search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15 agreements"

    இந்தோனேசியாவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா-இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டார். #ModiinIndonesia #PMModi
    ஜகர்த்தா:

    சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டார். பயணத்தின் முதல்கட்டமாக நேற்று இரவு இந்தோனேசியா சென்றடைந்தார். அவருக்கு அதிபர் சார்பில் உற்றாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று போரில் உயிர்நீத்த ராணுவவீரர்களுக்கு மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவை வலிப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர். பின் இந்தியா-இந்தோனேசியா இடையே பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உட்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது:-


    பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்தியா எப்போதும் இந்தோனேசியாவிற்கு உறுதுணையாக நிற்கும். சமீபத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பல அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டனர். இது மிகவும் கவலை அளிக்கிறது.

    இந்தோ-பசுபிக் பகுதியில் மட்டுமல்லாமல் அதனை தாண்டியும் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தும் ஆற்றல் இந்தியா-ஏசியன் கூட்டுறவிற்கு உள்ளது.

    இந்தியா மற்றும் இந்தோனேசியா ஒரே குறிக்கோளுடன் செயல்படுகிறது. இந்தோ-பசுபிக் பகுதியினை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.

    என மோடி கூறினார். #ModiinIndonesia #PMModi
    ×