என் மலர்
தலைப்புச்செய்திகள்
'ஹாட் ஸ்பாட் 2 மச்' (Hot Spot 2 Much) என்பது 2024ஆம் ஆண்டு வெளியான 'ஹாட் ஸ்பாட்' திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும். முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள புதிய தமிழ் அந்தாலஜி திரைப்படம் இது. விஷ்ணு விஷால் தயாரித்து, தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர், எம்.எஸ். பாஸ்கர், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் இந்தப் பட்த்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் சமூகப் பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் கடந்த ஜனவரி 23ஆம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், ஹாட் ஸ்பாட் 2 மச் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

இந்த நிலையில், ஹாட் ஸ்பாட் 2 மச் திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்தப் படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைக்க அனீல் ரெட்டி தயாரித்துள்ளார்.
- பெட்ரோல் செலுத்தும் குழாயின் முகப்பு பகுதியில் தீயைப் பற்ற வைத்துள்ளார்.
- அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
சிகரெட் பிடிக்கக்கூடாது என கூறியதால் பெட்ரோல் பங்க்-குக்கு நபர் ஒருவர் தீ வைக்க முயன்ற சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நிகழ்ந்துள்ளது.
ராய்ப்பூரின் உர்லா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று, தர்மேந்திரா மற்றும் இம்ரான் என்ற இரு இளைஞர்கள் தங்களது பைக்கிற்கு பெட்ரோல் போட வந்துள்ளனர்.
இம்ரான் பைக்கில் அமர்ந்திருக்க, அருகில் நின்றிருந்த தர்மேந்திரா திடீரென சிகரெட் பற்ற வைக்க முயன்றுள்ளார்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கு புகைபிடிக்கக் கூடாது என்று தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தர்மேந்திரா, ஊழியர் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த போதே, தனது கையில் இருந்த தீப்பெட்டியால் பெட்ரோல் செலுத்தும் குழாயின் முகப்பு பகுதியில் தீயைப் பற்ற வைத்துள்ளார்.
பெட்ரோல் வெளியே வந்து கொண்டிருந்ததால், நொடிப் பொழுதில் தீயானது, பைக் மற்றும் பெட்ரோல் நிரப்பும் இயந்திரம் வரை பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு, அங்கிருந்த தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைத்ததால் மிகப்பெரிய வெடி விபத்து தவிர்க்கப்பட்டது.
பெட்ரோல் பங்க் மேலாளர் அளித்த புகார் மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், தர்மேந்திரா மற்றும் இம்ரானை உர்லா போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
- விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
- சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப். 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தவெக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் வருகிற 23-ந் தேதி அன்று நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது, தற்போது நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்க 4,900 நிர்வாகிகளுக்கு க்யூ ஆர் கோடு வசதியுடன் கூடிய நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சீட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே நிர்வாகிகள் அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இது முற்றிலும் கட்சி நிர்வாகிகளுக்கான சந்திப்பு என்பதால், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக்குறைவு உள்ள வர்கள் மற்றும் நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் நேரில் வருவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கட்சியின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை கருதி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடகிழக்கு டெல்லியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.
- ஐஎஸ்ஐ உடன் தொடர்புடைய சலீம் பிஸ்டல் என்பவரிடம் துப்பாக்கிகள் வாங்கியுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த சர்வதேச குற்ற கும்பலான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த பெண் தாதா கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நேஹா என்ற குஸ்னுமா அன்சாரி, 'மேடம் சேகர்' என்று அழைக்கப்படுகிறார்.
வடகிழக்கு டெல்லியில் ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வந்த நேஹா, வெளிப்பார்வைக்கு சாதாரண பெண்ணாக வாழ்ந்து மறைமுகமாக தாதாவாக செயல்பட்டு வந்துள்ளார்.
இவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் போதைப்பொருள் விநியோக நெட்வொர்க்கை நிர்வகித்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேஹாவுடன் அவரது கூட்டாளியான மஃபூஸ் என்கிற பாபி கபுதர் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாபி கபுதர், பாகிஸ்தானின் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 'சலீம் பிஸ்டல்' என்று அழைக்கப்படுபவரிடம் என்பவரிடமிருந்து நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்கி வந்துள்ளார்.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் நடத்திய பல முக்கியக் குற்றங்களுக்குப் பாபி கபுதர் வழங்கிய ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டதாகப் போலீசார் தெரிவிக்கின்றனர்.
பஞ்சாபி பாடகர் சிந்து மூஸேவாலா கொலை, திஷா பதானி வீடு அருகே துப்பாக்கிச் சூடு, இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
2024 இல் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் கொலையும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம் இந்த சர்வதேச நெட்வொர்க் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாரன்ஸ் பிஷ்னோய்:
31 வயதான லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தட்டரன்வாலி கிராமத்தில் வசதி படைத்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார், இவரின் பிஸ்னாய் சமுதாயம் பஞ்சாப் , அரியானா, மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.
சண்டிகரில் கல்லூரி காலத்திலேயே மாணவர் அரசியலை மறைப்பாக வைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடத்தொடங்கியுள்ளார் லாரன்ஸ்.
2010 ஆம் ஆண்டு அவர் மீது முதல் வழக்கு பதிவாகியுள்ளது. அதுவும் ஓரூ கொலை முயற்சி வழக்கு. இவ்வாறு குற்றச்செயலுக்காக ஒரு குவளை சிறிய அளவில் தொடங்கி காலப்போக்கில் அதை விரிவுபடுத்தியுள்ளார்.
ஆள் கடத்தல், காண்டிராக்ட் கொலைகள் என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் இவர்கள் சிறைகளில் இருந்தும்கூட நெட்வொர்க்கிங் மூலம் செயல்பட்டவரே இருக்கின்றனர் கடந்த 2015 இல் லாரன்ஸ் பிஷ்னோய் கைதுசெய்யப்பட்டு தற்போது குஜராத்தின் அகமதாபாத் சபர்மதி சிறையில் உள்ளார்.
- அவர்கள் இருவரை பற்றி எனக்கு தெரியும். மோடியை பற்றி நன்றாகவே தெரியும்.
- 200 சதவீத வரி விதிப்பேன் என்றவுடன் போரை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் அமைத்த அமைதி வாரியத்தின் கூட்டத்தில் பேசிய டிரம்ப், இரு நாடுகள் மீதும் 200 சதவீதம் வரி விதிப்பேன் என மிரட்டியதால் இந்தியா பாகிஸ்தான் போரை கைவிட்டன என்று தெரிவித்தார்.
மோதல் தீவிரமடைந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நான் இருவரையும் (மோடி, ஷெபாஸ் ஷெரீப்) போனில் அழைத்தேன். அவர்கள் இருவரை பற்றி எனக்கு தெரியும். மோடியை பற்றி நன்றாகவே தெரியும்.
இந்த பிரச்சனையை உங்களுக்குள் தீர்க்கவில்லை என்றால் உங்களுக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் தரமாட்டேன் என்று நான் மிரட்டினேன். நீங்கள் சண்டை போட்டால் ஒவ்வொருவர் மீதும் 200 சதவீத வரி விதிப்பேன் என்றவுடன் போரை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.
இருவரும் சண்டை போடவே விரும்பினர், ஆனால் பணம் என்று வந்துவிட்டால், அதை போல உலகில் வேறெதுவுமில்லை.
இதில் நிறைய பணம் சம்பந்தப்பட்டுள்ளது என்று உணர்ந்தவுடன் இருவரும், சரி நாங்கள் சண்டையை நிறுத்துகிறோம் என்று கூறிவிட்டனர். ஆனால் ஏற்கனவே 11 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டிருந்தன. மிகவும் விலையுயர்த்தவை அவை" என்று கூறி முடித்தார்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரலில் 16 பேர் கொல்லப்பட்ட பாஹலாம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7 அன்று ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. தொடர்ந்து இரு நாடுகளும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று மாலை உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
- ஷேக் அகமது கிராந்தியை திருமணம் செய்து கொண்டார்.
- மனைவி டி.வி.யில் சத்தம் அதிகமாக வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி மண்டலத்தில் உள்ள பெடவட்லபுடியைச் சேர்ந்தவர் ஷேக் அகமது (வயது 26). ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, மங்களகிரியைச் சேர்ந்த கிராந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கிராந்தியின் முதல் கணவர் வழக்கு ஒன்றில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் ஷேக் அகமது கிராந்தியை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மங்களகிரியில் உள்ள டிட்கோ குடியிருப்பு பி-16 பிளாக்கில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு, ரம்ஜான் நோன்பு நோற்றிருந்த அகமது வீட்டிற்கு வந்தார். அந்த நேரத்தில், அவரது மனைவி டி.வி.யில் சத்தம் அதிகமாக வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.
சத்தத்தை குறைக்கும்படி அகமது கூறினார். இதனைக் கேட்டதும் கிராந்தி கோபத்தில் தனது கணவரை கத்தியால் குத்தினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
பலத்த காயமடைந்த அகமதுவை விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இப்படியெல்லாம் நடக்கிறது என ஜாக்கிரதையாக இருக்கம் வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- வருகிற சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ம.தி.மு.க.வுக்கு என்பது முக்கியமல்ல.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை.
மதுரை:
மதுரையில் ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-
ம.தி.மு.க.வில் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் ம.தி.மு.க. தொண்டர்கள் ராணுவ உறுதி கொண்டவர்கள். கொண்ட லட்சியத்தில் உறுதியாக நடப்பவர்கள். எனவே ஒவ்வொரு கிராமங்களிலும் 10 பேர் ம.தி.மு.க.வினர் இருந்தாலும் அவர்கள் லட்சியம் மிக்க வீரர்களாக திகழ்வார்கள்.
தி.மு.க. என்ற திராவிட இயக்கம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். தென்னாட்டில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரால் பாராட்டப்பட்ட இயக்கம் தி.மு.க. இந்த இயக்கம் வளர பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் பெரும் உதவியாக இருந்தார். அதுபோல தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வை வளர்க்க எனது கால் படாத இடமே இல்லை என்று சொல்லலாம்.
அந்த அளவுக்கு தி.மு.க.வின் வளர்ச்சியில் எனக்கும் பங்கு இருக்கிறது. எனவே இந்த ஆட்சி தொடர வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் தொடரும் வகையில் ம.தி.மு.க. கேடயமாக இருக்கும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ம.தி.மு.க.வுக்கு என்பது முக்கியமல்ல. தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். அதனை கொண்டு வர கேடயமாக ம.தி.மு.க. இருக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எனவே பொதுமக்கள் திடீரென முளைக்கும் நடிகர்கள் கலை துறையில் முகத்தை காட்டி உங்களை வசியம் செய்ய நினைப்பார்கள். அவர்களுக்கு பண்பாடு இல்லை, லட்சியம் இல்லை வேலு நாச்சியார் போன்ற வரலாற்று தலைவர்களை தங்களது லட்சிய தலைவர்களாக சொல்லுவார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த தலைவர்களின் வரலாறு தெரியாது. எனவே அவர்களை நம்பி மக்கள் ஏமாந்து விட வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது
- தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. கருத்து.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், "ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருந்தது, இதற்கு வாழ்த்து தெரிவிக்க காலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். தி.மு.க.வின் ஐந்து ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்ததால், மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. மக்கள் நினைப்பதை தான் எனது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்"
தி.மு.க.வில் இணைவீர்களா என்று கேள்விக்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம், "பொறுத்து இருந்து பாருங்கள்" என்று தெரிவித்தார். தி.மு.க.வில் இணைவது பற்றிய கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காதது, ஓ. பன்னீர்செல்வம் தி.மு.க. ஆதரவு மனநிலையில் இருப்பதன் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
- பாரத் மண்டப பகுதிக்குள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இளைஞர் காங்கிரசார் புகுந்தனர்.
- மேலாடையை கழற்றி அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லி ஏஐ மாநாட்டு பகுதியில் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம் நடத்தியதுடன் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்துகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றைய மாநாட்டு நிகழ்ச்சியில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், கிரீஸ் பிரதமர் கிரிகோஸ், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி பாரத் மண்டப பகுதிக்குள் திடீரென புகுந்த இளைஞர் காங்கிரசார், தங்கள் மேலாடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த டெல்லி காவல்துறை, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்படுவதாக ராகுல் காந்தி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
- சட்டசபையில் 2 நாட்களாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
- தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும்.
2026-27-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த 17-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சட்டசபையில் 2 நாட்களாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
சட்டசபையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஐயப்பன் கூறியதாவது:
வருகின்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆசியோடும், புரட்சி தலைவி அம்மா ஆசியோடும் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று அவரை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது
- தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. கருத்து.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது மற்றும் அவையில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தனது ஆதரவு எம்.எல்.ஏ. பேசியது குறித்து ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், "ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருந்தது, இதற்கு வாழ்த்து தெரிவிக்க காலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். தி.மு.க.வின் ஐந்து ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்ததால், மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. மக்கள் நினைப்பதை தான் எனது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்," என்றார்.
- 2010இல் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா கைது செய்யப்பட்டிருந்தார்.
- அடுத்த விசாரணை மார்ச் 9 அன்று நடைபெறும்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
2018 இல் கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது பெங்களூரு தேர்தல் பிரசாரத்தில் அப்போது பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா குறித்து ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
ஒரு கொலை வழக்கு குற்றவாளி பாஜக தேசிய தலைவராக இருப்பதாக ராகுல் காந்தி சாடியிருந்தார்.
இந்த கருத்துக்களுக்காக ராகுல் மீது உ.பி.யின் சூல்தான்பூரை சேர்ந்த பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில் இன்று நேரில் ஆஜரான ராகுல் காந்தி நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். ராகுல் தனது வாதத்திற்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறும், அடுத்த விசாரணை மார்ச் 9 அன்று நடைபெறும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக கடந்த ஜூலை 2024 இல் இந்த வழக்கில் ராகுல் காந்தி தனது முதல் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் நேரில் பதிவு செய்திருந்தார். வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த டிசம்பரில் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தபோது ராகுல் ஆஜராக தவறிய நிலையில் ஜனவரியில் மீண்டும் நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட்டின் படி தற்போது ஆஜராகி உள்ளார்.
2010 இல் சோரபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டர் செய்த வழக்கில் அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






