search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young missing"

    ராஜபாளையத்தில் மாயமான வாலிபர் மலைப்பகுதியில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து வனத்துறையினர் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி சவுந்தரபாண்டியன் நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் முருகானந்தம் (வயது 39). திருமணமாகவில்லை. ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், தாய் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். கடந்த மாதம் 24-ந்தேதி உடல்நலக்குறைவால் முருகானந்தத்தின் தாயார் இறந்தார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த முருகானந்தம், அதன்பின்னர் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

    இது குறித்து தந்தை முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ராஜபாளையம் சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோட்டை மலை கருப்பசாமி கோவிலுக்கு செல்லும் வழியில் முருகானந்தம் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேத்தூர் புறக்காவல் நிலைய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரங்கன் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆலங்குளம் அருகே மினி லாரியுடன் வாலிபர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தமிழ்செல்வம் (வயது29). இவர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அனந்த நாடார்பட்டி கிராமத்தில் உள்ள மெத்தை தயாரிப்பு நிறுவனத் தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 

    கடந்த 24-ந்தேதி இந்த கம்பெனியில் இருந்து தமிழ் செல்வம் மினி லாரியில் மெத்தை லோடுகளை ஏற்றி கொண்டு அருப்புக்கோட்டைக்கு சென்றார். அங்கு மெத்தைகளை இறக்கி விட்டு மறுநாள் அனந்த நாடார் பட்டிக்கு வரவேண்டும். ஆனால் தமிழ்செல்வம் வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. 

    அவரை பற்றிய தகவல்கள் கிடைக்காததால் கம்பெனி மேலாளர் ஆலங்குளத்தை சேர்ந்த எட்வர்ட், பாப்பாக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி மற்றும் மெத்தையுடன் தலைமறைவான தமிழ் செல்வத்தை தேடி வருகிறார்கள்.
    ×