என் மலர்
உலகம்
- நேபாளத்தில் 5-வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் பிரதமர் பிரசந்தா.
- இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா தோல்வி அடைந்தார்.
காத்மண்டு:
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.
தொடர்ந்து ஏற்பட்ட கூட்டணி மாற்றத்தால் பிரதமர் பிரசந்தா 4 முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, நேபாளத்தில் ஜூலை 12-ம் தேதி ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி பிரதமர் பிரசந்தா பாராளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், நேபாள பிரதிநிதிகள் சபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் பிரசந்தா தோல்வி அடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. அவருக்கு எதிராக 194 வாக்குகள் பதிவாகின.
இதைத்தொடர்ந்து, நேபாள காங்கிரஸ் சார்பில் அமையும் புதிய கூட்டணி அரசில் கே.பி.சர்மா ஒலி பிரதமராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசந்தா பிரதமரான பின் பாராளுமன்றத்தில் நடத்தப்படும் 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் மூன்று நிலைகளை சாதாரணமாக கடந்த சென்றது.
- 4-வது நிலையில் குறித்த இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.
சீனாவின் ஐஸ்பேஸ் (iSpace) என்ற தனியார் நிறுவனம் ஹைபர்போலா-1 என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் 24 மீட்டர் நீளம் கொண்டது. உயர் திட எரிபொருள் மூலம் இயங்கக் கூடியது. இந்த ராக்கெட் இன்று உலகளாவிய வானிலை முன்னறிவிப்பு செயற்கைக்கோள் மற்றும் நிலநடுக்கம் முன்னறிவிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.
முதல் மூன்று நிலைகளை வெற்றிகரமாக ராக்கெட் கடந்தது. ஆனால் நான்காவது கட்டத்தில் இலக்கு நோக்கி செல்லவில்லை. பின்னர் ராக்கெட் ஏவுதல் திட்டம் தோல்வியடைந்ததாக ஐஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததால் மூன்று செயற்கைக்கோள்களும் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட முடியாமல் போனதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதன்முறையாக ஐஸ்பேஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய தனியார் நிறுவுனம் என்ற பெருமையை பெற்றது. அதன்பின் தொடர்ந்து மூன்று முறை ராக்கெட் செலுத்திய முயற்சியில் தோல்வியை சந்தித்தது.
- திரிசூலி ஆற்றில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
- நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவதால், இதுவரை யாரையும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேருந்துகள் ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், 7 இந்தியர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்வான் மாவட்டத்தில் உள்ள நாராயண்காட்- மக்லிங் சாலையில் உள்ள சிமால்டால் பகுதியில் உள்ள திரிசூலி ஆற்றில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
காத்மாண்டு நோக்கிச் செல்லும் ஏஞ்சல் பேருந்தில் 24 பேர் இருந்த நிலையில், நேபாளத் தலைநகரில் இருந்து கவுர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கணபதி டீலக்ஸில் 41 பேர் பயணம் செய்துள்ளனர்.
காணாமல் போன இந்தியர்கள் சந்தோஷ் தாக்கூர், சுரேந்திர சா, ஆதித் மியான், சுனில், ஷாநவாஜ் ஆலம் மற்றும் அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவதால், இதுவரை யாரையும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கணபதி டீலக்ஸ் பேருந்தில் இருந்த 3 பயணிகள் வாகனத்தில் இருந்து குதித்து தப்பியதாக கூறப்படுகிறது.
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' விபத்து குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, உடனடி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான உத்தரவுகளை வழங்கினார்.
- சிரிப்பது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றையும் பெருமளவில் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
- ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக கடைபிடிக்க அறிவுறுத்தல்.
தற்போதைய நவீன, அவசர உலகத்தில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காக மன அழுத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் குறைப்பது மிகவும் அவசியமானது. அப்போதுதான் நாம் ஆரோக்கியமன மனநிலையில் வாழ முடியும். சிரிப்பதால் நமது ரத்தத்தில் உள்ள மன அழுத்த ஹார்மோன்கள் குறைந்து புத்துணர்ச்சியை உண்டாக்கும் எண்டோர்பின் கெமிக்கல் அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சிரிப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
சமீபத்தில் ஜப்பானின் யமகட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் மேற்கொண்டு அறிவியல் ஆய்வில் தினசரி சிரிப்பவர்களுக்கு மாரடைப்பின் அபாயங்கள் குறைவதாக தெரிய வந்துள்ளது. மேலும் சிரிப்பது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றையும் பெருமளவில் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து யமகட்டா மாகாணத்தில் தினசரி அனைவரும் ஒரு முறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும் என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதத்தில் எட்டாவது நாளையும் சிரிப்பு தினமாக கடைபிடித்து அன்றைய தினம் சிரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டாய சட்டத்தை ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. சிரிப்பது என்பது தனிநபர் உரிமை சார்ந்தது என்றும், அதை கட்டாயப்படுத்தி செய்ய சொல்ல முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
- பிரதமர் மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- ரஷியா நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி ரஷிய படைகள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது
உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி ரஷிய படைகள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது. நேற்று [ ஜூலை 11] ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 99 நாடுகளும், எதிராக 9 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள் வாக்களிக்க மறுத்துள்ளன.
கடந்த ஜூலை 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து நடைபெற்ற இந்தியா- ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவருக்கு ரஷியாவின் உயரிய விருதான ஆர்தர் ஆப் செயின்ட் ஆன்ரியூ தி அப்போஸ்தல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. உக்ரைன் போருக்கு மத்தியில் மோடி ரஷிய அதிபர் புதினுடன் இணக்கம் காட்டுவது மேற்கு நாடுகளுக்கு கோபமூட்டியுள்ளது.

மோடி ரஷியா சென்ற கடந்த ஜூலை 8 ஆம் தேதி அன்று உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 49 பேர் உயிரிழந்தனர். கீவ் நகரில் உள்ள உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை தகர்க்கப்பட்டது. இந்தியா புத்தரைத் தான் உலகத்துக்கு கொடுத்தது, யுத்தத்தை அல்ல என்று மோடி தனது பயணத்தின்போது பேசினாலும், தற்போது ஐநாவின் போர் நிறுத்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக 38,000 மக்கள் உயிரிழந்த இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மோடியின் ரஷியா பயணம் குறித்து விமர்சித்துள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, தற்போதைய சூழலில் எந்த போரும் தொலைவில் இல்லை. இந்தியா - அமெரிக்காவின் நட்புறவை மீண்டும் உறுதி செய்ய வேண்டி உள்ளது. அமெரிக்க உறவை நினைத்து போல் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பொருட்களை குப்பைகளில் இருந்து சேகரித்த லியோனார்டோ அர்பானோ, அவற்றை சிறிது பழுது நீக்கி ஆன்-லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்துள்ளார்.
- பெரிய மற்றும் கனமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுக்க மாட்டாராம்.
வேண்டாம் என்று தூக்கி வீசப்பட்ட குப்பை குவியல்களில் இருந்து பொருட்களை சேகரித்து அவற்றை பணமாக்கி ரூ.56 லட்சம் சம்பாதித்துள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர்.
சிட்னியை சேர்ந்தவர் லியோனார்டோ அர்பானோ. 30 வயதான இவர் சிட்னியின் தெருக்களில் தூக்கி வீசப்பட்ட குப்பைகளை தேடி செல்கிறார். அங்கு உள்ளூர் நிர்வாகம் ஆண்டுக்கு பலமுறை குப்பைகளை அகற்றும் சேவைகளை பொது மக்களுக்கு வழங்குகிறது. அப்பகுதியில் குடியிருப்பவர்கள் பர்னிச்சர்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களை தங்களுக்கு வேண்டாம் என்றால் வெளியே வீசிவிடுகின்றனர். அதுபோன்ற பொருட்களை குப்பைகளில் இருந்து சேகரித்த லியோனார்டோ அர்பானோ, அவற்றை சிறிது பழுது நீக்கி ஆன்-லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்துள்ளார்.
இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.56 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. இவர் பெரிய மற்றும் கனமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுக்க மாட்டாராம். அவற்றை கையாள்வது அல்லது எடுத்து செல்வது கடினமாக இருக்கும் என்பதால் அவற்றை எடுக்க மாட்டேன் என அர்பானோ கூறுகிறார். இவ்வாறு கிடைக்கும் பணத்தை தனது வீட்டு வாடகை செலுத்த பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
- 81 வயதாகும் ஜோ பைடன் பேச்சில் தென்படும் தடுமாற்றமும் குழப்பமும் அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
- நேட்டோ அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 'ரஷிய அதிபர் புதின்' என மேடையில் ஜோ பைடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தற்போதய அதிபர் ஜோ பைடனின் செயல்கலும் பேச்சும் சமீப காலமாக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. மீண்டும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிற்கும் 81 வயதாகும் ஜோ பைடன் பேச்சில் தென்படும் தடுமாற்றமும் குழப்பமும் அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்புடன் நேருக்கு நேர் நடந்த விவாத நிகழ்ச்சியில் ஜோ பைடனின் உரையில் அதிக இடத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. சில நொடிகளுக்கு எந்த அசைவும் இன்றி ஜோ பைடன் உறைந்து நின்ற சம்பவமும் நடந்தது. அதைத்தொடர்ந்து ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்க வேண்டுமா என அவரது கட்சிக்குள்ளேயே கூச்சல் குழப்பங்கள் எழுந்துள்ளன. தான் ஒருபோதும் தேர்தலில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று பைடன் உறுதியாக நிற்கிறார்.
ஆனால் பைடனின் பேச்சில் உள்ள தடுமாற்றம் குறைந்தபாடில்லை. நேற்று அமெரிக்காவில் வைத்து நடந்த நேட்டோ அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 'ரஷிய அதிபர் புதின்' என மேடையில் ஜோ பைடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இன்று நடந்த பிக் பாய் கருத்தரங்கத்தில் துணை அதிபர் காமலா ஹாரிஸ் என்று சொல்வதற்கு பதிலாக 'துணை அதிபர் டிரம்ப்' என்று பைடன் குறிப்பிட்டுள்ள வீடியோவும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பைடனின் தடுமாற்றம் குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார். டிரம்ப் விமர்சனத்தைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பைடன், 'அவர் [டிரம்ப்] சொல்வதைக் கேளுங்கள்' என்று தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு பைடன் தன்னையே கறுப்பின துணை அதிபருடன் அதிபராக பணியாற்றும் அமரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் தான்தான் என்று பைடன் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தன்மீதான சந்தேகங்களை நீக்க மருத்துவர்கள் பரிமதுரையின்பேரில் நரம்பியல் பரிசோதனைக்கும் தான் தயார் என்று பைடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒரே நேரத்தில் நன்கொடையாளர் மற்றும் பெறுநர் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்தது.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் உறவுக்குள் இருக்கும் பாசம் குறைந்து பணத்திற்கு மதிப்பு தருவதாக ஒரு தரப்பில் கூறப்பட்டாலும் அப்படியெல்லாம் இல்லை பாசம் தான் என்றைக்குமே என்ற வகையில் ஒரு சம்பவம் அபுதாபியில் நிகழ்ந்துள்ளது.
அரிய வகையால் நோயால் பாதிக்கப்பட்டு முதல் குழந்தை உயிரிழந்த நிலையில், இரண்டாவது குழந்தைக்கும் அதே நிலை ஏற்பட்டபோது உறைந்து போன தந்தை செய்த செயலால் அக்குழந்தை இன்று மகிழ்ச்சியில் உள்ளது என்றால் அதற்கு ஈடுஇணை இல்லை...
அபுதாபியில் 14 ஆண்டுகளாக வசித்து வருபவர் இம்ரான் கான். இந்தியரான இவருடைய 4 வயது மகள் ரசியா, குழந்தைப் பருவத்தில் தோன்றும் 'பேமிலியல் இன்ட்ராஹெபாடிக் கொலஸ்டாசிஸ் டைப் 3' என்ற கல்லீரலை தாக்கும் அரியநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், உறைந்து போன இம்ரான் கான், சிறுமியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு அறுவைசிகிச்சைக்கு 1 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 27 லட்சம்) செலவாகும் என கூறப்பட்டது.
முன்னதாக, இந்தியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நோயால் தங்கள் முதல் மகளை இழந்ததால், 2-வது மகளை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று இம்ரான் கான் முடிவு செய்தார். இதற்காக அமீரக அரசின் தொண்டு அமைப்பான எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட்டைத் தொடர்புகொண்டு உதவி கேட்டார்.

இம்ரான் கானின் நிலையை கண்ட தனியார் மருத்துவமனையும் தங்களது பங்களிப்புக்காக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும் என அறிவித்தது. அடுத்ததாக, கல்லீரல் தானம் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கல்லீரல் தானம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் சிறுமியின் தந்தையான இம்ரான் கானே மகளுக்காக தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக தர முன்வந்தார்.
இதையடுத்து, அபுதாபியில் உள்ள புர்ஜீல் மெடிக்கல் சிட்டியில் (பிஎம்சி) பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ரெஹான் சைஃப் தலைமையிலான மாற்று அறுவை சிகிச்சை குழு, கடந்த புதன்கிழமை அன்று சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்தனர்.
ஒரே நேரத்தில் நன்கொடையாளர் மற்றும் பெறுநர் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்தது. இதன் பின் சிறுமியின் உயிருக்கு பாதிப்பில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் குணமடைந்து வருகிறார்.
இதுகுறித்து டாக்டர் ரெஹான் சைஃப் கூறுகையில், "ரசியாவை தாக்கிய நோய் மரபணு மாற்றத்தால் ஏற்படுவதாகும். இந்த நோய் உலகில் லட்சத்தில் ஒரு குழந்தைக்கு மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. இது பித்த சுரப்பு மூலம் அசாதாரண நிலைக்கு வழிவகுக்கிறது. இறுதியில் கல்லீரலை சேதப்படுத்துகிறது. இது, குழந்தை பருவத்தில் கல்லீரல் செயலிழப்பின் அறிகுறிகளாக வெளிப்படுகிறது.

இதனால், காது கேளாமை, வயிற்றுப்போக்கு மற்றும் கணையத்தில் வீக்கம் காணப்படும். இதில் வெற்றிபெற்றது நாட்டின் சுகாதாரத்துறைக்கு ஒரு மைல்கல். இது, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மருத்துவச் சமூகத்திற்கு ஒரு மகத்தான சாதனை. ரசியா இனி பள்ளிக்குச் சுதந்திரமாகப் போக முடியும். எல்லாக் குழந்தைகளைப் போலவே அவராலும் இயல்பாக வாழ முடியும்" என கூறினார்.
மகளின் அறுவைச் சிகிச்சைக்கு பிறகு பேசிய தந்தை இம்ரான் கான், "எனது மகளின் கண் நோயால் எப்போதும் மஞ்சளாகவே இருக்கும். இப்போதுதான் தெளிவாக உள்ளதை காண்கிறேன். இனி, ஆபத்தில்லை" என கண்ணீர்மலகக் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
- போதிய உடல் செயல்பாடு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் 3.2 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் பெரும்பாலானவர்களுக்கு கடும் சவாலாகவே உள்ளது. உடல் பருமனை குறைக்க காலை நடைபயிற்சி செய்வதில் பலருக்கும் சிரமம் உள்ளது. ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடந்தால் உடல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று நீண்டகாலமாக சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் சமீபத்திய புதிய ஆய்வு அறிக்கையில் 5,000-க்கும் குறைவான அடிகள் நடந்தால் போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள 2,26,000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, எந்தவொரு காரணத்திற்காகவும் முன்கூட்டியே இறப்பதற்கான அபாயத்தைக் குறைக்க 4,000 அடி வரை நடந்தால் போதுமானது என கூறப்படுகிறது.
இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு நன்மை செய்ய 2,300-க்கு மேல் நடந்தால் போதுமானது. 4,000-க்கு மேல் நடக்கும் ஒவ்வொரு கூடுதல் 1,000 அடிகளும் 15% வரை இறக்கும் அபாயத்தை குறைக்கின்றன. நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், எங்கு வாழ்ந்தாலும், எல்லா வயதினருக்கும் நடைபயிற்சி நன்மைகளை தருவதை கண்டறிந்ததாக போலந்தில் உள்ள லோட்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 60 வயதிற்கு உட்பட்டவர்களிடையே நடைபயிற்சி மிகப்பெரிய நன்மைகள் காணப்பட்டன.
இதனிடையே, லோட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மசீஜ் பனாச், சிகிச்சைக்கான மேம்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவை மட்டும் போதுமானது இல்லை என்று கூறினார்.
"எங்கள் ஆய்வின் முக்கிய கதாநாயகன் உணவு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் தான். நடைபயிற்சி இருதய ஆபத்தை குறைப்பதற்கும் ஆயுளை நீடிப்பதற்கும் குறைந்த பட்சம் அல்லது இன்னும் அதிகமாக பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்த வேண்டும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, போதிய உடல் செயல்பாடு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் 3.2 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன. இது உலகளவில் ஏற்படும் உயிரிழப்புக்கான காரணிகளில் நான்காவதாக உள்ளது.
- விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், சமீபத்தில் ஒரு ராக்கெட்டை ஏவியது.
- முட்டைகள் சேதமடைந்த படங்களும் வெளியிடப்பட்டு இருந்தன.
உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது வித்தியாசமான கருத்துகள் வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறுவது வாடிக்கை. தனது கருத்துகளை வித்தியாசமாகவும், துணிவாகவும் முன்வைக்கக் கூடியவர் அவர்.
இந்த நிலையில் அவர், "ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிடுவதில்லை" என்று சபதம் எடுத்துள்ளார். அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், சமீபத்தில் ஒரு ராக்கெட்டை ஏவியது. அப்போது ஏவுதளத்தின் அருகே சில பறவைகளின் கூடுகளும், முட்டைகளும் சேதம் அடைந்தது.
இதுகுறித்து அமெரிக்காவின் முன்னணி செய்தித்தாள், 'ஸ்பேஸ்எக்ஸ் தளத்தால் வனவிலங்கு பாதுகாப்பு பின்னுக்கு தள்ளப்படுகிறது' என்று தலைப்பிட்டு முதல்பக்க செய்தியாக வெளியிட்டு இருந்தது. அதில் ராக்கெட் ஏவுதலின்போது 9 பறவைக்கூடுகளும், முட்டைகளும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. முட்டைகள் சேதமடைந்த படங்களும் வெளியிடப்பட்டு இருந்தன.
இதுகுறித்து எலான்மஸ்க் தனது நிறுவனத்தின் தவறுகளுக்கு வருந்துவதுபோல பதிலளித்து 'ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டோம்' என்று வாக்குறுதி அளித்தார்.
- வெப்பநிலை அதிகரிப்பு நிலத்தடி நீரை சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.
- ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும்.
உலகளவில் நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 டிகிரி செல்சியஸ் வரை நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் நடந்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டில் மற்றும் சார்லஸ் டார்வின் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடந்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

முக்கியமாக மத்திய ரஷியா, வடக்கு சீனா மற்றும் வட அமெரிக்கா, அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழ்தலுக்கு நிலத்தடி நீர் இன்றியமையாததாக உள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு நிலத்தடி நீரை சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.

நிலத்தடி நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வரும் நிலையில் இந்த வெப்ப நிலை அதிகரிப்பு அதன் பாதுகாப்பு தன்மையை சீர்குலைக்கக்கூடும். 2099 வாக்கில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 59 முதல் 588 மில்லியன் மக்கள் அருந்தும் நிலத்தடி நீர் அதிக வெப்பநிலை கொண்டதாக மாறியிருக்கும். அதிக வெப்பம் கொண்ட நிலத்தடி நீரில் நோய்க்கிருமிகள் வளரும் சாத்தியக்கூறுகளும் இருப்பதால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடாக அமையும்.
ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். நிலத்தடி நீரை சார்ந்துள்ள விவசாயம், உற்பத்தி ஆகியவை பாதிக்கப்படும். அதிக வெப்பநிலை கொண்ட நீரில் கரைந்தநிலை ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டுள்ள நதிகளில் உள்ள மீன்கள் உயிர்வாழமுடியாது.
இதுபோன்ற பல்வேறு ஆபத்துகளை உள்ளடக்கிய நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிப்பு புவி வெப்பமயமாதல் மற்றும் கால நிலை மாற்ற விளைவுகளை மனிதர்கள் தீவிரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என்பதை உணர்த்துகிறது.
- அந்த காரின் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 16 கோடி ஆகும்.
- எப்படி இத்தனை விலை மதிப்புள்ள காரை வாங்க முடியும்?
ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் உலகின் விலை உயர்ந்த ஹைப்பர் கார் மாடல்களில் ஒன்றை ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வீடியோவின் படி ஆல்ட்மேன் கோனிக்செக் ரெகரா ஹைப்பர் கார் மாடலை ஓட்டுகிறார்.
இது லிமிட்டெட் எடிஷன் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆகும். 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கோனிக்செக் ரெகரா உலகளவில் மொத்தம் 80 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இது ஒரு ஹைப்ரிட் ரக கார் ஆகும். இதன் ஆரம்ப விலையே 1.9 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 16 கோடி ஆகும்.
இந்த காரை பயன்படுத்திய நிலையில் வாங்கும் போது விலை மேலும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில், இதன் மதிப்பு 3 மில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 25 கோடி ஆகும்.
ஓபன்ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் ரெகரா மாடலை ஓட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் 40 லட்சத்திற்கும் அதிக வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும் லாப நோக்கமற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியால் எப்படி இத்தனை விலை மதிப்புள்ள காரை வாங்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்த எக்ஸ் தள பதிவு ஒன்றில், "ஓபன்ஏஐ சிஇஓ உலகின் விலை உயர்ந்த காரை ஓட்டி வருகிறார். லாப நோக்கற்ற நிறுவனமாக துவங்கப்பட்ட ஓபன்ஏஐ எப்படி லாபகர வியாபாரமாக மாறியது?" என கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் "நல்ல கேள்வி" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை உருவாக்கவும், அதில் அதிக கவனம் செலுத்துவதிலும் எலான் மஸ்க் தீவிரம் காட்டினர். இதன் விளைவாக உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் ஓபன்ஏஐ. பிறகு, அந்நிறுவன நிர்வாக குழுவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் மற்றும் இதர காரணங்களால் எலான் மஸ்க் ஓபன்ஏஐ-இல் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.






