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, வசந்தியின் காதில் இருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றை கழட்டினர். பிறகு கழுத்தில் இருந்த தாலி சரடு மற்றும் தங்க செயினை பார்த்த போது காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தனர்.

    பிணத்தை கட்டிபிடித்து அழுவது போல் நடித்த யாரோ கில்லாடி பெண் 15 பவுன் சவரன் நகைகளையும் திருடிச் சென்றது தெரிய வந்தது. பின்னர் சடலத்தை தகனம் செய்தனர்.

    இது குறித்து வசந்தாவின் மகன் பிரபு (26) திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழ் சினிமா ஒன்றில் உறவினராக வருபவர்கள் கதறி அழுதபடி பிணத்தில் இருந்த நகைகளை லாவகமாக, திருடுவது போன்ற காட்சி இடம் பெறும். அந்த காட்சியை மிஞ்சும் வகையில் இந்த நூதன நகை திருட்டு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    லண்டன் நகரில் உபேர் நிறுவனம் இயங்க விதிப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டு, மேற்கொண்டு 15 மாதங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #Uber #UberinLondon

    லண்டன்:

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பிரபல கார் புக்கிங் நிறுவனம், உபேர். இந்த நிறுவனத்தின் 'ஆப்'பை பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசியின் மூலம் கார் புக்கிங் செய்யலாம். இந்நிறுவனம் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இயங்குவதற்காக அந்தந்த நாட்டு அரசிடம் அனுமதி பெற்று உரிமம் பெற வேண்டும். 

    லண்டனில் இந்நிறுவனத்தின் உரிமம் வருகிற கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் காலாவதியானது. இதையடுத்து, அந்த உரிமத்தை புதுப்பிக்க அந்நாட்டு போக்குவரத்து ஒழுங்குமுறை துறை மறுப்பு தெரிவித்தது. உபேரின் அணுகுமுறை மற்றும் நடத்தையானது அந்நிறுவனத்தின் பெருநிறுவன பொறுப்பில்லாமையை நிரூபிக்கின்றது. மேலும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இல்லை எனவும் காரணம் கூறியது. இதையடுத்து லண்டன் நகரில் இந்நிறுவனம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனிடையே, உபேர் நிறுவனம் சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சரிசெய்துவிட்டதாகவும், அணுகுமுறையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உபேர் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

    அப்போது உபேர் நிறுவனம் லண்டனில் இயங்க அந்நாட்டு போக்குவரத்து ஒழுங்குமுறை துறை விதித்த தடையை நீதிபதி ரத்து செய்தார். மேலும், இன்னும் 15 மாதங்கள் லண்டனில் இயங்க உபேர் நிறுவனத்துக்கு அனுமது வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #Uber #UberinLondon
    திருப்பூரில் 3 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து 15. வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி. பிரிண்டிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி யோகபிரியா (வயது 25). இந்த தம்பதிக்கு அகிலன் (6), யோகித் (5), பிரணாவ் (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 16-ந்தேதி அருள்ஜோதி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த அருள்ஜோதி மனைவியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். சுவிட்ச் ஆப் என்று வந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர், தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் மற்றும் 3 குழந்தைகளை தேடி வருகிறார்கள். #Tamilnews
    இந்தோனேசியாவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா-இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டார். #ModiinIndonesia #PMModi
    ஜகர்த்தா:

    சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டார். பயணத்தின் முதல்கட்டமாக நேற்று இரவு இந்தோனேசியா சென்றடைந்தார். அவருக்கு அதிபர் சார்பில் உற்றாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று போரில் உயிர்நீத்த ராணுவவீரர்களுக்கு மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவை வலிப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர். பின் இந்தியா-இந்தோனேசியா இடையே பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உட்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது:-


    பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்தியா எப்போதும் இந்தோனேசியாவிற்கு உறுதுணையாக நிற்கும். சமீபத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பல அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டனர். இது மிகவும் கவலை அளிக்கிறது.

    இந்தோ-பசுபிக் பகுதியில் மட்டுமல்லாமல் அதனை தாண்டியும் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தும் ஆற்றல் இந்தியா-ஏசியன் கூட்டுறவிற்கு உள்ளது.

    இந்தியா மற்றும் இந்தோனேசியா ஒரே குறிக்கோளுடன் செயல்படுகிறது. இந்தோ-பசுபிக் பகுதியினை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.

    என மோடி கூறினார். #ModiinIndonesia #PMModi
    கனடாவின் டோரண்டோ மாகாணத்தில் உள்ள இந்திய ஓட்டலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #CanadaBlast
    டோரண்டோ:

    கனடாவின் டோடண்டோ மாகணத்தின் உள்ள மிசிஸாயுகா பகுதியில் பாம்பே பேல் என்ற இந்திய ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


    இந்நிலையில், இச்சம்வம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு மர்ம நபர்கள் ஓட்டலுக்குள் வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #CanadaBlast

    இலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பரவி உள்ளது. #Mysteryfever

    கொழும்பு:

    இலங்கையில் உள்ள தென் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

    குறிப்பாக 1 வயதில் இருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளை இந்த காய்ச்சல் தாக்குகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 15 குழந்தைகள் பலியாகி உள்ளன.

    தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பரவி உள்ளது. பள்ளிக்கூடங்கள் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது, என்ன காய்ச்சல் என்று தெரியவில்லை. ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொழும்பு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நோய் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் நேற்று முதல் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 25-ந் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளனர்.

    மாத்தழை, முலடியானா, அகுரைச, தங்காலை, வலையமுள்ள, காலி ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆரம்ப பள்ளிக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கராபிட்டி ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Mysteryfever

    மத்திய அரசு 14-வது நிதி ஆணைய பரிந்துரைகளையே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் 5 மாநில நிதிமந்திரிகள் மனு அளித்துள்ளனர். #15thFinanceCommision #RamnathKovind
    புதுடெல்லி:

    மத்திய அரசின் சார்பில் நியமனம் செய்யப்பட்ட 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2020ம் ஆண்டோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு 15-வது நிதி ஆணையக் குழுவை சில மாதங்களுக்கு முன் அமைத்தது. இந்த ஆணையத்தின் தலைவராக வி.கே.சிங் நியமனம் செய்யப்பட்டார்.

    அதன்படி, அந்தக் குழு கொடுத்துள்ள பரிந்துரைகள் 2020ல் இருந்து 2025ம் ஆண்டுவரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, 15-வது நிதி ஆணையத்தின் புதிய பரிந்துரையில், 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கீட்டை வைத்து நிதி ஒதுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தென்மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போதைய மக்கள் தொகையை கொண்டு நிதி ஒதுக்கினால், குறைந்த அளவே நிதி கிடைக்கும் என கூறிய தென்மாநில நிதி மந்திரிகள் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் சந்தித்து ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில் தமிழக நிதிமந்திரி கலந்து கொள்ளவில்லை.

    இந்நிலையில், 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல், நிதி ஒதுக்குவதில் பழைய முறையை பின்பற்ற வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி, ஆந்திரப்பிரதேச நிதி மந்திரி யனமலா ராமா கிருஷ்ணுடு மற்றும் கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் நிதி மந்திரிகள் உள்ளிட்டோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். #15thFinanceCommision #RamnathKovind 
    கும்பகோணம் அருகே கிணற்றின் சந்துபொந்தில் கிடந்த 15 பாம்புகளை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் கோவிலில் நாக சுந்தரம் என்பவரது தென்ன தோப்பு உள்ளது. இந்த பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கிணறு சுமார் 20 ஆடி ஆழத்தில் இருந்தது.

    கிணற்றில் தண்ணீர் இல்லாததால், தற்போது செடி கொடிகள் மண்டி கிடக்கிறது.

    இந்த நிலையில் அப்பகுதி கிராம மக்கள் சிலர், மூங்கில் மரங்களை வெட்டுவதற்காக சென்று போது, பழமையான கிணறு அருகே சென்றனர்.

    அப்போது கிணற்றில் இருந்து உஸ்.. உஸ்.. என்று சத்தம் கேட்டது. இதனால் சத்தம் வந்த கிணற்றின் அருகே போய் பார்த்தனர்.

    அப்போது அங்கு சுமார் 6 அடி நீளமுள்ள 2 பாம்புகள் கிணற்றின் சுவர் நெளிந்து கொண்டு இருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கிணற்றின் அடியில் பார்த்த போது அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட பாம்புகள் இருந்தன.

    இதைத்தொடர்ந்து கிராம மக்கள், வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து கும்ப கோணம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்து குமார் தலைமையில் வந்த வீரர்களும், வனத்துறை சார்பில் வன காப்பாளர் ஜான்சன் கென்னடி தலைமையில் வீரர்கள் , பொது மக்கள் போராடி பாம்புகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.

    இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    பாழடைந்த கிணற்றில் தற்போது 15 பாம்புகள் உள்ளது. குட்டி பாம்புகள்- பெரிய பாம்புகள் என 3 அடி முதல் 8 அடி வரை உள்ளன. இவை அனைத்தும் வி‌ஷம் உள்ளவை ஆகும். இவைகளை உடனடியாக இந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கிணற்றில் குவியல்.. குவியலாக கிடந்த பாம்புகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பிச்சென்ற 15 சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #SaidabadJuvenileHome
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சைதாபாத் பகுதியில் மாநில அரசால் நடத்தப்படும் சிறார் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 18 வயதிற்கு உள்ள கீழ் தவறு செய்த சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காப்பகத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பிச்சென்றது சிசிடிவி-யில் பதிவானது. 14-17 வயதுடைய அந்த சிறுவர்கள் இரவில் வெண்டிலேட்டர் துளை வழியாக வெளியே வந்து சுவரில் ஏறி குதித்து சென்றனர். இவர்கள் ஏராளமான குற்றங்களை செய்துள்ளனர். அதில் ஒரு சிறுவனை தப்பிக்க முயன்ற போது போலீசார் பிடித்தனர்.

    இதையடுத்து, காப்பகத்தின் மேற்பார்வையாளர் மற்றும் இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமரா பதிவை வைத்து சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #SaidabadJuvenileHome
    ×