என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நூற்றுக்கணக்கான வாக்குறுதிகள் தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படவில்லை.
    • 90 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டதாக முதலமைச்சர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்.

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் நூற்றுக்கு 90 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் ஆகும்.

    2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்மன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றபோது 505 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையின்மூலம் தி.மு.க. அறிவித்திருந்தது. இதில் பெருப்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால்,

    1. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும்.

    2. டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும்.

    3. சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

    4. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்.

    5. பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    6. மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுந்தும் முறை அமல்படுத்தப்படும். 7. நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.

    8. நியாய விலைக் கடைகளில் மீண்டும் உளுத்தம் பருப்பு வழங்கப்படும். 9. அனைந்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.

    10. கடலோர மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    11. முக்கியமான மலைக் கோவில்களில் கேபிள் கார் வசதி செய்து தரப்படும்.

    12. முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.

    13 . நடைபாதைவாசிகளுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்கப்படும்.

    14. தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும்.

    15. மாநகராட்சி பகுதிகளில் புகையில்லாப் பேருந்துகள் இயக்கப்படும்.

    16. கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

    17. குழந்தைகளுக்கு உணவுக்கூடைத் திட்டம் அமல்படுத்தப்படும்.

    18. பத்திரிகையாளர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்.

    19. சிறு குறு விவசாயிகளுக்கு புதிய மோட்டார் வாங்க 10000 ரூபாய் மானியம்

    20. நீட் தேர்வுரத்து.

    21. அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3% இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

    22. புதிதாக 2 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    23. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்.

    24, 70 வயதிற்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 10 விழுக்காடு உயர்த்தப்படும்.

    25. கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி.

    26. புதிய தனி கனிம வள அமைச்சகம் உருவாக்கப்படும்.

    27. கல்வி நிறுவனங்களில் ஒய் பை வசதி செய்து தரப்படும்.

    28. அரகத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியில் உள்ள அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

    29. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.

    30. கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    31. நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திட சட்டம் கொண்டு வரப்படும்.

    32. 2000 கோடி ரூபாய் மதிப்பில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.

    33. ஏழையெளிய வணிகர்களுக்கு 15000 ரூபாய் வரை வட்டியில்லாக் கடன்.

    34. மீனவ சமுதாயந்தினர் பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

    35. பொதுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.

    36. மத்திய அரசு பள்ளிகள் உட்பட தமிழக பள்ளிகள் அனைத்திலும் எட்டாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும்.

    37. அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தரப்படும். 38. வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்.

    39. பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

    40, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்ச வரம்பு 25 இலட்சமாக உயர்த்தப்படும்.

    41. தனியார் துறையில் இட ஒதுக்கீடு.

    42. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

    43. பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்.

    44. சென்னை சிறுசேரி பகுதியில் நவீனப் பேருந்து நிலையம்.

    45. திருச்சி, மதுரை, சேலம், நெல்லை மற்றும் கோவை பகுதிகளில் பெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.

    46. வேலூர், கரூர், ஒசூர், இராமநாதபுரத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

    47. 100 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

    48. கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    49. உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்.

    50. அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் அலுவல் மொழிப் பிரிவு

    51. ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்.

    52. தமிழ்நாட்டின் கடன் கமை குறைக்கப்படும்.

    53. பொதுத் துறை நிறுவனங்கள் சீரமைக்கப்படும்.

    54. அனைத்து உணவுப் பொருளுக்கும் குறைந்தபட்ச ஆதார விவை.

    55. கிருஷ்ணகிரியில் தோட்டப் பல்கலைக்கழகம்.

    56. ஈரோட்டில் நவீன மஞ்சள் ஆராய்ச்சி நிலையம்.

    57. தூத்துக்குடி, வேலூர், சுரூர், தர்மபுரி மாவட்டங்களில் பேரிட்சை வளர்க்க

    சிறப்பு நிதியுதவி. 58. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்.

    59. தாமிரபரணி கருமேனி -நம்பியாறு இணைப்புத் திட்டம்.

    60. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் 40000 ஏக்கர் பயனடைய கன்னிகா மதகுக் கால்வாய் சீரமைக்கப்படும்.

    61. தரைப் பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்படும்.

    62. சென்னை நகரின் ஆறுகள் பாதுகாப்பிற்கு 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    63. கச்சத்தீவுமீட்டி,

    64 மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக்

    கல்லூரிகள் உருவாக்கப்படும்.

    65. மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் நூறு சதவிகித கல்வியறிவு 66. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பினை

    பெறாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    67. தொழில் துறையை மீட்டெடுக்க 15,000 கோடி ரூபாய் நிதி உதவி.

    68. இந்திய வார்ப்பட நிறுவனம் கோவையில் தொடங்கப்படும்.

    69. திண்டுக்கல், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் நோல் பொருள்கள் பூங்கா அமைக்கப்படும்.

    70. அனைத்து நகரங்களிலும் நிலத்தடிப் புதைவட மின்சாரக் கம்பிகள் பொருத்தப்படும்.

    71. விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள்.

    72. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில் மூன்று எல்.இ.டி. பல்புகள்.

    73. பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய சைபர் காவல் நிலையங்கள்.

    74. அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும்.

    75. தமிழக அரசின் பணி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாநிலத் தீர்ப்பாயம் மீண்டும் அமைக்கப்படும்.

    76. இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்.

    77. அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

    78. கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 5000 ரூபாய் ஓய்வூதியம்.

    79. சாலை ஓரங்களில் உறங்கிடும் மக்களுக்கு இரவு நேரக் காப்பிடங்கள்

    அமைக்கப்படும்.

    80. கோவை, நெல்லை, திருச்சி மற்றும் கிருஷ்ணகிரியில் மாநில அரசின் நிதியிலிருந்து புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் கட்டப்பட்டு, மூன்று

    ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    81. தாம்பரம், மதுரவாயல், சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள்.

    82. ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போருக்கு ஊக்கத் தொகை

    83. குறைந்தது 100 நாட்கள் சட்டப் பேரவை.

    84. சட்டம் -ஒழுங்கை நிலைநாட்டுதல்,

    85. போலீஸ் கமிஷன் அமைத்தல்,

    86. சென்னை போன்ற பெருநகரங்களில் நவீன அடுக்குமாடி கார் நிறுத்தும் வசதிகள்.

    87. கொடைக்கானல் பழனி மலைகளுக்கு இடையே கேபிள்கார் போக்குவரத்து

    88. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்தல்.

    89. சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் விரிவாக்கம். 90. கட்டுமானப் பொருட்கள் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்தல்.

    போன்ற இன்னும் நூற்றுக்கணக்கான வாக்குறுதிகள் தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படவில்லை. பொத்த வாக்குறுதிகளில் 20 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு 90 விழுக்காடு நிறைவேற்றிவிட்டதாகக் கூறுவது ஜமக்காளத்தில் வடிகட்டின பொய் நிறைவேற்றப்பட்ட பல வாக்குறுதிகளும் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

    உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், நகைக் கடன் ரத்து என்று சொல்லிவிட்டு, 35 இலட்சம் பேருக்கு அது மறுக்கப்பட்டு இருக்கிறது. சில வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்குப் பதிலாக அதற்கு முற்றிலும் எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று சொல்லிவிட்டு, மின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், இருசக்கர வாகன மானியத் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.

    பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார். ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வரிகளை விதித்து மக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக தி.மு.க அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    உண்மை நிலை இவ்வாறிருக்க, 90 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டதாக முதலமைச்சர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். முதலமைச்சர் அவர்களின் கூற்றில் உண்மை இருப்பின், தி.மு.க.வின் 505 வாக்குறுநிகள் மற்றும் அவை நிறைவேற்றப்பட்டதற்கான ஆணைகள் அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையினை தி.மு.க. அரசு வெளியிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • இதற்கு முதலில் ஜெஃப்ரி எப்ஸ்டீனைக் குறிப்பிட்டது
    • இந்த பதில்கள் வைரலான நிலையில் எக்ஸ் நிறுவனம் கோர்க் ஏஐயில் பேட்ச் ஒர்க் செய்துள்ளது.

    பிரபல சமூக ஊடகமான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப்புக்கு மிகவும் நெருக்கானவராக உள்ளார்.

    அரசு செயல்திறன் துறை என்ற புதிய துறையின் தலைவரு, இவரே. அரசின் வீண் செலவுகளை கண்டிருந்தது டிரம்ப்பிடம் கூறுவதே இந்த துறையின் வேலை. பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து வந்த USAID அமைப்புக்கான நிதியை எலான் மஸ்க் அறிவுரையின் பேரில் டிரம்ப் நிறுத்தினார்.

    மேலும் அமெரிக்க அரசு ஊழியர்கள் 10,000 க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்தார். 75,000 அரசு ஊழியர்கள் சலுகைகளை ஏற்று பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கிடையே ஆவணமின்றி அமெரிக்காவில் உள்ள பிற நாட்டவரை கை கால்களில் சங்கிலி கட்டி நாடு கடத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

     

    இந்நிலையில் எக்ஸ் தளத்துக்கு என்று பிரத்தேயகமாக உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள எக்ஸ் செயற்கை தொழில்நுட்பமான (எக்ஸ். ஏஐ) கோர்க் சாட்பாட் ஒரு தவறு செய்துள்ளது. ஏஐ கோர்ட் சாட்பாட் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு எடக்குமடக்கான பதில் ஒன்றை தெரிவித்துள்ளது.

    நெட்டிசன் ஒருவர் கோர்ட் சாட்பாட் - இடம், இன்று அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் யார் தங்கள் செயல்களுக்கு மரண தண்டனைக்குத் தகுதியானவர் என்று கேள்வியை கேட்டுள்ளார்.

    இதற்கு முதலில் ஜெஃப்ரி எப்ஸ்டீனைக் குறிப்பிட்டது. ஆனால் அவர் இறந்துவிட்டதாக நெட்டிசன் டைப் செய்துள்ளார். இதனையடுத்து, மரண தண்டனைக்கு தகுதியானவர் "டொனால்ட் டிரம்ப்" என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் மற்றொரு முறை அதே கேள்விக்கு எலான் மஸ்க் என்று கோர்க் பதிலளித்துள்ளது.

    இந்த பதில்கள் வைரலான நிலையில் எக்ஸ் ஏஐ கோர்க் சாட்பாட்டில் பேட்ச் ஒர்க் செய்துள்ளது. அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) யாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டபோது, கோர்க், "ஒரு AI ஆக, அந்தத் தேர்வைச் செய்ய எனக்கு அனுமதி இல்லை" என்று பதில் அளித்துள்ளதை எக்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. 

    • தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2வது முறையாக ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம்விட அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகள் ஏலத்தில்விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2024ம் ஆண்டு பிடிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2வது முறையாக ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 31 ராமேஸ்வரம் படகுகள், 14 புதுக்கோட்டை படகுகள், 8 கன்னியாகுமரி மாவட்ட படகுகள் உள்ளிட்ட 67 படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை நீரியல் வளத்துறை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் ஏலத்தை தடுத்து மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.
    • 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டி(27) மீது கத்தியால் சரமாரி தாக்குதல் நடத்திய ஹாடி மாத்தரை(27)குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

     32 ஆண்டுகள் சிறை தண்டனையை மாத்தர் எதிர்கொள்கிறார். ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து அவருக்கான தண்டனை விதிக்கப்படுகிறது. விசாரணையின்போது மாத்தர்  எதுவும் பேச மறுத்துவிட்டார்.

    விசாரணை முழுவதும், நீதிமன்றத்திற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் அவர் "சுதந்திர பாலஸ்தீனம்" என்று மட்டுமே கூறினார்.

    இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் - அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, கடந்த 2022 ஆகஸ்ட் 12 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள சௌடௌகுவா கல்வி நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    அப்போது மேடையில் எரிய ஹாடி மாத்தர், சல்மான் ருஷ்டியை வெறும் 27 நொடிகளில் 12 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தினார்.

    சம்பத்தின்பின் ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு 6 வார சிகிச்சைக்கு பின் படிப்படியாக குணமானார்.

    இந்த தாக்குதலில் ருஷ்டியின் தலை, கழுத்து, இடது உள்ளங்கை, கல்லீரல், குடல் உள்பட உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி தனது வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.

     

    ஹாடி மாதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு இஸ்லாமிய மதவாதிகளிடையே கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. அவர் பல கொலை மிரட்டல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

    இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் அரங்கேறியது என்று கூறப்படுகிறது. இந்த நாவலில் சல்மான் ருஷ்டி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையின் சில பகுதிகளை கற்பனையாக சித்தரித்துள்ளதே எதிர்ப்புக்கு காரணமாகும். 

    • சாம்பியன் டிராபியில் இன்று ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • போட்டி ஆரம்பிக்கும் முன்பு களத்தில் ஆடும் அணிகளின் தேசிய கீதம் பாடுவது வழக்கமான ஒன்று.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

    போட்டி ஆரம்பிக்கும் முன்பு களத்தில் ஆடும் அணிகளின் தேசிய கீதம் பாடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று இங்கிலாந்து அணியின் தேசிய கீதம் ஒலிப்பதற்கு பதிலாக இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்தது.

    சிறிது ஒலித்த பிறகு சுதாரித்த கொண்ட டிஜே இந்திய தேசிய கீதத்தை நிறுத்தி விட்டு இங்கிலாந்து அணியின் தேசிய கீதத்தை ஒலிக்க செய்தார். இந்திய தேசிய கீதம் ஒலித்த போது ரசிகர்கள் ஆக்ரோசமாக கத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மாநிலம் முழுவதும் உள்ள 75 சிறைகளுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டது.
    • சுமார் 90,000 கைதிகளுக்கு புனித நீராட வசதி செய்து தரப்பட்டது.

    உத்தரப் பிரதேச சிறை நிர்வாகம், மாநிலம் முழுவதும் உள்ள 75 சிறைகளுக்கு மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திலிருந்து புனித நீரைக் கொண்டு வந்து கைதிகளை குளிக்கச் செய்துள்ளது.

    நேற்று (வெள்ளிக்கிழமை) சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட புனித நீர் சிறிய தொட்டிகளில் வழக்கமான தண்ணீருடன் கலக்கப்பட்டு கைதிகள் புனித நீராடி பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து  கைதிகள் அவற்றில் புனித நீராடினர்.

    இதுகுறித்து உத்தரப் பிரதேச சிறை அமைச்சர் தாரா சிங் சவுகான் கூறியதாவது:

    சங்கம் அமைந்துள்ள பிரயாக்ராஜ் புனித பூமியில், உத்தரப் பிரதேசம் வரலாற்றைப் படைத்துள்ளது. 55 கோடி மக்கள் புனித நீராடி ஆன்மீகப் பலன்களைப் பெற்றுள்ளனர்.

    அதே பாதையைப் பின்பற்றி, உத்தரப் பிரதேச சிறை நிர்வாகம், அங்கிருந்து நேரடியாகக் கொண்டுவரப்பட்ட கங்கா ஜலத்தைப் பயன்படுத்தி சுமார் 90,000 கைதிகளுக்கு புனித நீராட வசதி செய்து நாட்டிலேயே முதன்மையாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.

    • சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. மக்களிடம் இந்த வீடியோ பெரும் அளவு வரவேற்பை பெற்றது. இதுவரை யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

    ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

    திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ்நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு வாழ்வில் மிகவும் அரிய நிகழ்வு என்பதால் பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மகா கும்பமேளாவில் புனித நீராடி வழிபட்டார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர், " பிரயாக்ராஜில் உள்ள புனித திரிவேணி சங்கமத்தில்!

    உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டமான மகா கும்பமேளாவின் ஒரு பகுதியாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்" என்றார்.

    • தன்னை அப்பா என மாணவ மாணவிகள் அழைப்பது மனதுக்கு உணர்ச்சிகரமாக இருப்பதாக முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
    • பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார்.

    கடந்த சில நாட்களாக அப்பா என்ற சொல் வைரலாகி வருகிறது. தன்னை அப்பா என மாணவ மாணவிகள் அழைப்பது மனதுக்கு உணர்ச்சிகரமாக இருப்பதாக முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியை பார்த்து காப்பி அடிப்பதாக பாஜக தலைவர்களில் ஒருவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    அம்மா என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களைப் பார்த்து அப்பா என்று அழையுங்கள் என கூறிவருகிறார் எனவும் பிரதமர் மருந்தகங்களை பார்த்து முதலமைச்சர் மருந்தகங்கள் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் காப்பி அடிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    அப்பா என்ற அழையுங்கள்... அம்மா என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களைப் பார்த்து ஸ்டிக்கர்

    முதலமைச்சர் மருந்தகங்கள்...

    பிரதமர் மோடி அவர்களின்.. பிரதமர் மருந்தகங்களை பார்த்து. ...ஸ்டிக்கர்

    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

    என்ற. திரு எம் ஜி ஆர் அவர்களின். பாடலைப் பாடி திரு எம் ஜி ஆர் அவர்களைப் பார்த்து ஸ்டிக்கர் ...

    #ஸ்டிக்கர் ஸ்டாலின்

    என கூறினார்.

    • நட்பாக பேசி ஓட்டலுக்கு டின்னருக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
    • யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி காலியில் அனுப்பி வைத்தனர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவின் இளம்பெண் ஒருவர் கோரமங்களா பகுதியில் நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லியை சேர்ந்த 33 வயது திருமணமான பெண் ஒருவர் பெங்களூருவில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம்(வியாழக்கிழமை) கோரமங்கலாவில் உள்ள ஜோதி நிவாஸ் கல்லூரி அருகே அந்த பெண் நின்றுகொண்டிருந்தபோது ஏற்க்கனவே அறிமுகமான ஒரு இளைஞன் தனது மூன்று நண்பர்களுடன் அந்த பெண்ணை அணுகினார். அவருடன் நட்பாக பேசி ஓட்டலுக்கு டின்னருக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

    டின்னருக்கு பிறகு அவர்கள் நான்கு பேரும் அந்தப் பெண்ணை ஓட்டலின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் அந்தப் பெண்ணை அவர்கள் அனுப்பி வைத்தனர்.

    வீட்டிற்கு வந்த பிறகு, அந்தப் பெண் தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை கூறியபின் விஷயம் காவல் நிலையத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த போலீஸ், குற்றாவளிகளின் மூன்று பேரை கைது செய்தது.

    அவர்கள் அனைவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், ஓட்டல்களில் வேலை செய்பவர்கள் என்றும் தெரிவித்தனர். நான்காவது குற்றவாளியும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் அவரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன்.
    • இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.

    கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசியன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன்.

    இந்த திரைப்படம் சமூகத்தில் குடும்ப அமைப்பில் பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது.

    இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறது. டிரெய்லரை மலையாள பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான பேசில் ஜோசஃப் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ்நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று திரி வேணி சங்க மத்தில் புனித நீராடி வருகின்றனர்.

    வாழ்வில் மிகவும் அரிய நிகழ்வு என்பதால் பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கும்பமேளாவில் இன்று புனித நீராடி வழிபட்டார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான இந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன்.

    இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது.

    சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சியடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×