search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூரில் பெண்ணின் பிணத்தில் இருந்து 15 பவுன் நகை திருட்டு
    X

    திருப்பத்தூரில் பெண்ணின் பிணத்தில் இருந்து 15 பவுன் நகை திருட்டு

    திருப்பத்தூரில் கட்டிப்பிடித்து புரண்டு அழுவது போல் நடித்து பெண்ணின் பிணத்தில் இருந்து 15 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. வியாபாரி. இவரது தாயார் வசந்தி (வயது47) மாரடைப்பால் இறந்தார். இதையறிந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் வசந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இறுதி சடங்கிற்கான பணிகள் நடந்தது. அப்போது வசந்தியின் கழுத்தில் இருந்த தாலிச்சரடு செயின் உட்பட 15 சவரன் நகைகளை வீட்டில் வைத்து எடுக்க வேண்டாம். சுடுகாட்டில் வைத்து எடுத்துக் கொள்ளலாம் என உறவினர்கள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து, வசந்தியின் சடலம் ஊர்வலமாக சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது உறவினர்கள் பிணத்தை கட்டி பிடித்து கதறி அழுதபடி சிறிது தூரம் சென்றனர்.

    கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள சுடுகாட்டிற்கு சென்ற பின்னர் பிணத்தை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, வசந்தியின் காதில் இருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றை கழட்டினர். பிறகு கழுத்தில் இருந்த தாலி சரடு மற்றும் தங்க செயினை பார்த்த போது காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தனர்.

    பிணத்தை கட்டிபிடித்து அழுவது போல் நடித்த யாரோ கில்லாடி பெண் 15 பவுன் சவரன் நகைகளையும் திருடிச் சென்றது தெரிய வந்தது. பின்னர் சடலத்தை தகனம் செய்தனர்.

    இது குறித்து வசந்தாவின் மகன் பிரபு (26) திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழ் சினிமா ஒன்றில் உறவினராக வருபவர்கள் கதறி அழுதபடி பிணத்தில் இருந்த நகைகளை லாவகமாக, திருடுவது போன்ற காட்சி இடம் பெறும். அந்த காட்சியை மிஞ்சும் வகையில் இந்த நூதன நகை திருட்டு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×