என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தல்.
    • மோடி தெரிவித்ததை போல், இது போருக்கான காலக்கட்டம் இல்லை.

    ரஷியாவுடன் வைத்துள்ள நட்புறவை பயன்படுத்தி உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த அந்நாட்டிற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

    இது குறித்து அமெரிக்க இந்துஸ்தானி செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் மேக்லியோட் அளித்த பேட்டியில், பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்து இருந்த, "இது போருக்கான காலம் இல்லை" என்பதை எடுத்துரைத்தார்.

     


    தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா உள்பட அனைத்து நட்பு நாடுகளும் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்த அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா வலுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. ரஷியா உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும். பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்ததை போல், இது போருக்கான காலக்கட்டம் இல்லை."

    "இந்தியா மற்றும் ரஷியா இடையே மிகவும் விசேஷமான நட்புறவு உள்ளது. இந்த நட்புறவை பயன்படுத்தி ரஷியாவிடம் போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஐநா விதிகளை மீறும் செயல்," என்று அவர் தெரிவித்தார். 

    • அங்கீகரிக்கப்பட்ட பூச்சிகளில் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள், புழுக்கள் மற்றும் பட்டுப்புழுக்கள் ஆகியவை அடங்கும்.
    • இந்த பூச்சிகள் கடல் உணவுகள், உப்பு கலந்த முட்டை, நண்டு போன்றவற்றில் சேர்க்கப்படும்.

    பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள், புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவுக் கழகம் (எஸ்.எப்.ஏ) ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த உணவுகள் சீன மற்றும் இந்திய உணவுகள் உட்பட உலகளாவிய உணவுகளின் சர்வதேச புகழ்பெற்ற மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது.

    அங்கீகரிக்கப்பட்ட பூச்சிகளில் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள், புழுக்கள் மற்றும் பட்டுப்புழுக்கள் ஆகியவை அடங்கும். இந்த பூச்சிகள் கடல் உணவுகள், உப்பு கலந்த முட்டை, நண்டு போன்றவற்றில் சேர்க்கப்படும்.

    30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிக தைரியத்துடனும், ஆர்வத்துடனும் முன்வந்து இந்த வகை உணவுகளை வாங்கிச் சாப்பிடுவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    • 6 வயதுடைய ரஷிய சிறுமி, இந்திய பாணியிலான பாவாடை தாவணி அணிந்து பங்க்ரா நடனத்தில் பங்கேற்றது பலரது பார்வையையும் ஈர்த்தது.
    • வீடியோவை ஒரே நாளில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.

    பிரதமர் மோடி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா சென்று இறங்கியதும் அவருக்கு ரஷிய அரசு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்தியர்களும் ரஷியர்களும் கலந்து கொண்ட வரவேற்பு விழாவில், 6 வயதுடைய ரஷிய சிறுமி, இந்திய பாணியிலான பாவாடை தாவணி அணிந்து பங்க்ரா நடனத்தில் பங்கேற்றது பலரது பார்வையையும் ஈர்த்தது. அவருக்கு அருகில் நிற்கும் பெண்கள் பெரியவர்களாக இருக்கும்போது, அவர்களுக்கு இடையே நிற்கும் இந்த சிறுமி, மற்றவர்களை பார்த்தபடி அழகாக துள்ளிக்குதித்து நடனமாடுவது பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்கிறது.

    இணையதளத்தில் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டது. எக்ஸ் வலைத்தளத்தில் பிரபல ஊடகம் வெளியிட்ட இந்த வீடியோவை ஒரே நாளில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.


    • யானையின் அருகில் பராமரிப்பாளர்கள் யாரும் இல்லை.
    • சிறுவன் தவறவிட்ட காலணியை யானை துதிக்கையால் எடுத்து வேலியை தாண்டி உயரமான மேடையில் நிற்கும் சிறுவனிடம் நீட்டியது.

    யானை தொழுவத்திற்குள் சிறுவன் தவறவிட்ட செருப்பை எடுத்து யானை கருணையுடன் திரும்ப கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் அதிகம் ரசிக்கப்படுகிறது.

    சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் வெய்ஹாய் உயிரியல் பூங்காவில் அந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கம்பி வேலி போட்ட அடைப்பிற்குள் விடப்பட்டு உள்ள யானையை ரசிக்க உயரமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

    25 வயதான அந்த யானையை ரசித்துக் கொண்டிருந்தபோது 5 வயதிற்கு உட்பட்ட சிறுவன் ஒருவன் தனது காலணியை தவறவிட்டான். அது யானையின் தொழுவத்திற்குள் சென்று விழுந்தது. அப்போது யானையின் அருகில் பராமரிப்பாளர்கள் யாரும் இல்லை. இருந்தபோதிலும் சிறுவன் தவறவிட்ட காலணியை யானை துதிக்கையால் எடுத்து வேலியை தாண்டி உயரமான மேடையில் நிற்கும் சிறுவனிடம் நீட்டியது.

    சிறுவனும் அதை கைநீட்டி பெற்றுக் கொண்டான். புத்திசாலித்தனமும், கருணையும் மிகுந்த யானையின் இந்த செய்கை அங்கு நின்ற பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒருவர் இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பரப்ப, பல்வேறு வலைத்தளங்களுக்கும் அது பரவியது. இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 52 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.


    • கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4வது பள்ளி இதுவாகும்.
    • 'நாங்கள் பள்ளியின் வாசலில் அமர்ந்திருக்கும்போது, ராக்கெட்டுகள் எங்களை நோக்கி பாய்ந்தன'

    பாலஸ்தீனத்தில் காசா, ரஃபா நகரங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் நேற்று [ஜூலை 9] காசா நகரில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது  இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

    காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல்- அவ்டா பள்ளி மீது குறிவைத்து இஸ்ரேல் ராணவம் இந்த வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள கான் யூனிஸ் நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறனறனர். டாக்குதலில்போது சுமார் 2000 பேர் பள்ளியில் இருந்துள்ளனர் 

    கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4வது பள்ளி இதுவாகும். இந்த தாக்குதலை மோசமான படுகொலை என்று தெரிவித்துள்ள பாலஸ்தீன ஊடகம், உயிரிழந்த 29 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவித்துள்ளது. 'நாங்கள் பள்ளியின் வாசலில் அமர்ந்திருக்கும்போது, ராக்கெட்டுகள் எங்களை நோக்கி பாய்ந்தன' என்று தாக்குதலில் உயிர்பிழைத்த முகமது சுக்கார் என்பர் தெரிவித்துள்ளார்.

    அல்- அவ்டா பள்ளிக்கு அருகில் ஹமாஸ் உறுப்பினர்கள் பதுங்கியிருந்த்ததாகவும் அதனாலேயே தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மத்திய காசாவின் நஸ்ரேத்தில் அமெரிக்கர்களால் நடத்தப்பட்ட அல்- ஜாவ்னி பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • இரு நாட்டு தலைவர்களும் நாளை அதிகாரப்பூர்வ ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
    • கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரியாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    வியன்னா:

    2 நாள் ரஷிய பயணத்தை முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து ஆஸ்திரியா புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். இதையடுத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பின்னர், இரு நாட்டு தலைவர்களும் நாளை அதிகாரப்பூர்வ ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

    அதேவேளை, இந்திய பிரதமர் மோடி ஆஸ்திரியா வந்தது மகிழ்ச்சியளிப்பதாக அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கார்ல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடியை வியன்னாவுக்கு வரவேற்கிறேன். உங்களை ஆஸ்திரியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆஸ்திரியாவும் இந்தியாவும் நல்ல நண்பர்கள். உங்கள் இந்த வருகையின்போது அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்து ஆலோசிக்க ஆவலாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல் பிரதமர் மோடியும், ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தங்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. நாளைய விவாதத்தை எதிர்பார்க்கிறேன். உலக நன்மைக்காக நமது நாடுகள் தொடர்ந்து இணைந்து செயல்படும் என எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

    கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரியாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் மற்றும் காசாவில் சமீபத்தில் கொடூர தாக்குதல்கள் நடந்தன.
    • அங்கு புதிய அமைதி முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார் போப் பிரான்சிஸ்.

    வாடிகன் சிட்டி:

    உக்ரைன் ரஷியா இடையிலான போரில் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், காசாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போரும் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவில் ஆக்மத்தித் என்ற குழந்தைகள் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா திடீரென அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனாலும், உக்ரைனில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள்மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை எனக்கூறிய ரஷியா, இதற்கு பொறுப்பேற்க முடியாது என மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், உக்ரைன் மற்றும் காசாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். அங்கு, புதிய அமைதி முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வாடிகன் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    படுகொலை செய்யப்பட்ட ஒன்றுமறியாத மக்கள் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு தன்னுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதுடன், நடந்து வரும் மோதல்களுக்கு முடிவு ஏற்படுத்துவதற்கான வலுவான பாதைகள் அடையாளம் காணப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறார். அதற்கான நம்பிக்கையையும் தெரிவித்துக் கொள்கின்றார்.

    உக்ரைனில் மரணம் அடைந்தவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீனியர்கள் விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • வார்னர் ப்ரோஸ்-க்கு சொந்தமானது அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க்.
    • டாம் அண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் , ஜானி பிராவோ கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம்.

    வார்னர் ப்ரோஸ்-க்கு சொந்தமானது அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க். அனைவரும் சிறுவயதில் டாம் அண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் , ஜானி பிரேவோ கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம். இதை அனைத்தும் தயாரித்து அனைவரும் மகிழ்ச்சிக்கு வழிவகையாக இருந்தது கார்ட்டூன் நென்வொர்க் சேனல் ஆகும்.

    ஆனால் நாளடைவில் இதற்கு போட்டியாக பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தன. ஆனாலும் கார்ட்டூன் நெட்வொர்க்கின் உச்சம் குறையவில்லை. 2021 ஆம் ஆண்டு கோவிட் வந்த போது பல நிறுவனத்தில் இருந்து பணியிடை நீக்கம் நடந்தது. ஆனால் கோவிட் காலத்தில் எந்த ஒரு நட்டமும் இல்லாமல் இயங்கியது இந்த அனிமேஷன் துறை மட்டுமே ஆனால் பணத்தாசை பிடித்த முதலாளிகளுக்கு பலியாகும் விதமாக பல அனிமேஷன் நிபுணர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனால் அடுத்த சில ஆண்டுகளில் பல பிரபல அனிமேஷன் ஸ்டூடியோக்களில் இருந்து பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் பல டிசைனர்ஸ் ஒன்றிணைந்து ஒரு கார்ட்டூன் நெட்வொர்க்கை கிண்டல் செய்யும் விதமாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் உங்களுக்கு பிடித்தமான கார்ட்டுன் நெட்வொர்க் சேனலின் பிடித்த ஷோவின் கிலிப்பை #ripcartoonnetwork என்று பதிவிடமாறு கூறியிருந்தனர்.

    இதன் விளைவாக இந்த ஹேஷ்டாக் டிவிட்டரில் வைரலாகி , இன்று முழுவதும் டிரெண்டிங்கில் உள்ளது. இதனால் பலரும் கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் மூடப்பட்டது என தவறான கண்ணோட்டத்தில் புரிந்துக்கொண்டனர்.

    • ரஷியாவின் உயர்ந்த விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அளித்து கவுரவித்தார்.
    • இந்த உயர்ந்த விருதை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார் பிரதமர் மோடி.

    மாஸ்கோ:

    இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.

    இதற்கிடையே, மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வணிகம், எரிபொருள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், ரஷியாவின் உயர்ந்த விருதான ஆர்டர் ஆப் செயிண்ட் ஆண்ட்ரூ த அபோஸ்தல் விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் புதின் அளித்து கவுரவித்தார்.

    இந்த உயர்ந்த விருதை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • 22-வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷியா தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுகிறது.
    • இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைசார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

    மாஸ்கோ:

    இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார்.

    மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷிய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

    இதற்கிடையே, மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.

    இந்நிலையில், மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். வணிகம், எரிபொருள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    அப்போது பேசிய பிரதமர் மோடி, குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்களுக்கு மத்தியில் அமைதி பேச்சுவார்த்தை வெற்றியடையாது என தெரிவித்தார்.

    இருநாட்டு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைசார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மின்னணு வாக்கு இயந்திரங்களும் தபால் வாக்கு முறையும் முறைகேடுக்கான சாத்தியங்கள் அதிகம் கொண்டவை.
    • நேரடியாக வந்து வாக்களிக்கும் முறையையும் கட்டாயப்படுத்துவது மட்டுமே தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும்.

    அதிரடியான கருத்துக்களுக்கு சொந்தக்காரரான உலக பணக்காரர் எலான் மஸ்க், இ.வி.எம் வாக்கு இயந்திரத்தில் முறைகேடுக்கான சாத்தியங்கள் அதிகம் என்று மீண்டும் தெரிவித்திருப்பது உலக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

    தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மஸ்க், "மின்னணு வாக்கு இயந்திரங்களும் தபால் வாக்கு முறையும் முறைகேடுக்கான சாத்தியங்கள் அதிகம் கொண்டவை. வாக்குச்சீட்டுகளையும் நேரடியாக வந்து வாக்களிக்கும் முறையையும் கட்டாயப்படுத்துவது மட்டுமே தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கடந்த மாதம் எலாஸ் மஸ்க் தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்காவை தாண்டி இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உலகின் பெரும்பாலான நாடுகளில் தேர்தலில் EVM இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவை எளிதில் ஹேக் செய்ப்பட அதிக வாய்ப்புள்ளதாக மஸ்க் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புபுள்ளது. எனவே தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும். மனிதர்களாலும், ஏ.ஐ தொழில்நுட்பத்தாலும் இ.வி.எம் எளிதில் ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    முன்னதாக இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்கும் சமயத்திலும் இ.வி.எம் வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில்தான் இ.வி.எம் குறித்த தொழிநுட்ப சாம்ராட்டான எலான் மஸ்கின் கருத்து பூகமபத்தை கிளப்பியது.

    • மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார்.
    • பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.

    மாஸ்கோ:

    இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷிய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

    மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.

    இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடியை பேட்டரி காரில் அமரவைத்து தனது மாளிகை வளாகத்தில் அதிபர் புதின் வலம் வந்தார். அப்போது குதிரை தொழுவத்தையும் பிரதமர் மோடிக்கு அவர் காண்பித்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியது.

    ×