என் மலர்tooltip icon

    உலகம்

    • எக்ஸ் தளத்தில் வைரலான வீடியோ இரண்டு மில்லியன் பார்வைகளையும் 14,000 விருப்பங்களையும் குவித்துள்ளது.
    • பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களில் சில, விலங்குகள் மீது மனிதர்கள் வைத்துள்ள பாசத்தை காட்டும். ஆனால் தற்போது வைரலாகும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வைரலாகும் வீடியோவில், நீர்யானையின் வாயில் பிளாஸ்டிக் பையை ஒருவர் திணிப்பது பார்ப்பவர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்குகிறது. இச்சம்பவம் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள வனவிலங்கு பூங்காவில் நடந்துள்ளது.

    வீடியோ காட்சிகளின் படி, பூங்காவை காரில் சென்று சுற்றி பார்க்கும் பயணிகளில் ஒருவர் நீர் யானைக்கு கேரட்டை கொடுக்க முன்வருகிறார். இதனால் நீர் யானையோ வாயை திறக்க மற்றொரு சுற்றுலா பயணி அதன் வாயில் பிளாஸ்டிக் பையை திணிக்கிறார். இதையடுத்து அந்த நீர்யானை பிளாஸ்டிக் பையை மெல்லுகிறது.

    எக்ஸ் தளத்தில் வைரலான வீடியோ இரண்டு மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், "மனிதர்கள் அருவருப்பானவர்கள் மற்றும் பூங்காவில் விலங்குகளுக்கு உணவளிக்க யார் அனுமதிக்கிறார்கள்" என்றார். மற்றொருவர், "இதனால் அனைத்து விலங்குகளும் அழிந்து வருகின்றன" என்றார்.

    இதற்கிடையே வீடியோ வைரலானதை அடுத்து, அந்த நபர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    பிளாஸ்டிக் பொருட்களால் உணவுகள் வீசப்படுகிறது. இந்த உணவை தேடி வரும் விலங்குகள் அதை உட்கொள்ளுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 2016 ஆம் ஆண்டு எலான் மஸ்க் நியூரோலிங்க் என்னும் நியூரோ டெக்னாலஜி நிறுவனத்தை தொடங்கினார்.
    • பார்கின்சன் மற்றும் ALS போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும்.

    பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எகஸ் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்களை தொடங்கி அதில் பல ஆராய்ச்சிகளும் புது விதமான எதிர்கால சிந்தனையுடன் செயல்படும் வாகனங்கள் மற்றும் ராக்கெட்டுகளையும் உற்பத்தி செய்து வருகிறார்.

    2016 ஆம் ஆண்டு எலான் மஸ்க் நியூரோலிங்க் என்னும் நியூரோ டெக்னாலஜி நிறுவனத்தை தொடங்கினார். எலான் மஸ்க் உடன் 7 விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் நிபுணர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட நிறுவனம் இது.

    இந்நிறுவனத்தின் பிரதான குறிக்கோள் என்னவென்றால் சாதாரண மனித ஆற்றலை கணினி மற்றும் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் பன்மடங்கு உயர்த்துவது தான். இந்த நிறுவனம் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தி அவர்களை எண்ணங்களால் கணினி, லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்த வைக்கும் குறிக்கோளுடன் துவங்கப்பட்டது.

    இதன் மூலம் நரம்பு சம்பந்தப்பட்ட நோயான பார்கின்சன் மற்றும் ALS போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும். இது தொடர்பான ஆராய்ச்சிகளில் நியூராங்க் ஆய்வாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

    அராய்ச்சியை தொடர்ந்து நியூராலிங்க் உருவாக்கிய சிப் முதற்கட்டமாக விலங்குகளில் பொருத்தி சோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு, இதனை மனிதர்களிடமும் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் நோலண்ட் அர்பாக் மூளையில் பயொனிக் சிப்பை பொறுத்தினர்.

    நோலண்ட் அர்பாக் பக்க வாத பாதிப்பு கொண்ட நபர். அவர் 8 ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நியூரோ லிங்க் அறுவை சிகிச்சையின் மூலம் அவரால் தற்பொழுது கணினியில் சதுரங்கம் மற்றும் இதர கேம்களை விளையாட முடிகிறது. அவரின் மூளையில் உள்ள சிப்பை எண்ணங்களால் கட்டுப்படுத்தி கம்ப்யூட்டரை உபயோகிக்கவும் முடிகிறது.

    இந்த வெற்றியை கணக்கில் கொண்டு அதே சிப்பை மூளையில் இன்னும் ஆழமாகவும், வெவ்வேறு அடுக்குகளிலும் வைத்து நியூராலிங்க் ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதன் மூலம் மனிதனுக்கு கம்ப்யூட்டருக்கும் ஒரு தொடர்பு உருவாகும்.

    இதன் மூலம் கண்பார்வை இல்லாதவர்களுக்கு கூட கண்பார்வை வர வைக்க முடியும் எனவும், மற்ற சிப் பொறுத்திய மக்களிடம் டெலிபதி மூலம் தான் நினைத்ததை பறிமாற முடியும் என கூறுகிறார்.

    இந்த சிப் நமது செல்போன் போல் தானாக அப்டேட் ஆகும் வசதியுடன் உருவாக்கப் போவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் அடுத்த இலக்கு கை, கால்கள் செயலிழந்த நபர்களிடமும் இந்த ஆராய்ச்சியை நடத்தவுள்ளனர்.

    எலான் மஸ்க் செய்வது ஒரு பக்கம் அறிவியல், விஞ்ஞானம் என மேலோங்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தாலும், மற்றொரு பக்கம் இது இயற்கைக்கு புறம்பானது. இதன் எதிர்வினை நாளை மனித இயல்பையும் , மனிதத்தையும் கேள்விக்குறியாக்கும் என்ற அச்சம் பரவலாக எழுகிறது.

    • இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதம் குறித்த தகவல் இல்லை.

    இந்தோனேசியாவில் 6.0 என்கிற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதம் குறித்த உடனடி தகவல்கள் வெளிவரவில்லை.

    நிலநடுக்கம் கணிசமான ஆழத்தில் தாக்கியதால், கடுமையான சேதத்திற்கான சாத்தியம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பொதுமக்களுக்காக 6.6 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையை உருவாக்க உள்ளது.
    • அதில் 2 கி.மீ வரை நீச்சல் குளமும் வரவுள்ளது.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடாக துபாய் பார்க்கப்படுகின்றது. நாள் தோறும் பல்லாயிரம் கணக்கான மக்கள் துபாயை சுற்றி பார்ப்பதற்காக மட்டும் வேறு நாடுகளிலிருந்து வருகிறார்கள்.

    மேலும் மக்களை கவரும் வகையில் உலகின் மிக உயரமான கோபுரம், ஆடம்பரமான உணவகங்கள் மற்றும் தங்குவதற்கான ஹோட்டல்கள் என அட்டகாசமான இடங்களும் துபாயில் இருக்கின்றன.

    அந்த வகையில் சுற்றுலா தளங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை துபாய் கையில் எடுத்துள்ளது. பொதுமக்களுக்காக 6.6 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையை உருவாக்க உள்ளது. அதில் நீச்சல் அடித்து கொண்டே துபாயின் அழகை ரசிக்க 2 கி.மீ வரை நீச்சல் குளமும் வரவுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களான தீம் பார்க்குகள் பல பொழுதுபோக்கு மண்டலங்கள் 330 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக உள்ளன.

    இதனால் துபாய் மக்கள் மட்டுமின்றி மற்ற நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியுடன் இந்த சுற்றுலா தளத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கினறனர்.

    • ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அந்நாட்டு இசைக்கலைஞர்கள் நமது தேசிய கீதத்தை இசைத்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    வியன்னா:

    ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு இசைக்கலைஞர்கள் நமது தேசிய கீதத்தை இசைத்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    அந்நாட்டு சான்சிலர் மாளிகைக்கு வந்த பிரதமர் மோடியை சான்சிலர் கார்ல் நெஹமர் வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு உறவு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    எனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் ஆஸ்திரியா வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இது போருக்கான நேரமல்ல என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட மனித குலம் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசித்தோம்.

    பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் சர்வதேச சோலார் ஒத்துழைப்பு கூட்டணியுடன் இணைந்து ஆஸ்திரியா பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

    பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் ஏற்கமுடியாது. அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசிய கார்ல் நெஹ்மர், உக்ரைன் மீது ரஷியா நடத்தும் தாக்குதல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். இந்தியா ஒரு செல்வாக்கு பெற்ற நாடு. ரஷியா-உக்ரைன் இடையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என தெரிவித்தார்.

    • மெஸ்சியை நிழல் போல பின் தொடரும் அவரது பாதுகாவலரின் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
    • வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்ஸி. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் பொது இடங்களில் செல்லும் போது ரசிகர்கள் அவரை நெருங்க முயற்சிப்பது வழக்கம். சில நேரங்களில் ரசிகர்களுடன் மெஸ்ஸி புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால் அதில் சில ரசிகர்கள் அத்துமீறி அவர் மீது கைவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். எனவே இதை தடுப்பதற்காக மெஸ்சியின் பாதுகாவலர்கள் அவருடன் எப்போதும் செல்வார்கள்.

    இந்நிலையில் மெஸ்சியை நிழல் போல பின் தொடரும் அவரது பாதுகாவலரின் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. அவரது பெயர் யாசின் சூகோ. இவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடற்படை வீரராக அமெரிக்க ராணுவத்திற்காக பணியாற்றியவர். இவரை பற்றிய வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அதில் ஒருவர், நீங்கள் உலகின் புகழ் பெற்ற நபராக இருந்தால்... நிச்சயம் உங்களை பிடிக்காத சிலரும் இருப்பார்கள். எனவே அனைவரும் உங்களை தொட அனுமதிப்பது மிகப்பெரிய ஆபத்தை தரும். எனவே மெஸ்ஸி தன்னை பாதுகாக்க இதுபோன்ற நபரை தேர்வு செய்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

    • சம்பவம் நடந்த போது வாகனத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
    • பயனர்கள் பலரும் இந்த சம்பவத்தை மிகவும் விசித்திரமானது என பதிவிட்டுள்ளனர்.

    இங்கிலாந்து கடற்கரையில் ஐஸ்கிரீம் வாகனம் ஒன்று கடலில் அடித்து செல்லப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள ஒரு பிரபல கடற்கரையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்வதற்காக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    சம்பவத்தன்று கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஐஸ்கிரீம் வாகனத்தை கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது. இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த வாகனத்தை வெளியே இழுக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்களால் முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு ஐஸ்கிரீம் வாகனம் மீட்கப்பட்டது. சம்பவம் நடந்த போது வாகனத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. பயனர்கள் பலரும் இந்த சம்பவத்தை மிகவும் விசித்திரமானது என பதிவிட்டுள்ளனர்.

    • வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமீப காலமாக தம்பதிகள் திருமண போட்டோஷூட்களை வித்தியாசமான முறையில் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு காதல் ஜோடி, ஒரு ரோப் காரில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் சாகசம் செய்தபடி மேஜையில் அமர்ந்து 'போட்டோஷூட்' நடத்தி உள்ளனர்.

    இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு ஜோடி, பள்ளத்தாக்கு பகுதியில் ரோப் காரில் அமர்ந்துள்ளனர். பார்ப்பதற்கு டைனிங் டேபிள் வடிவில் அமைக்கப்பட்ட அந்த ரோப்பில் அமர்ந்து தம்பதியினர் கேபிளை பிடித்தபடி பேசுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி 69 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 'தி லாஸ்ட் சப்பர்' என்று ஒரு பயனரும், பணத்தை வீணாக்குகிறீர்கள் என ஒரு பயனரும் பதிவிட்டுள்ளனர்.

    • பிரியாணி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • பிரியாணிக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர்.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தயாராகும் விதவிதமான பிரியாணிகளை வெளிநாட்டினரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். பிரியாணிக்கு இந்தியர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர்.

    இந்நிலையில் உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் தயாரித்துள்ள பிரியாணி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வீடியோவில், 'இது எனது முதல் முயற்சி' என்ற பதிவுடன் சைமன் வோங் பிரியாணி செய்முறையை விளக்குகிறார்.

    பிரியாணிக்கு தேவையான பொருட்கள் மற்றும் அவற்றின் கலவை குறித்து படிப்படியாக விவரிக்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், எந்த மாநிலத்தில் சிறந்த பிரியாணி உள்ளது என்பதை கூறுங்கள். நான் சுவைத்து பார்க்க வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும்.
    • மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

    தெக்ரான்:

    ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணி யாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வ தாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

    இதனால் அப்போது பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது தெரியவந்தது. துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளது. அந்த அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்தனர்.

    இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகம் ஒன்று கூறும் போது, துருக்கி ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு போலீஸ் அதிகாரிகள் சென்று ஊழியர்கள் ஹிஜாபைக் கடைப்பிடிக்காதது குறித்து முதல் எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால் ஊழியர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து துருக்கி ஏர்லைன்ஸ் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    கடந்த 2022-ம் ஆண்டு ஹிஜாப் சரியாக அணிய வில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனால் ஈரானில் போராட்டங்கள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
    • ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகாரமாக மாற்ற விரும்புகிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோபை டன் (வயது 81), குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    இந்த நிலையில் டிரம்ப்பை துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். லாஸ்வேகாசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கமலாஹாரிஸ் பேசியதாவது:-

    டிரம்பின் ஆலோசகர்கள் 900 பக்க வரைபடத்தை உருவாக்கி, "திட்டம் 2025" என்று அழைக்கிறார்கள். இது சமூகப் பாதுகாப்பைக் குறைக்கும் திட்டம். இதில் கருத்தடைக்கான அணுக்களை கட்டுப்படுத்தும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், இனப்பெருக்க சுதந்திரத்தின் மீதான டிரம்பின் முழு தாக்குதலாக இருக்கும்.

    டிரம்ப்புக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் கருக்கலைப்பை தடை செய்யும் தேசிய கருக்கலைப்பு தடையில் கையெழுத்திடுவார். ஆனால் நாங்கள் அதை நடக்க அனுமதிக்கப் போவதில்லை. ஏனென்றால், பெண்களை நாங்கள் நம்புகிறோம். பெண்களுக்கு அவர்களின் சொந்த நலனில் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்.

    அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. டிரம்ப் நமது ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகாரமாக மாற்ற விரும்புகிறார். அவர் அமெரிக்க ஜனநாயகத்தை சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார். எனது தாய் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்தார். அவரது வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள் இருந்தன.

    அவை தனது இரண்டு மகள்களை வளர்ப்பது மற்றும் மார்பக புற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியவை ஆகும். எனது தாய் அவரது கனவுகளைத் தொடர யாரிடமும் அனுமதி கேட்கவில்லை.

    இது நமது வாழ்நாளின் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் கடினமாக இருக்கும் என்பதை எப்போதும் அறிந்திருக்கிறோம். சில நாட்களாக அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவது என்பது எளிதானது அல்ல என்பதை நினைவூட்டுகிறது. ஆனால் அதிபர் ஜோபைடனைப் பற்றி நாம் அறிந்த ஒன்று என்னவென்றால் அவர் ஒரு போராளி. இவ்வாறு அவர் கூறினார்.

    • தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.

    சீனாவில் நீண்ட நேரம் தொலைக்காட்சியை பார்த்த 3 வயது குழந்தை கையில் கிண்ணத்தை கொடுத்து, அதனை கண்ணீரால் நிரப்புமாறு தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள யூலின் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இரவு உணவு தயாரித்தபோது, தந்தை தனது மகள் ஜியாஜியாவை சாப்பாட்டு மேஜைக்கு அழைத்தார். ஆனால் டிவி பார்ப்பதில் மூழ்கியிருந்ததால் அவள் பதிலளிக்கவில்லை.

    விரக்தியடைந்த அவர் தொலைக்காட்சியை ஆஃப் செய்தார். இதனால் ஜியாஜியா அழத் தொடங்கினாள்.

    இதைக்கண்ட ஜியாஜியா தந்தை ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்து, இந்த கிண்ணத்தை உன் கண்ணீரால் நிரப்பியவுடன் நீ டிவி பார்க்க மீண்டும் தொடங்கலாம் என்று கூறி உள்ளார்.

    ஜியாஜியா தனது கண்களுக்கு கீழே கிண்ணத்தை வைத்து கண்ணீரை சேகரிக்க முயற்சி செய்தார். பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.

    இந்த வீடியோ ஜியாஜியா அம்மா பகிர்ந்துள்ளார். பின்னர் ஜியாஜியா தந்தை அவளை சிரிக்கச்சொல்லி போட்டோ எடுத்தார். பின் சிரிக்கும் புகைப்படத்தையும் அழும் புகைப்படத்தையும் அவளிடம் காண்பித்தது வேடிக்கையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சில நிமிடங்களுக்கு பின் பெற்றோர் குழந்தையை சமாதானப்படுத்தினாலும் அவர்களின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    ×