பாகிஸ்தானில் பரபரப்பு- சவுதி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது தீ விபத்து

தீ விபத்தில், 10 பயணிகள் காயமடைந்துள்ளனர்.விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைத்தனர்.
பாகிஸ்தானில் பரபரப்பு- சவுதி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது தீ விபத்து
Published on

பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சவுதி ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், தீப்பிடித்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் கவனிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், விமானத்தில் இருந்து 276 பயணிகளும், 21 பணிாளர்களும் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்தில், 10 பயணிகள் காயமடைந்துள்ளனர். அனைத்து 276 பயணிகளும் 21 பணியாளர்களும் சறுக்கு பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து சவுதி ஏர்லைன்ஸ் விமானம் நிறுவனம் விசாரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com