search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணற்றின் சுவரில் செல்லும் பாம்புகளை (அம்பு குறியீட்டு காட்டப்பட்டுள்ளது)படத்தில் காணலாம்.
    X
    கிணற்றின் சுவரில் செல்லும் பாம்புகளை (அம்பு குறியீட்டு காட்டப்பட்டுள்ளது)படத்தில் காணலாம்.

    கிணற்றின் சந்துபொந்தில் கிடந்த 15 பாம்புகள் - பொதுமக்கள் அதிர்ச்சி

    கும்பகோணம் அருகே கிணற்றின் சந்துபொந்தில் கிடந்த 15 பாம்புகளை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் கோவிலில் நாக சுந்தரம் என்பவரது தென்ன தோப்பு உள்ளது. இந்த பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கிணறு சுமார் 20 ஆடி ஆழத்தில் இருந்தது.

    கிணற்றில் தண்ணீர் இல்லாததால், தற்போது செடி கொடிகள் மண்டி கிடக்கிறது.

    இந்த நிலையில் அப்பகுதி கிராம மக்கள் சிலர், மூங்கில் மரங்களை வெட்டுவதற்காக சென்று போது, பழமையான கிணறு அருகே சென்றனர்.

    அப்போது கிணற்றில் இருந்து உஸ்.. உஸ்.. என்று சத்தம் கேட்டது. இதனால் சத்தம் வந்த கிணற்றின் அருகே போய் பார்த்தனர்.

    அப்போது அங்கு சுமார் 6 அடி நீளமுள்ள 2 பாம்புகள் கிணற்றின் சுவர் நெளிந்து கொண்டு இருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கிணற்றின் அடியில் பார்த்த போது அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட பாம்புகள் இருந்தன.

    இதைத்தொடர்ந்து கிராம மக்கள், வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து கும்ப கோணம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்து குமார் தலைமையில் வந்த வீரர்களும், வனத்துறை சார்பில் வன காப்பாளர் ஜான்சன் கென்னடி தலைமையில் வீரர்கள் , பொது மக்கள் போராடி பாம்புகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.

    இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    பாழடைந்த கிணற்றில் தற்போது 15 பாம்புகள் உள்ளது. குட்டி பாம்புகள்- பெரிய பாம்புகள் என 3 அடி முதல் 8 அடி வரை உள்ளன. இவை அனைத்தும் வி‌ஷம் உள்ளவை ஆகும். இவைகளை உடனடியாக இந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கிணற்றில் குவியல்.. குவியலாக கிடந்த பாம்புகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    Next Story
    ×