என் மலர்tooltip icon

    உலகம்

    • பிலிப்பைன்சில் பிக் அப் டிரக் மீது பயணிகள் பஸ் மோதியது.
    • இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகரிக்கும் விதிமீறல்கள் மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்களால் சாலை விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன.

    இந்நிலையில், வடக்கு பிலிப்பைன்ஸில் பிக் அப் டிரக் மீது பயணிகள் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து ககாயன் மாகாணத்தில் உள்ள அபுலுக் நகராட்சியில் உள்ள சந்திப்பில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது.

    இதுதொடர்பாக நடந்த விசாரணையில், பயணிகள் பஸ்சில் எந்த உயிரிழப்பும் இல்லை. பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் படுகாயம் அடைந்தனர். பயணிகளில் 23 பேர் காயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

    • 722 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    தெற்கு பிலிப்பைன்சில் உள்ள சுல்தான் குடாரத் மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக இருந்து அதன்பின்னர் 7.1 ஆக உயர்ந்ததாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கடலோர நகரமான பாலிம்பாங்கிலிருந்து தென்மேற்கே 133 கிலோமீட்டர் தொலைவில் 722 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மிண்டானாவோவ் நகரிலும், டவாவோ, ஆக்சிடெண்டல், டாவோ ஓரியண்டல், சாராங்கனி, டாவோ டி ஓரோ, டாவோ டெல் நோர்டே மற்றும் கோடாபாடோ ஆகிய இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததையடுத்து அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    • தீ விபத்தில், 10 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
    • விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைத்தனர்.

    பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சவுதி ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இருப்பினும், தீப்பிடித்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் கவனிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், விமானத்தில் இருந்து 276 பயணிகளும், 21 பணிாளர்களும் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    தீ விபத்தில், 10 பயணிகள் காயமடைந்துள்ளனர். அனைத்து 276 பயணிகளும் 21 பணியாளர்களும் சறுக்கு பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைத்தனர்.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து சவுதி ஏர்லைன்ஸ் விமானம் நிறுவனம் விசாரித்து வருகிறது.

    • காரில் பயணம் மேற்கொண்ட போது 4 மில்லியன் பரிசு தொடர்பான செய்தி கிடைத்தது.
    • மறுபடியும் இரண்டாவது லாட்டரியை ஸ்கேன் செய்தபோது ஸ்கேன் சரியாக வேலை செய்தது.

    அதிர்ஷ்டம் என்பது யாருக்கு எப்போ எப்படி வரும்னு தெரியாது. கொடுக்கிற கடவுள் கூரையை பியத்துக்கொண்டு கொடுப்பார் என்று பழமொழி உண்டு. அதுபோல தான் லாட்டரி பரிசு என்பதும்...

    பொதுவாக லாட்டரியை பொறுத்தவரை அதிர்ஷ்டம் என்று தான் சொல்கிறார்கள். அதாவது பரிசு விழுந்தவர்களுக்கு ஒரே நாளில் வாழ்க்கை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மாறுகிறது.


    அந்தவகையில், காருக்கு பெட்ரோல் போட சென்ற இடத்தில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு சுமார் ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் சாகினாவ் கவுண்டி பகுதியை சேர்ந்தவர் மிச்சிகன் லாட்டரியை வாங்கியுள்ளார். முதல்முறை லாட்டரியை ஸ்கேன் செய்த போது ஒரு தகவல் வந்தது. திரும்பவும் ஸ்கேனை செய்தேன். அப்போதும் ஒரு செய்தி வந்தது. அப்போது இயந்திர கோளாறு என்று நினைத்தேன்.

    மறுபடியும் இரண்டாவது லாட்டரியை ஸ்கேன் செய்தபோது ஸ்கேன் சரியாக வேலை செய்தது. இதையடுத்து காரில் பயணம் மேற்கொண்ட போது 4 மில்லியன் பரிசு தொடர்பான செய்தி கிடைத்தது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.33 கோடி. இதனால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

    இந்த பரிசு தொகையை வைத்து முதலீடு மற்றும் நிலம் வாங்குவதற்கு ஒதுக்கி வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    • கீவ்வில் உள்ள மருத்துவமனை மீது ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது.

    கீவ்:

    உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    ரஷியாவுக்கு எதிராகப் போரிடும் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

    போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து ரஷியா சமீபத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இதற்கிடையே, தலைநகர் கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில், ரஷிய தாக்குதலைத் தொடர்ந்து கீவ் நகரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் இருந்து புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா நடத்திய குண்டுவீச்சு குழந்தைகள் மருத்துவமனையை கடுமையாக சேதப்படுத்தியது, இந்தக் கொடூர தாக்குதல் பல குடும்பங்களை பயமுறுத்தியது. ஏற்கனவே ஆபத்தான நோய்களுடன் போராடும் அவர்களின் குழந்தைகளையும் கடுமையாக பாதித்தது.

    இதனால் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் சிகிச்சையை எங்கு தொடர்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இதுதொடர்பாக, 2 வயது மகனின் பெற்றோர் கூறுகையில், கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியா நோய்க்காக ஜூன் தொடக்கத்தில் இங்கு வந்தோம். ஐரோப்பாவில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று என்பதால் இங்கு சிகிச்சை பெற முடிவு செய்தோம். ஆனால் தற்போது நடைபெறும் தாக்குதலால் எங்கு செல்வது என தெரியவில்லை என குறிப்பிட்டார்.

    • அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது.
    • அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரத்துக்கு உதவுவேன்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களத்தில் குதித்துள்ளார்.

    இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதால் அதிபர் தேர்தல் களம் சூடாகி இருக்கிறது.

    டிரம்ப் பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கியவர். இவரது முதல் மனைவி இவானா. இருவருக்கும் கடந்த 1977-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் மார்லா மேப்பிள்ஸ் என்ற பெண்ணுடன் டிரம்புக்கு தொடர்பு ஏற்பட்டது. இவர்களது இந்த உறவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து 1993-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 1997-ம் ஆண்டு இந்த திருமண உறவு முறிந்தது. இருவரும் பிரிந்தனர். சமீபத்தில் மார்லா மேப்பிள்ஸ் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

    இதற்கிடையில் தனது முன்னாள் கணவரான டிரம்புக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரசாரம் செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

     இது தொடர்பாக அவர் கூறும்போது, `எனது மகளின் தந்தையை நான் நன்கு அறிவேன். அவர் (டிரம்ப்) எந்த குற்றத்தையும் செய்திருக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் நிரபராதி. அவருக்கு எதிராக பல சட்ட சிக்கல்கள் இருந்தாலும் நாங்கள் அவருக்கு ஆதரவாக தான் இருக்கிறோம்.

    அதிபர் தேர்தலில் அவருக்கு ஆதரவாக பிரசாரத்துக்கு உதவுவேன். நான் எந்த வழியில் சேவை செய்ய முடியுமோ அதற்காக தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு மார்லா மேப்பிள்ஸ் தெரிவித்துள்ளார்.

    • இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.
    • கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரில் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் காசாவில் இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதையடுத்து காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இஸ்ரேல் ராணுவம் எச்ரிக்கையால் அவர்கள் பீதி அடைந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. தெரிவித்து இருக்கிறது.

    • பொது தேர்தலில் தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது.
    • தொழில் அதிபரான இவர் குஜராத்தை சேர்ந்தவர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த பொது தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது.

    தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் இது வரை இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் வெற்றி வாகை சூடினார்கள்.

    லீ செஸ்டர் கிழக்கு தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான ஷிவானி ராஜா (வயது 29) வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் அகர்வால் தோல்வி அடைந்தார். இவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான்.

    1987 -ம் ஆண்டு முதல் லீ செஸ்டர் கிழக்கு தொகுதி தொழிலாளர் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. 37 ஆண்டுகளுக்கு பிறகு இதனை தகர்த்து ஷிவானி ராஜா முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தொழில் அதிபரான இவர் குஜராத்தை சேர்ந்தவர்.

    இங்கிலாந்து பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. அப்போது ஷிவானி ராஜா பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாராளுமன்றத்தில் எம்.பி.யாக பதவி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • திட்டமிட்டபடி 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும்.
    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல்.

    வாஷிங்டன்:

    இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கானை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்

    அவர்கள் திட்டமிட்டபடி 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர்.

    இந்த பிரச்சனையால் இருவரும் எப்போது பூமிக்கு திரும்புவார்கள் என்பதில் கேள்வி எழுந்தது. இந்த சூழ்நிலையில் அவர்களை பூமிக்கு அழைத்து வருவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் இம்மாத இறுதியில் அவர்கள் பூமிக்கு வருவார்கள் என்றும் நாசாவின் வணிககுழு திட்ட இயக்குனர் ஸ்டீவ் ஸ்டிக் தெரிவித்துள்ளார்.

    மேலும் நேற்று சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பேட்டி அளித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்களை எப்படியும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தனர். இந்த புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த பர்கருக்கு 'தி கோல்டன் பாய்' என்று பெயரிட்டுள்ளனர்.
    • பர்கர் விற்பனையில் இருந்து கிடைத்த வருமானம் வசதியற்ற குடும்பங்களுக்கு உதவியது என ராபர்ட் தெரிவித்தார்.

    இன்றைய ஆடம்பர உலகில் ஒரு குறிப்பிட்ட பர்கர் அதன் நம்ப முடியாத உயர்ந்த விலை, சுவைகள் மற்றும் பொருட்களின் சிறப்பு கலவை காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரபல சமையல் நிபுணரும், டி டால்டன்ஸ் என்ற உணவகத்தின் உரிமையாளருமான ராபர்ட் ஜான் டி வென் என்பவர் இந்த பர்கரை உருவாக்கி உள்ளார். இதன் விலை 5 ஆயிரம் யுரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.4.5 லட்சம்) ஆகும்.

    இந்த பர்கருக்கு 'தி கோல்டன் பாய்' என்று பெயரிட்டுள்ளனர். இந்த பர்கர் தங்க இலைகள், குங்குமப்பூ, வாக்யு மாட்டிறைச்சி மற்றும் பல சத்தான, விலை உயர்ந்த உணவு பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த உணவு பொருட்களின் பட்டியலில் தனது பர்கரும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக ராபர்ட் கூறினார்.

    மேலும் இந்த பர்கரின் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பர்கர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. இதை ஒரு சாதனைக்காக மட்டும் உருவாக்கவில்லை. இந்த பர்கர் விற்பனையில் இருந்து கிடைத்த வருமானம் வசதியற்ற குடும்பங்களுக்கு உதவியது என ராபர்ட் தெரிவித்தார்.

    • வீடியோவில், தம்பதியினர் ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிரீம் சுவைத்தவாறு திருமண நாளை கொண்டாடினர்.
    • கொண்டாட்ட வீடியோ விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

    சில தம்பதிகள் தங்களது திருமண நாளை வித்தியாசமாக கொண்டாட ஆசைபடுவார்கள். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த டென்னிஸ் ரசிகர்களாக இருக்கும் ஒரு தம்பதி தங்களது 36-வது திருமண நாளை லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மைதானத்தில் கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    அந்த தம்பதியினர் டென்னிஸ் போட்டிகளை நேரில் பார்த்தவாறு தங்களது கனவை நிறைவேற்றி கொண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அந்த வீடியோவில், தம்பதியினர் ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிரீம் சுவைத்தவாறு திருமண நாளை கொண்டாடினர். அவர்களின் இந்த கொண்டாட்ட வீடியோ விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

    இதைப்பார்த்த பயனர்கள் அந்த தம்பதியினரை வாழ்த்தி பதிவிட்டனர். அந்த தம்பதியினர் கூறுகையில், 1970-களில் இருந்து டென்னிஸ் ரசிகராக இருக்கிறோம். இது எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது. ஏனெனில் இது எங்கள் இருவரின் கனவாகும் என்று குறிப்பிட்டனர். மேலும் இந்திய டென்னிஸ் வீரர்கள் விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா மற்றும் சானியா மிர்சா ஆகியோர் தங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் எனவும் தம்பதிகள் தெரிவித்தனர்.

    • ஆஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றினார்.
    • இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது.

    பிரதமர் மோடி ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக ஆஸ்திரியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றினார்.

    அப்போது, "பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை. இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது" என்று மோடி பேசியுள்ளார்.

    ரஷியா, ஆஸ்திரியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று காலை இந்தியா வந்தடைந்தார். 

    ×