காதல் ஜோடியின் சாகச 'போட்டோஷூட்'

வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
காதல் ஜோடியின் சாகச 'போட்டோஷூட்'
Published on

சமீப காலமாக தம்பதிகள் திருமண போட்டோஷூட்களை வித்தியாசமான முறையில் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு காதல் ஜோடி, ஒரு ரோப் காரில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் சாகசம் செய்தபடி மேஜையில் அமர்ந்து 'போட்டோஷூட்' நடத்தி உள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு ஜோடி, பள்ளத்தாக்கு பகுதியில் ரோப் காரில் அமர்ந்துள்ளனர். பார்ப்பதற்கு டைனிங் டேபிள் வடிவில் அமைக்கப்பட்ட அந்த ரோப்பில் அமர்ந்து தம்பதியினர் கேபிளை பிடித்தபடி பேசுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி 69 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.

வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 'தி லாஸ்ட் சப்பர்' என்று ஒரு பயனரும், பணத்தை வீணாக்குகிறீர்கள் என ஒரு பயனரும் பதிவிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com