என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.
    • ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90) காலமானார்.

    வயது மூப்பு மற்றும் உடல்குறைவு காரணமாக நீண்ட காலமாக மகாராஷ்டிராவின் லாத்தூரில் வீட்டு பராமரிப்பில் இருந்த அவர், இன்று காலை 6.30 மணியளவில் காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் சிவராஜ் பாட்டீல்.

    1972 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் லத்தூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் சிவராஜ் பாட்டீல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றினார்

    1980 ஆம் ஆண்டு முதல் முறையாக லத்தூரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார். தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    அன்றிலிருந்து 1999 வரை, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பாதுகாப்பு, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து போன்ற பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.

    1991 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை மக்களவைத் தலைவராகவும் 2004 முதல் 2008 ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராகவும் சிவராஜ் பாட்டீல் பணியாற்றினார்

    1991 முதல் 1996 வரை மக்களவை சபாநாயகராகப் பணியாற்றினார். அவரது பதவிக் காலத்தில், நாடாளுமன்ற நூலகக் கட்டிடம் கட்டுதல், மக்களவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புதல் போன்ற முக்கியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    2004 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சிவராஜ் பாட்டீல், மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று 2008 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    பின்னர் 2010 முதல் 2015 வரை பஞ்சாப் ஆளுநராகவும் அவர் பணியாற்றினார். 

    • திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!
    • நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

    திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    இன்று 76-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மும்பை குண்டுவெடிப்பின்போது அதற்கு பொறுப்பேற்று தனது பதவியைத் துறந்து புகழ் பெற்றார்.
    • தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90) காலமானார்.

    வயது மூப்பு மற்றும் உடல்குறைவு காரணமாக நீண்ட காலமாக மகாராஷ்டிராவின் லத்தூரில்  வீட்டு பராமரிப்பில் இருந்த அவர், இன்று காலை 6.30 மணியளவில் காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் சிவராஜ் பாட்டீல்.

    மும்பை குண்டுவெடிப்பின்போது அதற்கு பொறுப்பேற்று தனது பதவியைத் துறந்து புகழ் பெற்றார்.

    1980 ஆம் ஆண்டு முதல் முறையாக லத்தூரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார். தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    அன்றிலிருந்து 1999 வரை, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பாதுகாப்பு, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து போன்ற பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.

    • ரம்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • 3-வது மாதம் என்பதால் வழக்கம் போல் தனியார் ஸ்கேன் மையத்திற்கு ரம்யாவை அழைத்து சென்றுள்ளனர்.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி ரம்யா (வயது 26). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார். கடந்த 1-ந் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் கண்ணன் உறவினர்களை நம்ப வைத்துள்ளார்.

    இந்த நிலையில் ரம்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையில் ரம்யாவிற்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால் அவரது கணவர் கண்ணன் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் பரிசோதிக்க திட்டமிட்டது தெரியவந்தது.

    அதன்படி சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த நர்சு சுகன்யா (35), புரோக்கர் வனிதா (35) ஆகியோருடன் சேர்ந்து ஸ்கேன் மூலம் ரம்யாவுக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டு உள்ளார். இதையடுத்து 3-வது மாதம் என்பதால் வழக்கம் போல் தனியார் ஸ்கேன் மையத்திற்கு ரம்யாவை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் பரிசோதிக்கப்பட்டதில், அவருக்கு 3-வதும் பெண் குழந்தை என்பதை நர்சு சுகன்யா உறுதிப்படுத்தி கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து நர்சு சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகியோருடன் சேர்ந்து ரம்யாவிற்கு வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்திட கண்ணன் திட்டமிட்டு உள்ளார். அதன்படி வீட்டில் கருக்கலைப்பின்போது ரம்யாவிற்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளனர்.

    அப்போது அவர்கள் மாடிப்படியில் இருந்து கர்ப்பிணி தவறிவிழுந்து காயம் அடைந்து விட்டதாக கூறி உள்ளனர். இதையடுத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியபோது வழியில் கர்ப்பிணி இறந்து விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக ரம்யாவின் கணவர் கண்ணன், நர்சு சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகிய 3 பேரையும் கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
    • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார்.

    வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வரும் அமித்ஷா கூட்டணி விரிவாக்கம், தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் தமிழகம் வரும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் கூற வாய்ப்பு உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    • இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
    • ‘கொம்புசீவி’ கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.

    இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.

    இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது. அதனை தொடர்ந்து 'கொம்புசீவி' கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், 'கொம்புசீவி' படம் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக வருகிற 19-ந்தேதி வெளியாகும் என டிரெய்லரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. டிரெய்லரில் கிராமத்திற்காக போராடும் சரத்குமார், சண்முக பாண்டியனை சுற்றி வரும் கதையில் ஆக்ஷன், காதல், நகைச்சுவை கலந்து உருவாகி உள்ளது. 



    • இந்த அம்சங்களுக்கான அனைத்து அமைப்புகளும் வண்ண TFT டிஸ்ப்ளேவில் காட்டப்படும் மெனுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
    • ஹார்டுவேரை பொருத்தவரை ஷோவா BFF ஃபோர்க்குகள், ஷோவா BFRC மோனோஷாக் ஆகியவை அடங்கும்.

    கவாசாகி இந்தியா நிறுவனம் 2026 நின்ஜா ZX-10R பைக்கின் ஆன்-ரோடு விலையில் ரூ.2.5 லட்சம் தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் இந்த பைக்கின் விலை ரூ.21.10 லட்சமாக குறைகிறது. இது குறுகிய கால சலுகை என்பதால் வருகிற 31ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.

    இந்தியாவில் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் லிட்டர்-கிளாஸ் ஸ்போர்ட் பைக்காக நின்ஜா ZX-10R உள்ளது. விலை அடிப்படையில் இதற்கு மிக அருகில் பிஎம்டபிள்யூ S1000RR உள்ளது. இதன் விலை ரூ. 23.60 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. மேற்கூறிய ஆண்டு இறுதி தள்ளுபடி 10R-க்கு அதிக கவனத்தை ஈர்க்க உதவும்.

    பைக்கின் விவரங்களை பொருத்தவரை, நின்ஜா ZX-10R மாடலில் 998cc, இன்லைன்-ஃபோர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 193.1bhp பவர், 112Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் அதன் டிராக்டிபிலிட்டி மற்றும் டாப்-எண்ட் ரஷ் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.

    அம்சங்களைப் பொறுத்தவரை, பைக்கில் ரைடு மோட்கள், டூயல்-சேனல் ABS, குரூயிஸ் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவை உள்ளன. இந்த அம்சங்களுக்கான அனைத்து அமைப்புகளும் வண்ண TFT டிஸ்ப்ளேவில் காட்டப்படும் மெனுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.



    ஹார்டுவேரை பொருத்தவரை ஷோவா BFF ஃபோர்க்குகள், ஷோவா BFRC மோனோஷாக் ஆகியவை அடங்கும். பிரேக்கிங் கடமைகள் முன்புறத்தில் இரட்டை டிஸ்க்குகள் மற்றும் கவாசாகியின் ABS அமைப்புடன் பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் 2026 கவாசாகி நின்ஜா ZX-10R, டுகாட்டி பனிகேல் V4, பிஎம்டபிள்யூ S1000RR மற்றும் அப்ரிலியா RSV1100 ஆகிய மாடல்களுக்கு எதிராக போட்டியிடுகிறது.

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த அதே நேரத்தில், வெள்ளி விலையும் அசூர வேகத்தில் அதிகரித்தது. கடந்த அக்டோபர் மாதம் வரை 'கிடுகிடு'வென உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை கடந்த மாதம் சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை இருக்கிறது.

    அந்த வகையில் தங்கம் விலை ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் அப்படியே இருந்து வருகிறது. வெள்ளி விலையோ, 'டாப் கியர்' போட்டு பறக்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் அதிகரித்திருந்த சூழலில், நேற்றும் விலை உயர்ந்து காணப்பட்டதை பார்க்க முடிந்தது.

    நேற்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இது, இதுவரை இல்லாத புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனதுதான் உச்சபட்சமாக இருந்தது. தற்போது அதனை தாண்டி, வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

    வெள்ளி ஆபரண உலோகமாக மட்டுமல்லாமல், தொழில்துறை தேவை சார்ந்த உலோகமாக அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து வருகிறது.

    தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.98 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.215-க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,400

    10-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,240

    09-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000

    08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-12-2025- ஒரு கிராம் ரூ.209

    10-12-2025- ஒரு கிராம் ரூ.207

    09-12-2025- ஒரு கிராம் ரூ.199

    08-12-2025- ஒரு கிராம் ரூ.198

    07-12-2025- ஒரு கிராம் ரூ.199

    • அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது.
    • திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    புதுடெல்லி:

    நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளதாவது:-

    ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.

    அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.



    • கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ஆன்லைன் முன்பதிவு, உடனடி தரிசன முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • தற்போதைய சீசனில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவை நாடுவதில் ஆர்வம் காட்டினர்.

    மண்டல, மகர விளக்கு சீசன் காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தவொரு முன்பதிவும் இன்றி நேரடியாக வந்து பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    தற்போது கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ஆன்லைன் முன்பதிவு, உடனடி தரிசன முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சீசனில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவை நாடுவதில் ஆர்வம் காட்டினர். எனவே சீசனில் தொடக்கத்திலேயே பெரும்பாலான நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்தது.

    மண்டல பூஜைக்கு பிறகு நடைபெற உள்ள மகரவிளக்கு சீசனுக்கான முன்பதிவும் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை முன்பதிவு முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது.
    • சுவாமியின் இடதுபுறத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

    கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனாய சங்கமேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஒரு சமயம் அசுரன் ஒருவன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, சாகா வரம் பெற்றான். தேவலோகத்தை ஆள வேண்டும் என்ற ஆசை கொண்ட அந்த அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். இதனால் வருந்திய தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் அவர்களிடம், சிவபெருமானை வேண்டும்படி கூறினார். அதன்படி, சங்கு புஷ்பங்கள் நிறைந்த இப்பகுதியில் தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அசுரனை அழிக்குமாறு வேண்டினர். அதன்பின், சிவபெருமான் அசுரனை வதம் செய்ததாக கூறப்படுகிறது.

    சிவபக்தனான கரிகால் சோழ மன்னன், குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை வழிபட்டு வந்தான். ஒரு நாள், சிவன் அற்புதம் செய்த தலங்களில் சிவாலயங்கள் கட்டுவதாக கனவு கண்டான். இது குறித்து தனது குருவிடமும், ஆன்றோரிடமும் ஆலோசனைக் கேட்டான். அதன்படி, சிவன் அற்புதம் செய்த இடங்களில் கோவில்களை எழுப்பினான். அவ்வாறு அவன் கட்டிய சிவாலயங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.

    கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது, இறைவன் நம் தலைவிதியை மாற்றும் வல்லமை உள்ளவர் என்பதை குறிப்பதாக உள்ளது. மரணத்தருவாயில் உள்ள இளைஞர்கள் இங்கு வந்து வழிபட்டால், அவர்களது தலைவிதி மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    சுவாமியின் இடதுபுறத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கோவில் சுற்றுப் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், நீலகண்டேஸ்வரர், சூரிய பகவான், காப்பு விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர். 63 நாயன்மார்களின் திருவுருவ சிலைகளும் உள்ளன. ஒரு தூணில் மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

    மூலவர் மற்றும் அம்பாளின் சன்னிதிக்கு இடையில் சோமாஸ்கந்தராக உள்ள முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் கோலத்தில் காணப்படுகிறார். இவரது ஆறு முகங்களும் நேராக நோக்கிய நிலையில், 12 கைகளிலும் ஆயுதங்களை தாங்கியபடி காட்சி தருகிறார். கோவில் அமைப்பை பார்க்கும்போது, முருகனே மூலவராக அருள்பாலிக்கும் வகையில் உள்ளது.

    கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் ஈஸ்வரன் கோவில் வீதியில் இக்கோவில் அமைந்துள்ளது.

    ×