search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "found"

    • ரமேஷ் நீண்ட நேரமாகியும் ஆற்றில் இருந்து மேலே வரவில்லை.
    • ரமேஷ் நீண்ட நேரமாகியும் ஆற்றில் இருந்து மேலே வரவில்லை.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, ஆடி வெள்ளி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாகவே காணப்படும்.

    மேலும், பக்தர்கள் பத்ரகாளியம்மனை வேண்டி ஆடு,கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். சத்தியமங்கலம் வரதம்பாளையம் குள்ளன் காடு அபார்ட்மெண்ட் பகுதியைச்சேர்ந்த ரமேஷ்(30) என்பவர், தனது மேஸ்திரி பெரியசாமி மற்றும் நண்பர் சுப்பிரமணி உள்ளிட்டோருடன் கடந்த 23 -ந் தேதி வனபத்ர காளியம்மன் கோவிலில் நடைபெற்ற கிடாய் விருந்துக்கு வந்தனர்.

    அப்போது ரமேஷ், சுப்பிரமணியம் உள்ளிட்ட இருவரும் பவானி ஆற்றின் படித்துறையில் இறங்கி குளித்தனர். சுப்பிரமணி ஆற்றின் ஓரத்தில் குளித்து விட்டு வந்துள்ளார்.பின்னர்,குளிக்கச்சென்ற ரமேஷ் நீண்ட நேரமாகியும் ஆற்றில் இருந்து மேலே வராததால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, ரமேஷின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் இளைஞர் மாயம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் சமயபுரம் மின் கதவனை அருகே பவானி ஆற்றில் கிடப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும்,இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 23 -ந் தேதி மாயமான ரமேஷ் என்பது தெரியவந்தது. 

    • தமிழ் எண்கள் பயன்படுத்தப்பட்டன.
    • மைல் கற்கள் நடவு செய்யும் மரபு இருந்து வருகிறது.

    அவிநாசி :

    திருப்பூர் அருகே 200 ஆண்டு பழமைவாய்ந்த தமிழ் எழுத்துகள் மற்றும் எண்கள் அடங்கிய மைல்கல், சாலையோரம் படிகட்டு கல்லாக பயன்படுத்தப்படுகிறது.கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் வியாபாரம் செய்ய பல இடங்களுக்கு செல்லும் வணிகர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே மடங்களும், அவர்கள் செல்லுமிடம் அறிந்துகொள்ள மைல் கற்களும் வைக்கப்பட்டிருந்தன.

    மைல் கற்களில் தூரங்களை குறிப்பிட தமிழ் எழுத்துகளை ஒத்து காணப்படும் தமிழ் எண்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த கற்கள் இன்றும் பல இடங்களில் மண்ணோடு மண்ணாக கேட்பாரற்று கிடக்கின்றன.திருப்பூர், வீரராஜேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:-

    பண்டைய காலங்களில், பெருவழியில் பயணம் செய்யும் மக்களுக்காக மைல் கற்கள் நடவு செய்யும் மரபு இருந்து வருகிறது. திருப்பூர் திருமுருகன்பூண்டியில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப்பணி நடக்கும் இடத்தையொட்டி, சாலையோர நடைபாதை மீது ஏற எளிதாக படிக்கட்டுக் கல்லாக 200 ஆண்டு பழமைவாய்ந்த மைல்கல் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த மைல் கல் 80 செ.மீ., உயரம், 45 செ.மீ., அகலத்தில் உள்ளது. இதில் அவிநாசி, காங்கயம், பல்லடம் ஆகிய இடங்களுக்கு செல்லும் தொலைவு, தமிழ் எண்களால் பொறிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கூட மைல் கல்லில் தமிழ் எழுத்துகள், எண்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடித்து சீனா ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    பீஜிங்:

    சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டான்ஷூய் ஆற்றங்கரை அருகே புதைபடிம ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட புதைபடிமங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதைபடிமங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதைபடிமமான பல உயிரினங்களின் தோல், கண்கள் மற்றும் உள் உறுப்புகள் மிகவும் நேர்த்தியாக புதைபடிமமாகி பதனமாகி இருப்பதாலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேலானவை இதற்கு முன்னர் கண்டறியப்படாதவை என்பதாலும் இதை பிரமிக்கத்தக்க கண்டுபிடிப்பு என்று புதை படிமவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
    ராஜபாளையத்தில் மாயமான வாலிபர் மலைப்பகுதியில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து வனத்துறையினர் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி சவுந்தரபாண்டியன் நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் முருகானந்தம் (வயது 39). திருமணமாகவில்லை. ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், தாய் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். கடந்த மாதம் 24-ந்தேதி உடல்நலக்குறைவால் முருகானந்தத்தின் தாயார் இறந்தார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த முருகானந்தம், அதன்பின்னர் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

    இது குறித்து தந்தை முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ராஜபாளையம் சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோட்டை மலை கருப்பசாமி கோவிலுக்கு செல்லும் வழியில் முருகானந்தம் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேத்தூர் புறக்காவல் நிலைய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரங்கன் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மெக்சிகோவில் கடத்தி செல்லப்பட்ட 5 போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. #Mexico #PoliceMurder
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி   வருகிறார்கள். இவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுவதும், இதில் பலர் கொல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில், மிச்சோகன் மாகாணத்தின் துசான்ட்லா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 5 பேரை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 4-ந் தேதி கடத்தி சென்றனர். இதையடுத்து சக போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் கதி என்ன என்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் சிடாகவ்ரோ நகரில் கேட்பாரற்று நின்றுகொண்டிருந்த ஒரு காருக்குள் 5 பேர் பிணமாக கிடந்தனர். அவர்கள் கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் என்பதும், துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.  #Mexico #PoliceMurder

    வேதாரண்யத்தில் புயலால் சேதமான தென்னையை அகற்றியபோது மண்ணில் புதைந்து கிடந்த 4 1/2 அடி உயர சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா செட்டிப்புலம் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திர சேகரன் (வயது 65). இவரது வீட்டின் பின்புறம் ஏராளமான தென்னை மரங்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் கஜா புயல் தாக்குதலில் இவரது வீட்டு தென்னை மரங்கள் பல அடியோடு சாய்ந்து சேதமானது.

    இந்நிலையில் அந்த மரங்களை வேருடன் அகற்ற முடிவு செய்து நேற்று அதற்கான பணிகள் நடந்தன. அப்போது ஒரு தென்னை மரத்தை வேருடன் அகற்றியபோது அதன் அடியில் 4 1/2 அடி உயரமுடைய மிக பழமையான சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதனையடுத்து அதனை சேதமில்லாமல் முழுமையாக அகற்றி மேல கொண்டுவந்து சுத்தப்படுத்தி வைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து அந்த சிவலிங்கத்திற்கு மலர்களால் அலங்கரித்து வழிபாடு நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காவிரி ஆற்றில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சினம்பூண்டி பகுதியில் காவிரி ஆறு செல்கிறது. நேற்று மாலை இப்பகுதி காவிரி ஆற்றில் அம்பேத்கர் நகர் அருகே ஆண் மற்றும் பெண் பிணங்கள் கரை ஒதுங்கின.

    இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து தோகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு இன்ஸ் பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ் பெக்டர் கார்த்தி ஆகியோர் விரைந்து வந்தனர். அந்த உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    இறந்து கிடந்த ஆணின் ஜட்டியில் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் கார்டு, வழக்கறிஞர் ஒருவரின் விசிட்டிங் கார்டு ஆகியவை இருந்தது. ஆதார் கார்டு மற்றும் பான்கார்டில் முத்துராஜ் என்ற பெயர் உள்ளது.

    இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆற்றில் இறந்து மிதந்து வந்த இருவரும் யார்? அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வெவ்வேறு சம்பவங்களில் இறந்து இருவரதும் உடலும் ஒரே இடத்தில் ஒதுங்கியதா? என்றும் விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆதார் கார்டில் உள்ள செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது இறந்து கிடந்த ஆண் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதி முருக்குப்பட்டி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த முத்துராஜ் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சபரிமலை காட்டில் ஐயப்ப பக்தர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் போலீசார் நடத்திய தடியடியில் கொல்லப்பட்டதாக மாநில பாஜக குற்றம்சாட்டியுள்ளது. #SabarimalaProtests #PoliceLathicharge #AyyappaDevoteeBody #KeralaBJPChief
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தின. கோவில் நடை திறந்தபோது, கோவிலுக்கு வந்த பெண்களை தடுத்து நிறுத்தினர். சில பகுதிகளில் வன்முறையும் வெடித்தது. இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    இந்நிலையில், சபரிமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இன்று ஐயப்ப பக்தர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் பந்தளத்தைச் சேர்ந்த சிவதாசன் என்பது தெரியவந்தது. அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் நடத்திய தடியடியில் ஐயப்ப பக்தர் சிவதாசன் கொல்லப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் உள்துறை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் கேரள பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை வலியுறுத்தி உள்ளார்.

    ‘பந்தளத்தில் இருந்து ஐயப்ப பக்தர் சிவதாசன் சைக்கிளில் கோவிலுக்கு வந்தபோது பிலாப்பள்ளி வனப்பகுதியில் போலீசார் நடத்திய தடியடியில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். அவர் அக்டோபர் 17-ம் தேதி காணாமல் போனதாக உறவினர்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அதனை கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, இந்த கொடூர செயலுக்கு காரணமான போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். அக்டோபர் 17ம் தேதி நடத்தப்பட்ட தடியடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் ஸ்ரீதரன் பிள்ளை கூறியுள்ளார். #SabarimalaProtests #PoliceLathicharge #AyyappaDevoteeBody #KeralaBJPChief
    வேலூர் அருகே கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், துர்க்கையம்மன் சிலை வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    வேலூர்:

    வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் விநாயகர் சிலையை வைத்து வழிபட முடிவு செய்தனர். அதன்படி 22-ந்தேதி அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து பள்ளம் தோண்டினர். அங்கு, 2½ அடி பள்ளம் தோண்டியபோது, கல்லால் ஆன 3 அடி உயரமுள்ள சிவலிங்கம், துர்க்கையம்மன் சிலை, உடைந்த நிலையில் பலிபீடம் ஆகியவை இருந்தன.

    இதுகுறித்து வருவாய்த்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தாசில்தார் பாலாஜி மற்றும் அதிகாரிகள், வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சிவலிங்கம் கிடைத்திருப்பதால், அந்த இடத்தில் நந்தி சிலை இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கருதினர்.

    இதையடுத்து அந்த இடத்தில் நேற்று பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்றது. பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு 2 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டது. எனினும் சிலைகள் ஏதும் அங்குக் கிடைக்கவில்லை. ஆனால் பொதுமக்கள் 5 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி தேட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) மீண்டும் அந்த இடத்தில் 5 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி சிலைகள் ஏதும் கிடைக்கிறதா? என்று தேட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், துர்க்கையம்மன் சிலை, பலிபீடம் ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலர் பிச்சை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் நேற்று மாலை ஒப்படைத்தார். அங்கு, அந்த சிலைகள் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

    இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறுகையில், இந்தச் சிலைகள் விஜயநகர மன்னர்கள் காலத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம். 15 அல்லது 16-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம், என்றார்.

    ரஷிய, ஜப்பான் போரின்போது சுமார் ரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ரஷிய போர்க்கப்பல், 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #SunkenRussian #Warship
    மாஸ்கோ:

    ரஷியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே 1904-1905 ஆண்டுகளில் போர் நடைபெற்றது.  1905-ம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷிய நாட்டுக்கு சொந்தமான ‘டிமிட்ரி டான்ஸ்கோய்’ என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டது.

    அது ரஷியாவுக்கு பேரிழப்பாக அமைந்தது. அந்த போர்க்கப்பலில், 189 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.13 லட்சம் கோடி) தங்கக்கட்டிகளும், நாணயங்களும் வைக்கப்பட்டு இருந்தன. இவை 5 ஆயிரத்து 500 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன.



    இந்த தங்க கட்டிகளும், நாணயங்களும் 2 லட்சம் கிலோ எடை உடையதாகும். இந்தக் கப்பலில் இருந்த சிப்பந்திகளில் 60 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும், 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    மூழ்கடிக்கப்பட்டு 113 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது இந்த போர்க்கப்பல், தென் கொரியாவில் உள்ளேஉங்டோ தீவு கடலில் 420 மீட்டர் ஆழத்தில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இடம், கடற்கரையில் இருந்து 1.6 கி.மீ. தொலைவிலேயே உள்ளது.

    தென்கொரியா, இங்கிலாந்து, கனடா நாடுகளை சேர்ந்த வல்லுனர்கள்தான் இந்த கப்பலை இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்கள் இந்த கப்பலை 2 நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி படம் எடுத்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    அந்தப் படங்களில் இருந்து இந்த போர்க்கப்பல் பெரிதும் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

    அதில் வைக்கப்பட்டு இருந்த தங்கக்கட்டிகள், தங்க நாணயங்கள் இப்போதும் இருப்பது கண்டறியப்பட்டால் பாதி அளவு ரஷியாவுக்கு வழங்கப்படும் எனவும், அதைப் பயன்படுத்தி வடகொரியா வழியாக தென்கொரியாவை ரஷியாவுடன் இணைக்கும் ரெயில்வே திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கோரப்படும் என தெரியவந்து உள்ளது.

    10 சதவீதம், போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள உள்ளேஉங்டோ தீவின் சுற்றுலா திட்டங்களுக்காக செலவிடப்படும்; அந்தக் கப்பலுக்காக ஒரு அருங்காட்சியகமும் நிறுவப்படும் என கூறப்படுகிறது.

    ஆனால் கிரெம்ளினில் உள்ள ரஷிய அதிகாரிகள், இந்தக் கப்பலில் தங்கக்கட்டிகள், தங்க நாணயங்கள் இருந்தால், அவற்றை மொத்தமாக தங்களிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.  #SunkenRussian #Warship  #tamilnews
    வேலூர் கோட்டையில் மண்ணில் புதைந்திருந்த சுமார் 1 டன் எடை கொண்ட பீரங்கி தோண்டி எடுக்கப்பட்டது. இது 17-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1806-ம் ஆண்டு கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சி தான், இந்தியாவின் முதல் சுதந்திர போர்.

    அந்த காலக்கட்டத்தில் வேலூர் கோட்டை ஆயுத கிடங்காக இருந்தது. 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேலூர் கோட்டை கருங்கற்களால் கட்டப்பட்ட அழகிய கட்டுமானங்களுக்கு பெயர் பெற்றது.

    இதன் அழகிய மதில்கள், சுற்றியுள்ள அகழி உறுதியான கல் கட்டமைப்புக்கு புகழ் பெற்றது. இந்த கோட்டையில் திப்பு மகால், ஐதர் மகால், பாஷா மகால், பேகம் மகால், கண்டி மகால் என 5 சிறிய அரண்மனைகள் உள்ளன.

    மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்து மதத்திற்குரிய ஜலகண்டேஸ்வரர் கோவில், கிறிஸ்துவ தேவாலயம், முஸ்லிம்களின் வழிபாட்டுக்கு மசூதியும் உள்ளன.

    இந்த நிலையில், கடந்த மாதம் 24-ந்தேதி கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே உள்ள கோசாலை தென்னந்தோப்பில் ஊழியர்கள் குப்பை மற்றும் சாணம் கொட்டுவதற்காக அருகருகே 3 குழிகளை தோண்டினர்.

    பீரங்கியை தொல்லியல் துறை உதவி ஆய்வாளர் வெற்றிச்செல்வி ஆய்வு செய்த காட்சி.

    அப்போது, பெரிய பீரங்கி மற்றும் 3 பீரங்கி குண்டுகள் தென்பட்டது. உடனடியாக வேலூர் தொல்லியல் துறை அதிகாரிகள் பார்வையிட்டு மேலும் குழி தோண்டுவதை நிறுத்தினர்.

    இதையடுத்து, சென்னை மண்டல தொல்லியல்துறை உதவி ஆய்வாளர் வெற்றிச் செல்வி இன்று காலை வேலூர் கோட்டைக்கு வந்து மண்ணில் புதைந்திருந்த பீரங்கியை பார்வையிட்டார். சிப்பாய் புரட்சிக்கு பிறகு 17 நூற்றாண்டில் கிழக்கு இந்திய கம்பெனிகள் பயன்படுத்திய பீரங்கியாக இருக்கலாம் என்று வெற்றிச்செல்வி கூறினார்.

    பிறகு பள்ளத்தில் இருந்த பீரங்கி ஆட்கள் மூலம் மேலே தூக்கப்பட்டது. அந்த பீரங்கி சுமார் 1 டன் எடை இருந்தது. வேலூர் தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்ட பீரங்கியை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். #Tamilnews
    கேரள மாநிலம் மூணாறு மறையூர் அரசு ஆஸ்பத்திரியில் அரிய வகை வெள்ளை நாக பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மூணாறு மறையூரில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நேற்று ஆஸ்பத்திரியின் துணிகளை துவைக்க ஊழியர்கள் அங்குள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்றனர். தண்ணீர் தொட்டிக்கு அருகே வெள்ளை நிறத்தில் பாம்பு ஒன்று இருந்தது.

    அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வனத்துறைக்கு விபரம் கூறினர்.

    மறையூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூர்த்தி என்பவரின் உதவியுடன் அங்கிருந்த வெள்ளை நிற பாம்பை பிடித்தனர். இந்த வகை வெள்ளை நிற பாம்பு இந்தியாவில் யாரும் பார்த்ததாக தெரியவில்லை.

    வனத்துறையினர் இந்த அரிய வகை பாம்பை பாதுகாப்பாக வைக்கலாமா? அல்லது வனப்பகுதியில் பத்திரமாக விடலாமா? என்பது குறித்து உயரதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றனர்.

    ×